உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெர்சல்பைடு (Persulfide) என்பது R-S-S-H என்ற வேதி வினைக்குழுவைக் குறிக்கிறது.[1] இரும்பு-கந்தக புரதங்களின் உயிரிணைவாக்க வினையில் இடைநிலை வேதிப்பொருளாக பெர்சல்பைடுகள் கிடைக்கின்றன. சமிக்ஞை மூலக்கூறான ஐதரசன் சல்பைடு தயாரிப்பில் முன்னோடிச் சேர்மமாகவும் பெர்சல்பைடு பயன்படுகிறது.

பெயரிடல்

[தொகு]

கரிமக் கந்தக சேர்மங்களுக்குப் பயன்படுத்தப்படும் பெயரிடல் பெரும்பாலும் முறைமையற்றது. சில நேரங்களில் பெர்சல்பைடுகள் ஐதரோசல்பைடுகள் என்று அழைக்கப்படுகின்றன. R-S-S-R குழுவுடன் இணைந்துள்ள இருசல்பைடுகளின் குழப்பத்தைத் தவிர்க்க, இருசல்பைடு பிணைப்பின் ஒரு முனையில் H இருகக வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.

பண்புகள்

[தொகு]

தயோல்களுடன் (R-S-H) ஒப்பிடும்போது, ​​பெர்சல்பைடுகள் அசாதாரணமானவையாகும். தனிம கந்தகத்தின் இழப்பைப் பொறுத்து அவை வெப்ப இயக்கவியல் ரீதியாக நிலையற்றவை:

RSSH → RSH + 1/8 S8

ஆனால் பெர்சல்பைடுகள் இயக்கவியல் ரீதியாக நிலையானவை.

S-H பிணைப்பு தயோல்களை விட அதிக அமிலத்தன்மையும் உடையக்கூடிய தன்மையும் கொண்டது. இதை ஒரு பொதுவான பெர்சல்பைடின் பிணைப்பு விலகல் ஆற்றலில் காணலாம். வழக்கமான தயோலை விட 22 கிலோகலோரி/மோல் மதிப்பு பிணைப்பு விலகல் ஆற்றல் கொண்டு பலவீனமானதாக இருக்கும். தயோகளின் 7.5 என்ற pKa மதிப்புடன் ஒப்பிடும்போது பெர்சல்பைடுகளின் pKa 6.2 மட்டுமேயாகும். எனவே, நடுநிலை pH இல் அயனியாக்கம் செய்யப்பட்ட வடிவத்தில் பெர்சல்பைடுகள் முக்கியமானவையாக உள்ளன.இந்த விளைவு RSS· உருபுகளின் நிலைத்தன்மைக்குக் காரணம் ஆகிறது.[1]

கட்டமைப்பும் வினைகளும்

[தொகு]

டிரைடில் பெர்சல்பைடின் அமைப்பு எக்சுகதிர் படிகவியல் நுட்பம் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. S-S பிணைப்பின் பிணைப்பு நீளம் 204 பைக்கோமீட்டர்களாக உள்ளது. C-S-S-H பிணைப்பின் இருமுகக் கோணம் 82° ஆகும். இந்த அளவுருக்கள் விதிவிலக்கானவை.[2] (C6H5)3CSSH ஒரு கந்தக மூலமாக செயல்படுகிறது. முப்பீனைல்பாசுபீனுடன் இது வினைபுரிந்து முப்பீனைல்பாசுபீன் சல்பைடையும் முப்பீனைல்மெத்தேன்தயோலையும் கொடுக்கிறது.

(C6H5)3CSSH + P(C6H5)3 → (C6H5)3CSH + SP(C6H5)3

உயிரிணைவாக்கம் மற்றும் வினையூக்கம்

[தொகு]

துணைக்காரணிகளான 4-தயோயூரிடின் மற்றும் தயமீன் ஆகியவை பெர்சல்பைடுகளின் செயலால் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கார்பன் டைசல்பைடு [3] மற்றும் மெர்கேப்டோபைருவேட்டு ஆகியவற்றின் மக்கும் தன்மையில் பெர்சல்பைடுகள் இடைநிலைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Park, Chung-Min; Weerasinghe, Laksiri; Day, Jacob J.; Fukuto, Jon M.; Xian, Ming (2015). "Persulfides: Current knowledge and challenges in chemistry and chemical biology". Molecular Biosystems 11 (7): 1775–1785. doi:10.1039/c5mb00216h. பப்மெட்:25969163. 
  2. Bailey, T. Spencer; Zakharov, Lev N.; Pluth, Michael D. (2014). "Understanding Hydrogen Sulfide Storage: Probing Conditions for Sulfide Release from Hydrodisulfides". Journal of the American Chemical Society 136 (30): 10573–10576. doi:10.1021/ja505371z. பப்மெட்:25010540. 
  3. Catignani, George L., Robert A. Neal (1975). "Evidence for the formation of a protein bound hydrodisulfide resulting from the microsomal mixed function oxidase catalyzed desulfuration of carbon disulfide". Biochemical and Biophysical Research Communications 65 (2): 629–636. doi:10.1016/S0006-291X(75)80193-8. பப்மெட்:238535. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்சல்பைடு&oldid=3442206" இலிருந்து மீள்விக்கப்பட்டது