வைனைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைனைல் தொழிற்பாட்டுக் கூட்டத்தின் வேதிக் கட்டமைப்பு

வேதியியலில், வைனைல் அல்லது வினைல் (Vinyl) அல்லது எத்தீனைல் (Ethenyl)[1] என்பது −CH=CH2 என்ற கட்டமைப்பைக் கொண்ட ஓர் அற்கீனைல் தொழிற்பாட்டுக் கூட்டம் ஆகும்.[2] எத்தீன் மூலக்கூற்றிலிருந்து (H2C=CH2) ஒரு நீரிய அணு அகற்றப்பட, வைனைல் தொழிற்பாட்டுக் கூட்டம் கிடைப்பதாகக் கருதலாம்.[3]

தொழின்முறை முக்கியத்துவம் பெற்ற வைனைல் சேர்மமான பொலிவைனைல் குளோரைட்டும் வைனைல் என்றே பொதுவாக அழைக்கப்படுகின்றது.[4]

பொலிவைனைல் குளோரைட்டால் ஆக்கப்பட்ட சதுரங்கப்பலகை

வைனைல் பல்பகுதியங்கள்[தொகு]

ஒருபகுதியம் பல்பகுதியம்
வைனைல் குளோரைடு பொலிவைனைல் குளோரைடு[5]
வைனைல் புளோரைடு பொலிவைனைல் புளோரைடு [6]
வைனைல் அசற்றேற்று பொலிவைனைல் அசற்றேற்று [7]
தைரீன் பொலித்தைரீன்[5]

தாக்கங்கள்[தொகு]

பொதுவாக, வைனைல் ஏலைடுகளில் கருநாட்டப் பதிலீட்டுத் தாக்கங்கள் நடைபெறுவதில்லை.[8] ஆயினும், கிறினாட்டின் வினைப்பொருளுடன் வைனைல் ஏலைடுகள் தாக்கமடையும்.[9]

இதனையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Preferred IUPAC Names Chapter 5" (PDF). IUPAC. 7 அக்டோபர் 2004. பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2015.
  2. "Vinyl compound". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Vinyl group". UCLA Department of Chemistry & Biochemistry. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. Nikolas Davies & Erkki Jokiniemi (2012). Architect's Illustrated Pocket Dictionary. Routledge. பக். 529. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781136444074. 
  5. 5.0 5.1 க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. பக். 269. 
  6. "Polyvinyl fluoride (PVF)". Encyclopædia Britannica. 2 பெப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2015. {{cite web}}: Check date values in: |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "Polyvinyl acetate (PVAc)". Encyclopædia Britannica. 28 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2015. {{cite web}}: Check date values in: |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  8. க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. பக். 134. 
  9. Alan R. Katritzky, Otto Meth-Cohn, Stanley M. Roberts & Charles Wayne Rees (1995). Comprehensive Organic Functional Group Transformations, Volume 1. Elsevier. பக். 469. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780080406046. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைனைல்&oldid=3578328" இலிருந்து மீள்விக்கப்பட்டது