பென்சோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பென்சோயில் வேதி வினைக்குழு.

கரிம வேதியியலில் பென்சோயில் (benzoyl) என்பது C6H5CO-.[1][2] என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு வேதிவினைக்குழுவாகும். பென்சோயில் என்ற வேதிவினைக்குழுவும் பென்சைல் என்ற வேதிவினைக்குழுவும் வெவ்வேறானவைகள் ஆகும். பென்சைல் குழுவின் மூலக்கூறு வாய்ப்பாடு C6H5CH2 ஆகும்.

பென்சோயில் குழுவின் மூலங்கள்[தொகு]

பென்சோயில் குளோரைடுதான் பென்சோயில் வேதிவினைக்குழுவிற்கான பிரதானமான ஆதாரமாகும். இச்சேர்மத்தின் உதவியால்தான் பென்சோயில் கீட்டோன்கள், பென்சோயில் அமைடுகள் அல்லது பென்சைமைடுகள், பென்சோயேட்டு எசுத்தர்கள் முதலியன தயாரிக்கப்படுகின்றன. இயற்கையாகத் தோன்றும் பல பென்சோயில் சேர்மங்களுக்கு தையோவெசுத்தர் பென்சோயில் இணைநொதிகள் ஆதாரங்களாக உள்ளன. கதிர்வீச்சுக்குள்ளாகும் பென்சில்(கரிமச்சேர்மம்) சேர்மங்கள் பென்சோயில் தனியுறுப்புகளைத் தருகின்றன. அவை PhCO என்ற வாய்ப்பாட்டால் குறிப்பிடப்படுகின்றன.

பென்சோயில் சேர்மங்கள்[தொகு]

பல கீட்டோன்களில் பென்சோயில் குழுக்கள் காணப்படுகின்றன. அவற்றினுடைய பொது வாய்ப்பாடு C6H5CO-R, என குறிப்பிடப்படுகிறது. இதற்கு முக்கியமான உதாரணமாக பென்சோபீனோன் சேர்மத்தைக் கூறலாம்.

கரிம வேதியியலில் பென்சோயில் எசுத்தர்களும் பென்சோயில் அமைடுகளும் பரவலாகவே காணப்படுகின்றன. கரிமத்தொகுப்பு வினைகளில் பென்சோயில் எசுத்தர்கள் பாதுகாப்புக் குழுக்களாகச் செயல்படுகின்றன[3] நீர்த்த காரக்கரைசலை நீராற்பகுப்பு செய்வதன் மூலம் இவை எளிதாக நீக்கப்படுகின்றன. பென்சோயில்-β-D- குளுக்கோசைடு என்ற இயற்கை பென்சோயில் சேர்மம் பெரணி வகைச் செடிகளில் காணப்படுவதாக அறியப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Maki, Takao; Takeda, Kazuo (2000). "Benzoic Acid and Derivatives". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. doi:10.1002/14356007.a03_555. ISBN 3527306730. .
  2. Morris, Christopher G. (1992). Academic Press Dictionary of Science and Technology. Gulf Professional Publishing. பக். 246. ISBN 9780122004001. 
  3. Blackburn, G. Michael (2006). Nucleic Acids in Chemistry and Biology. Royal Society of Chemistry. பக். 145. ISBN 9780854046546. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்சோயில்&oldid=1888935" இருந்து மீள்விக்கப்பட்டது