பாசுபோனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாசுபோனசு அமிலத்தின் பொதுவான எசுத்தர்

பாசுபோனைட்டுகள் (Phosphonites) என்பவை P(OR)2R. என்ற வாய்ப்பாடு கொண்ட கரிமப்பாசுபரசு வகை சேர்மங்களாகும். சில பூச்சிக்கொல்லிகளில் காணப்படும் இச்சேர்மம் ஈந்தணைவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன [1].

தயாரிப்பு[தொகு]

பாசுபோனசு அமிலத்தினுடைய வழிப்பொருட்களாக இவையிருந்தாலும் [2] அத்தகைய முன்னோடிச் சேர்மங்களிலிருந்து இவை தயாரிக்கப்படுவதில்லை. மாறாக கரிமபாசுபினசு குளோரைடுகளை ஆல்ககால் பகுப்பு வினைக்கு உட்படுத்தினால் பாசுபோனைட்டு கிடைக்கிறது. உதாரணமாக, டைகுளோரோபீனைல்பாசுபீன் உடன் மெத்தனால் மற்றும் ஒரு காரம் சேர்த்து சூடாக்கினால் டைமெத்தில் பீனைல்பாசுபோனைட்டு உருவாகிறது.

Cl2PPh + 2 CH3OH → (CH3O)2PPh + 2 HCl

வினைகள்[தொகு]

பாசுபோனைட்டுகள் ஆக்சிசனேற்றமடைந்து பாசுபோனேட்டுகள் உருவாகின்றன.

2 P(OR)2R + O2 → 2 OP(OR)2R

ஒருபடித்தான் வினையூக்கிகளில் பாசுபோனைட்டுகள் ஈந்தனைவிகளாகப் பயன்படுகின்றன [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. D. E. C. Corbridge "Phosphorus: An Outline of its Chemistry, Biochemistry, and Technology" 5th Edition Elsevier: Amsterdam 1995. ISBN 0-444-89307-5.
  2. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "phosphonous acids". Compendium of Chemical Terminology Internet edition.
  3. T. V. (Babu) Rajanbabu “Phosphinite and Phosphonite Ligands” in Phosphorus(III) Ligands in Homogeneous Catalysis: Design and Synthesis Paul C. J. Kamer and Piet W. N. M. van Leeuwen, Eds., John Wiley & Sons 2012. எஆசு:10.1002/9781118299715.ch5
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுபோனைட்டு&oldid=3351732" இலிருந்து மீள்விக்கப்பட்டது