உள்ளடக்கத்துக்குச் செல்

கரிமப் பொருட்களைப் பெயரிடுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரிமப் பொருட்களைப் பெயரிடுதல் (Organic nomenclature) என்பது கரிம வேதியியல் சேர்மங்களின் பெயரிடும் முறையை விளக்குவதாகும். ஆங்கிலத்தில் கரிமங்களின் பெயர்களைப் பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் முறையாக வகுத்தளித்துள்ளது.[1] இக்கட்டுரையில் கரிமப்பொருட்களின் தமிழ்ப் பெயர்களையும், முறைப்படுத்தப்பட்ட ஆங்கிலப்பெயர்களையும் காணலாம்.

ஐயுபிஏசி முறை[தொகு]

பல்வேறு வகையான கரிமச் சேர்மங்களுக்கும் பொதுவான ஒரு பெயரிடுவதற்காக, அடிப்படை மற்றும் பயன்சார்ந்த வேதியியலின் பன்னாட்டு சங்கம் (ஐயுபிஏசி) சில விதிமுறைகளை வகுத்துள்ளது, எந்தவொரு மூலக்கூற்று அமைப்பு கொடுக்கப்பட்டாலும் அதற்கு ஒரேயொரு ஐயுபிஏசி பெயர் மட்டுமே சூட்டமுடியும் என்பது இப்பெயரிடும் முறையின் மிகமுக்கியமான மற்றும் சிறப்பான அம்சம் ஆகும். இம்முறையில் சூட்டப்பட்ட ஒரு பெயர் ஒரேயொரு மூலக்கூற்று அமைப்பையே குறித்துக்காட்டும்.

ஐயுபிஏசி முறையில் பெயரிடுகையில் ஒவ்வொரு கரிமச்சேர்மமும் பொதுவாக இரண்டு அல்லது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன.

அவை:-

1.முன்னொட்டு (துவக்கும் சொல்)
2.அடிப்படைச் சொல்
3.பின்னொட்டு (முடியும் சொல்)

முன்னொட்டு[தொகு]

அடிப்படைச் சொல்லுக்கு முன்னால் வரவேண்டிய பெயரின் பகுதி முன்னொட்டு எனப்படுகிறது. முன்னொட்டு இரண்டு வகைப்படும். அவை 1. முதலாம்நிலை முன்னொட்டு. 2. இரண்டாம் நிலை முன்னொட்டு என்பனவாகும்.. வளைய மற்றும் வலையமிலா என்பவை முதலாம்நிலை முன்னொட்டுகளாகும். இவை ஒரு சேர்மத்தின் அடிப்படைச் சொல்லுக்கு முன் சேர்த்து அழைக்கப்படுகின்றன.

அமைப்பு கார்பன் எண்ணிக்கை அடிப்படை சொல் முதலாம்நிலை பின்னொட்டு முதலாம்நிலை முன்னொட்டு ஐயுபிஏசி பெயர்
C3H6 அல்லது (CH2)3 3 புரப் யேன் வளைய வளைய புரப்பேன்
C4H8 4 பியூட் யேன் வளைய வளைய பியூட்டேன்

ஐயுபிஏசி விதிமுறையின்படி சில தொகுதிகள், வேதிவினைத் தொகுதிகளாகக் கருதப்படுவதில்லை. மாறாக இவை ’பதிலி’ கள் எனக் கருதப்படுகின்றன. இத்தகைய தொகுதி அல்லது பதிலிகளைக் குறித்துக் காட்ட இரண்டாம் நிலை முன்னொட்டு பயன்படுத்தப்படுகிறது. அவை:

வரிசை
எண்
பதிலி
தொகுதி
இரண்டாம்நிலை
முன்னொட்டு
1. F புளோரோ
2. Cl குளோரோ
3. Br புரோமோ
4. I அயோடோ
5. CH3 மெத்தில்
6. C2H5 எத்தில்
7. CH3-CH2-CH2 என் - புரப்பைல்
8. (CH3)2 CH- ஐசோ புரப்பைல்
9 -(CH3)3 C- டெர்ட் பியூட்டைல்
10. NO2 நைட்ரோ
11. NO நைட்ரசோ
12. N ≡ N டையசோ
13. OCH3 மீத்தாக்சி
14. NH2 அமினோ
15. OC2H5 ஈத்தாக்சி

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பதிலிகள் அல்லது பக்கச் சங்கிலிகள் அடிப்படைச் சொல்லுடன் முன்னொட்டாகச் சேர்க்கப்படுகின்றன.

அடிப்படைச் சொல்[தொகு]

கரிமச் சேர்மங்களின் அமைப்பில், கார்பன் அணுக்கள் நேர் வரிசை அல்லது தொடர் சங்கிலிகளாக இருக்கும் முறையினைக் குறிக்கப் பயன்படுவன அடிப்படை அலகுகளாகும். ஒன்று முதல் நான்கு வரை எண்ணிக்கை கொண்ட கார்பன் அணுக்களின் பெயர்களுக்கு சிறப்பு அடிப்படைச் சொற்களும் ஐந்துக்கு மேல் கார்பன் அணுக்களின் எண்ணிக்கை உடையனவற்றின் பெயருக்கு கிரேக்க அல்லது இலத்தீன் மொழியில்.எண்களைக் குறிக்கும் பெயரும் பயன்படுத்தப்படுகின்றன.

கார்பன்களின் எண்ணிக்கை அடிப்படைச் சொல்
C1 மெத்
C2 எத்
C3 புரப்
C4 பியூட்
C5 பெண்ட்
C6 எக்சா
C7 எப்டா
C8 ஆக்டா
C9 நோனா
C10 டெக்கா
C11 அண்டெக்கா
C12 டோடெக்கா
C13 டிரைடெக்கா
C14 டெட்ராடெக்கா
C15 பெண்டாடெக்கா
C16 எக்சாடெக்கா
C17 எப்டாடெக்கேன்
C18 ஆக்டாடெக்கேன்
C19 நோனாடெக்கேன்
C20 எய்கொசேன்
C21 எனெய்கொசேன்
C22 டோகொசேன்
C30 டிரையகொண்டேன்
C40 டெட்ராகொண்டேன்
C50 பெண்டாகொண்டேன்
C60 எக்சாகொண்டேன்
C710 எப்டாகொண்டேன்
C80 ஆக்டாகொண்டேன்
C90 நோனாகொண்டேன்
C100 எக்டேன்

பின்னொட்டு[தொகு]

பின்னொட்டுகள் இரண்டு வகைப்படும். அவை,

  • முதலாம் நிலை பின்னொட்டு
  • இரண்டாம் நிலை பின்னொட்டு

முதலாம் நிலை பின்னொட்டு[தொகு]

ஒரு சேர்மம் நிறைவுற்றதா அல்லது நிறைவுறாததா என்பதைக் குறிக்க அடிப்படைச் சொல்லுடன் சேர்க்கப்படும் சொற்கள் முதலாம் நிலை முன்னொட்டுகள் எனப்படும். சில முதலாம் நிலை முன்னொட்டுகள்,

வரிசை எண் கார்பன் சங்கிலித் தொடர் முதலாம் நிலை பின்னொட்டு பொதுப்பெயர்
1. நிறைவுற்றது யேன் ஆல்கேன்
2. நிறைவுறா- ஒரு இரட்டைப் பிணைப்பு ஈன் ஆல்கீன்
3. நிறைவுறா – ஒரு முப்பினைப்பு ஐன் ஆல்கைன்
4. நிறைவுறா – 2 இரட்டைப் பிணைப்புகள் டையீன் ஆல்காடையீன்
5. நிறைவுறா-3 இரட்டைப் பிணைப்புகள் டிரையீன் ஆல்காடிரையீன்
6. நிறைவுறா- 2 முப்பிணைப்புகள் டைஐன் ஆல்காடைஐன்

சில உதாரணங்கள்[தொகு]

வ.எண் அமைப்பு வாய்ப்பாடு கார்பன்கள் அடிப்படைச் சொல் முதலாம்நிலை பின்னொட்டு ஐயுபிஏசி பெயர்
1 CH3-CH2-CH2CH3 4 பியூட் யேன் பியூட்டேன்
2 CH3-CH=CH2 3 புரப் ஈன் புரப்பீன்
3 C H≡CH 2 எத் ஐன் ஈத்தேன்
4 CH2=CH-CH=CH2 4 பியூட்டா டையீன் பியூட்டாடையீன்*
5 HC ≡C-C ≡CH 4 பியூட்டா டைஐன் பியூட்டாடைஐன்*

குறிப்பு:* டையீன் மற்றும் டைஐன் என்ற முதலாம்நிலை பின்னொட்டுகள் ’ட’ என்ற ஒலியுடன் துவங்குவதால் அடிப்படைச் சொல்லோடு மேலும் ஒரு ”ஆ” சேர்க்கப்படுகிறது.

இரண்டாம் நிலை பின்னொட்டுகள்[தொகு]

கரிமச்சேர்மங்களுக்கான பெயரிடலில் முதலாம்நிலை பின்னொட்டுகளை அடுத்து இரண்டாம்நிலை பின்னொட்டுகள் சேர்க்கப்படுகின்றன. இவை கரிமச்சேர்மங்களில் காணப்படும் வேதி வினைத் தொகுதிகளை காட்டுகின்றன. வினைத் தொகுதிகளைக் காட்டும் பின்னொட்டுகள் கீழே காட்டப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. The Commission on the Nomenclature of Organic Chemistry (1971 (3rd edition combined)) [1958 (A: Hydrocarbons, and B: Fundamental Heterocyclic Systems), 1965 (C: Characteristic Groups)]. Nomenclature of Organic Chemistry (3 ed.). London: Butterworths. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-408-70144-7. {{cite book}}: Check date values in: |year= (help)