அல்கைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐசோபுரோப்பைல் குழு
மெத்தைல் குழு

கரிம வேதியியலில், அல்கைல் (alkyl) என்பது ஒற்றைவலுப் பிணைப்புக் கொண்ட படிகமூலியாகும். இது கரிமம், இதில் ஐதரசன் ஆகிய அணுக்கள் ஒரு வரிசையில் ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளன. அல்கைல்கள் CnH2n+1 என்னும் பொதுவான வாய்பாட்டுடனான ஒருபடித் தொடரை உருவாக்குகின்றன. மெத்தைல், CH3· (மெத்தேன் என்னும் பெயரிலிருந்து), எத்தைல் (C2H5·), புரொப்பைல் (C3H7·), பியூட்டைல்l (C4H9·), பெண்டைல் (C5H11·) என்பன அல்கைல் வகையுள் அடங்கும். இவை வழக்கமாகப் பெரிய மூலக்கூறுகளின் பகுதியாகவே விளங்குகின்றன. எனினும் தனியாகக் காணப்படும்போது இவை கட்டற்ற படிகமூலிகள் எனப்படுகின்றன. இவை மிகுந்த வினையூக்கம் கொண்டவை. அல்கைல்களின் அமைப்பு ஒத்த அல்கேன்களின் அமைப்பைப் போன்றவை, ஆனால் இவற்றில் ஒரு ஐதரசன் குறைவாக இருக்கும். எடுத்துக் காட்டாக மிகச் சிறிய அல்கைலான மெத்தைலின் அமைப்பு கீழே காட்டப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்கைல்&oldid=2741855" இலிருந்து மீள்விக்கப்பட்டது