மெத்தாக்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெத்தாக்சி வேதிவினைக் குழுவின் அமைப்பு

மெத்தாக்சி அல்லது மெதொட்சி (methoxy) என்பது வேதியியலில் குறிப்பாக கரிம வேதியியலில், ஒரு மெத்தில் குழுவும் ஆக்சிசனும் இணைந்துள்ள வேதி வினைக்குழுவைக் குறிக்கிறது. இந்த ஆல்காக்சி குழுவின் வேதி வாய்ப்பாடு O–CH3 ஆகும். மெத்தாக்சி என்ற சொல் பொதுவாக ஓர் ஈதரைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. மெத்தாக்சி என்பது ஒரு எலக்ட்ரான் வழங்கும் தொகுதி என்று ஆம்மெட் சமன்பாட்டின் அளவை மற்றும் எண்ணிக்கை முடிவுகள் விவரிக்கின்றன.

தோற்றம்[தொகு]

மெத்தனால் மற்றும் இருமெத்தில் ஈதர் ஆகியன எளிய மெத்தாக்சி சேர்மங்களுக்கு எடுத்துக்காட்டாகும். இவை தவிர அனிசோல் மற்றும் வனிலின் ஆகியனவும் பிறவகை மெத்தாக்சி ஈதரில் அடங்கும். பல உலோக ஆல்காக்சைடுகள் மெத்தாக்சி குழுவைப் பெற்றுள்ளன. உதாரணம்: நான்குமெத்திலார்த்தோ சிலிக்கேட்டு மற்றும் தைட்டானியம் மெத்தாக்சைடு இத்தகைய சேர்மங்களும் மெத்தாக்சைடுகள் என்றே வகைப்படுத்தப்படுகின்றன.

உயிரியத் தொகுப்பு[தொகு]

இயற்கையில் இம்மெத்தாக்சி சேர்மங்கள் அதிகமாக காணப்படாமல் இருப்பதாலேயே முக்கியத்துவம் பெறுகின்றன. அவை அமினோ அமிலங்களில் இருப்பதில்லை. இந்த வேற்றணு வளையச் சேர்மங்கள் மரபுக்குறியீட்டிலும் காணப்படவில்லை கொழுமியத்திலும் காணப்படவில்லை. இருந்தாலும் இவை O-மெத்திலேற்ற பிளவோனாய்டு எனப்படும் தாவர நிறமிகளின் பகுதிப்பொருளாக உள்ளது. இவை பீனால்கள் மீது செயல்படுகின்றன. உதாரணம்: கேட்டக்சால்- O-மெத்தில் டிரான்சுபெரோசு. தாவரங்களில் காணப்படும் ஏராளமான இயற்கைப் பொருட்கள், இலிக்னின் போன்ற கரையா நார்ச்சத்துகள் கேஃப்பியோயில் சிஓஏஓ- மெத்தில் டிரான்சுபெரோசு என்ற நொதியூக்கிகளால் உருவாக்கப்படுகின்றன.[1]

மெத்தாக்சிலேற்றம்[தொகு]

ஆல்காக்சைடுகளை மெத்திலேற்றம் செய்வதன் மூலம் பொதுவாக கரிம மெத்தாக்சைடுகள் தருவிக்கப்படுகின்றன.[2][3]

பீனால்களை உலோக வினையூக்கிகள் மூலம் மெத்திலேற்றம் செய்வதால் அல்லது அரோமாட்டிக் ஆலசனைடுகளை மெத்தாக்சிலேற்றம் செய்தும் சில அரைல் மெத்தாக்சைடுகள் தயாரிக்கப்படுகின்றன[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Wout Boerjan, John Ralph, Marie Baucher "Lignin Biosynthesis" Annu. Rev. Plant Biol. 2003, vol. 54, pp. 519–46. எஆசு:10.1146/annurev.arplant.54.031902.134938
  2. J. A. Scarrow and C. F. H. Allen "Methoxyacetonitrile" Org. Synth. 1933, 13, 56.எஆசு:10.15227/orgsyn.013.0056
  3. Josep Cornella, Cayetana Zarate, and Ruben Martin "Ni-catalyzed Reductive Cleavage of Methyl 3-Methoxy-2-Naphthoate" Org. Synth. 2014, 91, 260. எஆசு:10.15227/orgsyn.091.0260
  4. Cheung, Chi Wai; Buchwald, Stephen L. (2 August 2013). "Mild and General Palladium-Catalyzed Synthesis of Methyl Aryl Ethers Enabled by the Use of a Palladacycle Precatalyst". Organic Letters 15 (15): 3998–4001. doi:10.1021/ol401796v. 
  5. Tolnai, Gergely L.; Pethő, Bálint; Králl, Péter; Novák, Zoltán (13 January 2014). "Palladium-Catalyzed Methoxylation of Aromatic Chlorides with Borate Salts". Advanced Synthesis & Catalysis 356 (1): 125–129. doi:10.1002/adsc.201300687. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெத்தாக்சி&oldid=3351723" இலிருந்து மீள்விக்கப்பட்டது