அசிட்டால்டிகைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசிட்டால்டிகைடு
Lewis structure of acetaldehyde
Lewis structure of acetaldehyde
Skeletal structure of acetaldehyde
Skeletal structure of acetaldehyde
Ball-and-stick model
Ball-and-stick model
Space-filling model
Space-filling model
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
அசிட்டால்டிகைடு[3]
முறையான ஐயூபிஏசி பெயர்
எத்தனால்[3]
வேறு பெயர்கள்
Acetic aldehyde
Ethyl aldehyde[1]
Acetylaldehyde [2]
இனங்காட்டிகள்
75-07-0 Y
ChEBI CHEBI:15343 Y
ChEMBL ChEMBL170365 Y
ChemSpider 172 Y
EC number 200-836-8
InChI
 • InChI=1S/C2H4O/c1-2-3/h2H,1H3 Y
  Key: IKHGUXGNUITLKF-UHFFFAOYSA-N Y
 • InChI=1/C2H4O/c1-2-3/h2H,1H3
  Key: IKHGUXGNUITLKF-UHFFFAOYAB
IUPHAR/BPS
6277
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG C00084 Y
பப்கெம் 177
வே.ந.வி.ப எண் AB1925000
SMILES
 • O=CC
 • CC=O
UNII GO1N1ZPR3B Y
பண்புகள்
C2H4O
வாய்ப்பாட்டு எடை 44.05 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் காரமான
அடர்த்தி 0.784 g·cm−3 (20 °C) [4]

0.7904–0.7928 g·cm−3 (10 °C)[4]

உருகுநிலை −123.37 °C (−190.07 °F; 149.78 K)
கொதிநிலை 20.2 °C (68.4 °F; 293.3 K)
உடன் கலக்கும்
கரைதிறன் எத்தனால், ஈதர், பென்சீன், தொலுயீன், சைலீன், டர்பெண்டைன், அசிட்டோன் ஆகியவற்றுடன் கலக்கக்கூடியது
குளோரோஃபார்மில் சிறிது கரையக்கூடியது
மட. P -0.34
ஆவியமுக்கம் 740 mmHg (20 °C)[5]
காடித்தன்மை எண் (pKa) 13.57 (25 °C, H2O)[6]
-.5153−6 cm3/g
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.3316
பிசுக்குமை 0.21 mPa-s at 20 °C (0.253 mPa-s at 9.5 °C) [7]
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 2.7 D
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−166 kJ·mol−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
250 J·mol−1·K−1
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் சாத்தியமான தொழில்சார் புற்றுநோய்கள்[9]
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் HMDB
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[8]
H224, H319, H335, H351[8]
P210, P261, P281, P305+351+338[8]
தீப்பற்றும் வெப்பநிலை −39.00 °C; −38.20 °F; 234.15 K
Autoignition
temperature
175.00 °C; 347.00 °F; 448.15 K[5]
வெடிபொருள் வரம்புகள் 4.0–60%
Lethal dose or concentration (LD, LC):
1930 mg/kg (rat, oral)
13,000 ppm (rat),
17,000 ppm (hamster),
20,000 ppm (rat)[9]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
200 ppm (360 mg/m3)[5]
உடனடி அபாயம்
2000 ppm[5][9]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

அசிட்டால்டிகைடு (Acetaldehyde) (முறையான பெயர் எத்தனால்) என்பது CH3 CHO என்ற குறியீட்டைக் கொண்ட ஒரு கரிமச் சேர்மம் ஆகும், சில சமயங்களில் வேதியியல் நிபுணர்களால் MeCHO (Me = methyl) என சுருக்கமாக குறிப்பிடப்படுகிறது. சர்க்கரை வகைகள் ஆல்க்கால்களாக நொதிக்கும்பொழுது அசிட்டால்டிகைடு உடன் வினைபொருளாக உண்டாகிறது. எனவே நொதித்த திரவத்தில் இது அசிட்டால் வடிவத்தில் காணப்படுகிறது. பிராணிகளின் உயிரணுக்களில் நடக்கும் கார்போஹைடிரேட்டு வளிர்சிதை மாற்றத்தில் இந்த ஆல்டிஹைடும் கலந்து கொள்கிறது என்று கருதப்படுகிறது. சில சமயங்களில் இது சிறுநீரிலும் காணப்படுவதுண்டு.

தொழில் முறையில் அசிட்டால்டிகைடு இருமுறைகளில் தயாரிக்கப்படுகிறது. காற்றின் முன்னிலையிலோ அல்லது அதில்லாமலோ செம்பு வெள்ளி முதலிய சில உலோகங்களை ஊக்கிகளாகக் கொண்டு எதில்ஆல்ககாலுக்கு ஐடிரஜனை ஏற்றி இதைத் தயாரிக்கலாம். இரச உப்புக்களின் உதவியால் அசிட்டிலீன் தண்ணீரைக் கிரகிக்குமாறு செய்து இதைத் தயாரிக்கலாம்.

அசிட்டால்டிகைடு காரமான மணமுடைய திரவம் (கொதிநிலை 21). இது தண்ணீரில் எளிதில் கரைகிறது. இது எளிதில் கூட்டுறுப்பாகும் தன்மையுடையது. ஈரமற்ற ஆல்டிஹைடுக்கு ஒரு சொட்டு அடர் கந்தகாமிலத்தைச் சேர்த்தால் அது உடனே கொதிக்கத் தொடங்கி 124 கொதிநிலையுள்ள பாரால்டிஹைடு என்ற பெயருடைய கூட்டுறுப்பியாக (CH3 CHO)3 மாறுகிறது. குறைந்த வெப்ப நிலைகளில் மெட்டால்டிஹைடு என்ற திண்மக் கூட்டுறுப்பி உண்டாகிறது.

இவற்றை நீர்த்த கந்தகாமிலத்துடன் கொதிக்க வைத்து எளிதில் அசிட்டால்டிகைடாக மாற்றலாம். பாரால்டிஹைடு ஒரு தூக்க மருந்தாகவும், மெட்டால்டிஹைடு ஒரு திட எரி பொருளாகவும் பயன்பட்டு வந்தன. அசிட்டால்டிகைடிலிருந்து செயற்கை இரப்பர், அசிட்டிக அமிலம், அசிட்டோன் போன்ற பல கரிமப் பொருள்கள் தயாரிக்கப்படுவதால் தொழில் முறையில் இது மிகவும் முக்கியமானது.[10]

மேற்கோள்கள்[தொகு]

 1. SciFinderScholar (accessed 4 Nov 2009). Acetaldehyde (75-07-0) Substance Detail.
 2. Molecular Pathology and Diagnostics of Cancer p.190
 3. 3.0 3.1 "Front Matter". Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. பக். 908. doi:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85404-182-4. 
 4. 4.0 4.1 Stoffdaten Acetaldehyd bei Celanese Chemicals. பரணிடப்பட்டது 2008-05-17 at the வந்தவழி இயந்திரம் as of December 1999.
 5. 5.0 5.1 5.2 5.3 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0001". National Institute for Occupational Safety and Health (NIOSH).
 6. Haynes, William M., தொகுப்பாசிரியர் (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ). CRC Press. பக். 5–88. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781498754293. 
 7. "Acetaldehyde".
 8. 8.0 8.1 8.2 Sigma-Aldrich Co., Acetaldehyde. Retrieved on 2022-03-30.
 9. 9.0 9.1 9.2 "Acetaldehyde". NIOSH. 4 December 2014. பார்க்கப்பட்ட நாள் 12 February 2015.
 10. "அசிட்டால்டிஹைடு". தமிழ்க் கலைக்களஞ்சியம் (முதல்) முதல். (1954). Ed. பெரியசாமி தூரன்.. சென்னை: தமிழ் வளர்சிக் கழகம். 29-30. அணுகப்பட்டது 16 மார்ச் 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிட்டால்டிகைடு&oldid=3409519" இலிருந்து மீள்விக்கப்பட்டது