கார்பன் மோனோபாசுபைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கார்பன் மோனோபாசுபைடு (Carbon monophosphide) CP என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இதனுடைய மூலக்கூற்று எடை42.984 ஆகும்.

தனிமவரிசை அட்டவணையின் 15 ஆவது குழுவில் இடம்பெற்றுள்ள நிக்டோகென்கள் எனப்படும் நைட்ரசன் குடும்பத்தின் சேர்மமாக கார்பன் மோனோபாசுபைடு அறியப்படுகிறது. உறவுமுறையில் சால்கோகெனிக் இனத்தை ஒத்த சேர்மங்களைப் போல நிக்டோகெனிக் சேர்மங்களும் கருதப்படுகின்றன.

ஒவ்வொரு ஈரணுவிலும் உள்ள பெரிய அணுக்களின் நிறை வேறுபாடுகள் தவிர கார்பன் மோனோபாசுபைடு, கார்பன் நைட்ரைடு இரண்டும் இரட்டை அடிமட்டநிலை ஆற்றல் அமைப்பு கொண்ட முழுமையடையாத திறந்த இணைதிறன் கூடு இனங்களாகும். ஆனால், கார்பன் மோனோசல்பைடு, கார்பன் மோனாக்சைடு இரண்டும் அடிமட்ட ஆற்றல் நிலையில் முழுமையடைந்த மூடிய இணைதிறன் கூடு இனங்களாகும்.

கார்பன் மோனோபாசுபைடின் எளிய ஈரணு தனியுறுப்பு 1990 ஆம் ஆண்டு விண்மீன்சூழ் மண்டலத்தில் இருந்த ஐ.ஆர்.சி +10216 என்ற விண்மீனில் கண்டறியப்பட்டது[1]. ஐ.ஆர்.ஏ.எம் 30 மீட்டர் வானொலி அதிர்வெண் தொலைநோக்கி வழியாக 10 சுழற்சி கோடுகளை உற்றுநோக்கி பொருத்தி இந்த அடையாளம் உருவாக்கப்பட்டது[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Free CP in IRC + 10216". Astronomy and Astrophysics 230: L9. 1990. Bibcode: 1990A&A...230L...9G. 
  2. "CAS 12326-85-1 : CARBON MONOPHOSPHIDE". www.caslab.com. Archived from the original on 12 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 12 July 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "ASTROMOLECULE OF THE MONTH". www.astrochymist.org. பார்க்கப்பட்ட நாள் 12 July 2018.

வார்ப்புரு:கார்பன் சேர்மங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்பன்_மோனோபாசுபைடு&oldid=3549232" இலிருந்து மீள்விக்கப்பட்டது