ஓல்மியம் பாசுபைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பாசுபேனைலிடின் ஓல்மியம், ஓல்மியம் மோனோபாசுபைடு
| |
இனங்காட்டிகள் | |
12029-85-5 | |
ChemSpider | 38073060 |
EC number | 234-737-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82819 |
| |
பண்புகள் | |
HoP | |
வாய்ப்பாட்டு எடை | 195.90 |
தோற்றம் | அடர்நிற படிகங்கள் |
அடர்த்தி | கி/செ.மீ3 |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஓல்மியம் பாசுபைடு (Holmium phosphide) என்பது HoP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓல்மியமும்ம் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3] இது தண்ணீரில் கரையாது. அடர் நிறத்தில் படிகங்களாக உருவாகும்.
தயாரிப்பு
[தொகு]வெற்றிடத்தில் அல்லது மந்த வாயுச் சூழலில் தூளாக்கப்பட்ட ஓல்மியத்தையும் சிவப்பு பாசுபரசையும் சேர்த்து சூடாக்கினால் ஓல்மியம் பாசுபைடு உருவாகிறது.
இயற்பியல் பண்புகள்
[தொகு]ஓல்மியம் பாசுபைடு கனசதுர வடிவத்தில் அடர்நிறப் படிகங்களாக உருவாகிறது. காற்றில் நிலைப்புத்தன்மை கொண்ட இது நீரில் கரையாது.
சோடியம் குளோரைடு கட்டமைப்பில் உள்ள மோனோநிக்டைடு என்ற அரிய வகை சேர்மங்களுடன் இது வகைப்படுத்தப்படுகிறது.[4] தாழ்வெப்பநிலைகளில் ஓல்மியம் பாசுபைடு அயக் காந்தப் பண்புடன் காணப்படுகிறது.[5][6]
வேதியியல் பண்புகள்
[தொகு]நைட்ரிக் அமிலத்துடன் ஓல்மியம் பாசுபைடு தீவிரமாக வினைபுரிகிறது.
பயன்கள்
[தொகு]உயர் ஆற்றல் நிலை, உயர் அலைவரிசை பயன்பாடுகள், சீரொளி மற்றும் இதர ஒளியியல் இருமுனையங்களில் பிசுமத் பாசுபைடு ஒரு குறைக்கடத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory. Cumulative Supplement to the Initial Inventory: User Guide and Indices (in ஆங்கிலம்). United States Environmental Protection Agency. 1980. p. 170. பார்க்கப்பட்ட நாள் 23 December 2021.
- ↑ Fischer, P.; Furrer, A.; Kaldis, E.; Kim, D.; Kjems, J. K.; Levy, P. M. (1 January 1985). "Phase diagrams and magnetic excitations in holmium phosphide". Physical Review B. pp. 456–469. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1103/PhysRevB.31.456. பார்க்கப்பட்ட நாள் 23 December 2021.
- ↑ 3.0 3.1 "Holmium Phosphide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 23 December 2021.
- ↑ Furrer, A. (6 December 2012). Crystal Field Effects in Metals and Alloys (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4615-8801-6. பார்க்கப்பட்ட நாள் 23 December 2021.
- ↑ Fysikafdelingen, Forsøgsanlæg Risø (1983). Annual progress report (in ஆங்கிலம்). Risø National Laboratory. p. 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-87-550-0960-8. பார்க்கப்பட்ட நாள் 23 December 2021.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1978). Crystal Data: Inorganic compounds 1967-1969 (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 71. பார்க்கப்பட்ட நாள் 23 December 2021.