இரும்பு பாசுபைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரும்பு பாசுபைடு
இனங்காட்டிகள்
12023-53-9 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 71310637
பண்புகள்
Fe3P
வாய்ப்பாட்டு எடை 198.51 g·mol−1
அடர்த்தி 6.74 கி/செ.மீ3
உருகுநிலை
தண்ணீரில் கரையாது
கரைதிறன் நைட்ரிக் அமிலம், ஐதரசன் புளோரைடு, இராச திராவகம் போன்றவற்றில் கரையும்.
நீர்த்த அமிலங்களிகும் காரங்களிலும் கரையாது.
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

இரும்பு பாசுபைடு (Iron phosphide) என்பது Fe3P.[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மத்தைக் குறிக்கும். இரும்பும்பாசுபரசும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் சாம்பல் நிறத்தில் அறுகோண ஊசிகள் வடிவத்தில் தோற்றமளிக்கிறது.

உயர் வெப்பநிலைகளில் இரும்பும் பாசுபரசும் நேரடியாக இணையும்போது இரும்பு பாசுபைடின் உருவாக்கம் நிகழ்கிறது. ஈரம் மற்றும் அமிலங்களுடன் இரும்பு பாசுபைடு வினைபுரிந்து நச்சுத்தன்மையும் காற்றில் தானாகத் தீப்பற்றி எரியக்கூடிய வாயுவுமான பாசுபீன் (PH3) வாயுவை உருவாக்குகிறது[2].

ஒரு குறைக்கடத்தியாக இரும்பு பாசுபைடைப் பயன்படுத்த முடியும். சீரொளி டையோடு கருவி போன்ற உயர் ஆற்றல், உயர் அதிர்வெண் பயன்பாடுகளில் இதைப் பயன்படுத்தலாம்.

முன்பாதுகாப்பு[தொகு]

இரும்பு பாசுபைடு தீங்கு விளைவிக்கும் ஒரு வேதிப் பொருளாகும்.

கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலான கண்ணாடிகளை அணிந்து கொண்டு இரும்பு பாசுபைடை கையாள வேண்டும். ஏனெனில் இச்சேர்மம் கண்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது ஆகும்.

இரும்பு பாசுபைடை சுவாசிக்க நேர்ந்தால் உடனடியாக புதிய காற்று அல்லது செயற்கை சுவாசம் கொடுக்கப்பட வேண்டும். உட்செலுத்தப்பட்டு மயக்கமடையாமல் இருந்தாலும் உடனடியாக அந்நபரின் வாயை தண்ணீரால் கழுவ வேண்டும். கண்களுடன் இச்சேர்மத்தின் தொடர்பு ஏற்பட்டால் உடனடியாக கண்களைக் கழுவவேண்டியதும் அவசியம் ஆகும்[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Iron phosphide, 99.5% (metals basis)". alfa.com. Alfa Aesar. 8 ஏப்ரல் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 August 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Iron Phosphide". americanelements.com. American Elements. 7 August 2018 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Iron Phosphide safety data sheet". sigmaaldrich.com. Sigma Aldrich. 7 August 2018 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்பு_பாசுபைடு&oldid=3544311" இருந்து மீள்விக்கப்பட்டது