உள்ளடக்கத்துக்குச் செல்

வளையபியூட்டாடையீன் இரும்பு டிரைகார்பனைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளையபியூட்டாடையீன் இரும்பு டிரைகார்பனைல்
இனங்காட்டிகள்
12078-17-0 N
யேமல் -3D படிமங்கள் Image
  • [c1ccc1][Fe-4](C#[O+])(C#[O+])C#[O+]
பண்புகள்
(C4H4)Fe(CO)3
தோற்றம் மஞ்சள் நிறத்திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

வளையபியூட்டாடையீன் இரும்பு டிரைகார்பனைல் (Cyclobutadieneiron tricarbonyl) என்பது Fe(C4H4)(CO)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சைக்ளோபியூட்டாடையீன்யிரும்பு டிரைகார்பனைல் என்ற பெயராலும் இந்த கரிம இரும்புச் சேர்மம் அழைக்கப்படுகிறது. மஞ்சள் நிறங்கொண்ட இது கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. கரிமவேதியியலில் வளையபியூட்டாடையீன்கள் தயாரிப்பதற்கான ஒரு முன்னோடிச் சேர்மமாக வளையபியூட்டாடையீன் இரும்பு டிரைகார்பனைல் பயன்படுகிறது. தனி நிலையில் இவ்வினம் சற்று தெளிவற்ற மழுப்பலான இனமாக கருதப்படுகிறது. [1]

தயாரிப்பும் கட்டமைப்பும்

[தொகு]

1965 ஆம் ஆண்டு ரோலேண்டு பெட்டிட் வளைய ஆக்டாட்டெட்ராயீனை தொடக்க வினைபடு பொருளாகக் கொண்டு முதன் முதலாக இச்சேர்மத்தை தயாரித்தார். :[2][3][4]

Cyclobutadieneiron tricarbonyl Synthesis

வளைய ஆக்டாட்டெட்ராயீன் முதலில் குளோரினேற்றம் செய்யப்பட்டு [4.2.0]- இருவளைய சேர்மம் உருவாக்கப்படுகிறது. பின்னர் இது ஆல்க்கைன் டைமெத்தில் அசிட்டைலீன்டைகார்பாக்சிலேட்டுடன் டையீல்சு ஆல்டர் வினையில் ஈடுபட்டு தொடர்ந்து 200 பாகை செல்சியசு வெப்பநிலையில் வெப்பத்தாற் பகுக்கப்பட்டு தலைகீழ் டையீல்சு ஆல்டர் வினை நிகழ்கிறது. இப்படிநிலையில் சிசு-டைகுளோரோசைக்ளோபியூட்டீன் விளைபொருளாகக் கிடைக்கிறது. டை-இரும்பு நோனாகார்பனைலுடன் இச்சேர்மம் வினைபுரிந்து இறுதியாக வளையபியூட்டாடையீன் இரும்பு டிரைகார்பனைல் கிடைக்கிறது. இரும்பு பெண்டாகார்பனைல் ஒளியாற்பகுப்பு வினை மூலம் இவ்வினைக்குத் தேவையான டை-இரும்பு நோனாகார்பனைல் தயாரித்துக் கொள்ளப்படுகிறது. வளையபியூட்டாடையீன் இரும்பு டிரைகார்பனைல் ஓர் இடைப்பொதி அணைவுச் சேர்மமாகும். C-C பிணைப்புகளுக்கு இடையிலுள்ள தொலைவு 1.426 Â ஆகும். [5]

பண்புகள்

[தொகு]

டிரைகார்பனைல் அணைவுச் சேர்மத்தை செரிக் அமோனியம் நைட்ரேட்ட்டுடன் சேர்த்து சூடுபட்டுத்தினால் வளையபியூட்டாடையீன் ஆக்சிசனேற்ற அணைவுநீக்கம் அடைகிறது. வெளியேற்றப்படும் வளையபியூட்டாடையீன் குயினோனால் ஈர்க்கப்படுகிறது. குயினோன் இங்கு இரு எலக்ட்ரான் கவரியாகச் செயல்படுகிறது. [6] வளையபியூட்டாடையீன் இரும்பு டிரைகார்பனைல் அதன் சில வேதிவினைகளில் அரோமாட்டிக் தன்மையை வெளிப்படுத்துகிறது. இவ்வினைகளை எலக்ட்ரான்கவர் அரோமாட்டிக் பதிலீட்டு வினைகள் என்று வகைப்படுத்தலாம். :[7]

Cyclobutadieneiron tricarbonyl Reactions

அசிட்டைல் குளோரைடு மற்றும் அலுமினியம் குளோரைடுடன் சேர்ந்து இச்சேர்மம் பிரீடல் கிராப்ட்சு அசைலேற்ற வினைக்கு உட்படுகிறது. அசைல் வழிப்பெறுதி 2 உருவாகிறது. பார்மால்டிகைடு மற்றும் ஐதரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரிந்து குளோரோமெத்தில் வழிப்பெறுதி 3 உருவாகிறது. வில்சுமெயர்-ஆக் வினையில் என்-மெத்தில்பார்மனிலைடு மற்றும் பாசுபரசு ஆக்சிகுளோரைடுடன் வினையில் ஈடுபட்டு பார்மைல் சேர்மம் 4 கிடைக்கிறது. மானிச் வினையில் அமீன் வழிப்பெறுதி 5 கிடைக்கிறது. இவ்வினையின் வினை வழிமுறை எலக்ட்ரான் கவர் அரோமாட்டிக் பதிலீட்டு வினையை ஒத்த வினையாக உள்ளது.

Cyclobutadieneiron tricarbonyl EAS reactionmechanism

தொடர்புடைய சேர்மங்கள்

[தொகு]

இரும்பு கார்பனைலுடன் டைபீனைலசிட்டைலீன் சேர்த்து வினைபுரியச் செய்து பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பெட்டிட் (C4Ph4)Fe(CO)3 தயாரித்தார். [8] (பியூட்டாடையீன்)இரும்பு டிரைகார்பனைல் இச்சேர்மத்துடன் சம எலக்ட்ரான் அமைப்பைக் கொண்டதாக உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. D. Seyferth "(Cyclobutadiene)iron Tricarbonyl - A Case of Theory before Experiment" Organometallics 2003, volume 22, 2-20.
  2. Cyclobutadiene- and Benzocyclobutadiene-Iron Tricarbonyl Complexes G. F. Emerson, L. Watts, R. Pettit; J. Am. Chem. Soc.; 1965; 87(1); 131-133. First Page
  3. Cis-dichlorocyclobutene , Organic Syntheses, Coll. Vol. 6, p.422 (1988); Vol. 50, p.36 (1970) Article.
  4. Iron, tricarbonyl (η4-1,3-cyclobutadiene)- R. Pettit and J. Henery Organic Syntheses, Coll. Vol. 6, p.310 (1988); Vol. 50, p.21 (1970) Link
  5. P. D. Harvey; W. P. Schaefer; H. B. Gray; D. F. R. Gilson; I. S. Butler (1988). "Structure of tricarbonyl(η4-cyclobutadienyl)iron(0) at −45 °C". Inorg. Chem. 27 (1): 57–59. doi:10.1021/ic00274a013. 
  6. L. Brener, J. S. Mckennis, R. Pettit (1976). "Cyclobutadiene In Synthesis: endo-Tricyclo[4.4.0.02,5]deca-3,8-diene-7,10-dione". Org. Synth. 55: 43. doi:10.15227/orgsyn.055.0043. 
  7. Cyclobutadieneiron Tricarbonyl. A New Aromatic System J. D. Fitzpatrick, L. Watts, G. F. Emerson, R. Pettit J. Am. Chem. Soc.; 1965, vol. 87, 3254-3255 Abstract
  8. R. P. Dodge, V. Schomaker, "Crystal Structure of Tetraphenylcyclobutadiene Iron Tricarbonyl", Nature 1960, vol. 186, 798-799.எஆசு:10.1038/186798b0