ஐதரோகுளோரிக் காடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஐதரோகுளோரிக் காடி
Hydrochloric acid
ImageFile
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 7647-01-0
ஐசி இலக்கம் 231-595-7
வே.ந.வி.ப எண் MW4025000
பண்புகள்
வேதியியல் வாய்பாடு நீரில் உள்ள HCl in (H2O)
மோலார் நிறை 36.46 g/mol (HCl)
தோற்றம் நிறமற்றது முதல்
மெல்லிய மஞ்சள் நிறம் வரையான
அடர்த்தி 1.18g/cm3
உருகுநிலை

−27.32 °C (247 K)
38% solution.

கொதிநிலை

110 °C (383 K),
20.2% solution;
48 °C (321 K),
38% solution.

நீரில் கரைதிறன் கரையக்கூடியது.
காடித்தன்மை எண் (pKa) −8.0
பிசுக்குமை 1.9 mPa·s at 25 °C,
31.5% solution
தீநிகழ்தகவு
MSDS External MSDS
ஈயூ வகைப்பாடு Corrosive (C)
EU சுட்டெண் 017-002-01-X
NFPA 704

NFPA 704.svg

0
3
1
COR
R-phrases R34, R37
S-phrases (S1/2), S26, S45
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது.
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் F-, Br-, I-
காடிs
தொடர்புடையவை
Hydrobromic acid
Hydrofluoric acid
Hydroiodic acid
சல்பூரிக் அமிலம்
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.

ஐதரோகுளோரிக் காடி நீரில் கரைந்துள்ள ஐதரசன் குளோரைடு (HCl) இது மிகவும் கடுமையாக தாக்கி அரிக்கும் தன்மை கொண்ட கரிமமற்றக் கடுங்காடி. இது தொழிலகங்களில் பல பயன்பாடுகள் கொண்ட ஒரு வேதியியற் பொருள். இயற்கையாக மாந்தர்களின் குடலில் காணப்படுகின்றது.

வரலாற்று நோக்கில் இது ஆங்கிலத்தில் ஒருகாலத்தில் முரியாட்டிக் காடி (muriatic acid) அல்லது உப்புகளின் சாராயம் என்று அழைக்கப்பட்டது. இதனை விட்ரியோல் (vitriol) எனப்பட்ட கந்தகக் காடியோடு சாதாரண உப்பை (சோடியம் குளோரைடு) சேர்பதன் மூலம் உருவாக்கினர். ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலதில் (14-17 ஆவது நூற்றாண்டு), இக்காடி முதன்முதலாக ஐரோப்பாவில் தோன்றியது. இதனை யோகான் கிளௌபர் (Johann Rudolf Glauber), சோசப்பு பிரீசிட்லி (Joseph Priestley), ஃகம்ப்ரி டேவி (Humphry Davy) போன்ற வேதியயலாளர்கள் தங்கள் அறிவியல் ஆய்வில் பயன்படுத்தினர்.

தொழிற்புரட்சி காலத்தில் பெரிய அளவில் ஐதரோ குளோரிக் காடி படைக்கப்பட்டு வேதியியல் சார்ந்த தொழிலகங்களில் வினைவிளைவுப் பொருளாய் (chemical reagent) பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக பாலி வீனைல் குளோரைடு (polyvinyl chloride, PVC) எனப்படும் நெகிழி அல்லது பிளாசுட்டிகைப் பெரிய அளவில் படைக்கத் தேவைப்பட்ட வீனைல் குளோரைடு உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது. இதே போல பாலியூரித்தேன் (polyurethane) படைக்கத் தேவையான மெத்திலீன் டைஃவினைல் டைஐசோசயனேட்டு (MDI) (methylene diphenyl diisocyanate, MDI), தொலியீன் டைஐசோசயனேட்டு உருவாக்கவும் பயன்பட்டது. இவை தவிர சிறிய அளவில், வீடுகளில் பயன்படுத்தும் தூய்மைப்படுத்திகள், சில்லட்டின் (gelatin), உணவின் சேர்பொருள்கள் (food additives), படிவுநீக்கிகள் (descaling), தோல்பதினிடுதல் துணைப்பொருள்கள் போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் ஏறத்தாழ 20 மில்லியன் டன் ஐதரோகுளோரிக் காடி படைக்கப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரோகுளோரிக்_காடி&oldid=1832141" இருந்து மீள்விக்கப்பட்டது