உள்ளடக்கத்துக்குச் செல்

வனேடியம்(V) குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வனேடியம்(V) குளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
வனேடியம் பெண்டா குளோரைடு
இனங்காட்டிகள்
1421358-80-6
InChI
  • InChI=1S/5ClH.V/h5*1H;/q;;;;;+5/p-5
    Key: RPESBQCJGHJMTK-UHFFFAOYSA-I
யேமல் -3D படிமங்கள் Image
Image

dimer

பப்கெம் 13643901
  • Cl[V](Cl)(Cl)(Cl)Cl
  • Cl[V-]1(Cl)(Cl)(Cl)[Cl+][V-]([Cl+]1)(Cl)(Cl)(Cl)Cl dimer
பண்புகள்
Cl10V2
வாய்ப்பாட்டு எடை 456.38 g·mol−1
தோற்றம் கருப்பு நிறத் திண்மம்
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

வனேடியம்(V) குளோரைடு (Vanadium(V) chloride) என்பது VCl5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். கருப்பு நிறத்துடன் எதிர்காந்தத் தன்மை கொண்ட வேதிப்பொருளாக இது காணப்படுகிறது. நையோபியம்(V) குளோரைடில் உள்ளதுபோல இதன் மூலக்கூறுகள் ஈரெண்முகக் கட்டமைப்பை ஏற்கின்றன.[1]

தயாரிப்பு

[தொகு]

வனேடியம் பெண்டாபுளோரைடுடன் மிகையளவு போரான் முக்குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் வனேடியம்(V) குளோரைடு உருவாகிறது.

2 VF5 + 10 BCl3 → [VCl5]2 + 10 BF2Cl

வனேடியம்(IV) குளோரைடுடன் ஒப்பிடுகையில் அறை வெப்பநிலையில் இது நிலைப்பத் தன்மையற்றதாகும்.

[VCl5]2 → 2 VCl4 + Cl2

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamadon, Farhad; Seppelt, K. (2012). "The Elusive Halides VCl5, MoCl6, and ReCl6". Angewandte Chemie International Edition 52 (2): 767–769. doi:10.1002/anie.201207552. பப்மெட்:23172658.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனேடியம்(V)_குளோரைடு&oldid=3456394" இலிருந்து மீள்விக்கப்பட்டது