வனேடியம்(II) குளோரைடு
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
வனேடியம்(II) குளோரைடு
| |||
வேறு பெயர்கள்
வனேடசு குளோரைடு
| |||
இனங்காட்டிகள் | |||
10580-52-6 ![]() | |||
ChemSpider | 59733 ![]() | ||
EC number | 234-176-7 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 66355 | ||
வே.ந.வி.ப எண் | YW1575000 | ||
| |||
UNII | 5V2RJ2EWG4 ![]() | ||
பண்புகள் | |||
VCl2 | |||
வாய்ப்பாட்டு எடை | 121.847 கி/மோல் | ||
தோற்றம் | வெளிர் பச்சை திண்மம் | ||
அடர்த்தி | 3.230 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | 1,027 °C (1,881 °F; 1,300 K) | ||
கொதிநிலை | 1,506 °C (2,743 °F; 1,779 K) | ||
கரையும் | |||
+2410.0·10−6 செ.மீ3/மோல் | |||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | CdI2 | ||
ஒருங்கிணைவு வடிவியல் |
எண்முகம் | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | ஆக்சிசனுடன் தீவிரமாக வினைபுரியும் | ||
GHS pictograms | ![]() ![]() | ||
GHS signal word | அபாயம் | ||
H302, H314 | |||
P260, P264, P270, P280, P301+312, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P330, P363, P405 | |||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | வனேடியம்(II) புளோரைடு, வனேடியம்(II) புரோமைடு, வனேடியம்(II) அயோடைடு | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | தைட்டானியம்(II) குளோரைடு, குரோமியம்(II) குளோரைடு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
வனேடியம்(II) குளோரைடு (Vanadium(II) chloride) என்பது VCl2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அதிக அளவுக்கு ஒடுக்கமடைந்த வனேடியம் குளோரைடாக இச்சேர்மம் கருதப்படுகிறது. ஆப்பிள் பச்சை நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் நீரில் கரைந்து ஊதா நிறக் கரைசலைக் கொடுக்கிறது..[2]
தயாரிப்பு
[தொகு]வனேடியம் முக்குளோரைடை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்துவதன் மூலம் வனேடியம்(II) குளோரைடு சேர்மத்தை தயாரிக்க இயலும்:[2]
- 2 VCl3 → VCl2 + VCl4
வனேடியம்(II) குளோரைடு நீரில் கரைந்து ஊதாநிற [V(H2O)6]2+ என்ற வாய்பாடு கொண்ட அறுநீரயனியைக் கொடுக்கிறது. இந்த நீரயனியை ஆவியாக்கினால் [V(H2O)6]Cl2 என்ற வாய்பாடு கொண்ட படிகங்களைக் கொடுக்கிறது.[3]
வனேடியம்(II) குளோரைடு கரிம வேதியியலில் ஒரு சிறப்புக் குறைக்கும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நீரிய கரைசலாக, இது வளையயெக்சைல்நைட்ரேட்டை வளையயெக்சனோனாக மாற்றுகிறது. பீனைல் அசைடையும் அனிலினாகக் குறைக்கிறது.[4]
கட்டமைப்பு
[தொகு]திண்மநிலையிலுள்ள VCl2 ஆனது எண்முக ஒருங்கிணைப்பு வடிவவியலுடன் காட்மியம் அயோடைடு கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது. VBr2 மற்றும் VI2 ஆகியவை கட்டமைப்பு ரீதியாகவும் வேதியியல் ரீதியாகவும் வனேடியம்(II) குளோரைடு சேர்மத்தை ஒத்திருக்கின்றன. ஆனால் இவையனைத்தும் Cr(III) போன்ற நாற்கூட்டு அடிநிலையில் d3 உள்ளமைவைக் கொண்டிருக்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vanadium dichloride". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). Retrieved 12 December 2021.
- ↑ 2.0 2.1 Young, R. C.; Smith, M. E. "Vanadium(II) Chloride" Inorganic Syntheses, 1953, volume IV, page 126-127.எஆசு:10.1002/9780470132357.ch42
- ↑ Martin Pomerantz, Gerald L. Combs, N. L. Dassanayake, "Vanadium Dichloride Solution" Inorganic Syntheses, 1982, vol. XXI, pp. 185–187. எஆசு:10.1002/9780470132524.ch42
- ↑ Vanasse, Benoit; O'Brien, Michael K. (2001). "Vanadium(II) Chloride". Encyclopedia of Reagents for Organic Synthesis. doi:10.1002/047084289X.rv002. ISBN 0471936235.