வனேடியம்(V) ஆக்சிமுப்புளோரைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
வனேடியம் ஆக்சிபுளோரைடு, முப்புளோரோ ஆக்சோவனேடியம்
| |
இனங்காட்டிகள் | |
13709-31-4 | |
பப்கெம் | 123322 |
பண்புகள் | |
F3OV | |
வாய்ப்பாட்டு எடை | 123.9599 கி/மோல் |
தோற்றம் | வெண்மைநிறத் திண்மம் |
அடர்த்தி | 2.4590 கி/செ.மீ3 |
உருகுநிலை | 300 °C (572 °F; 573 K) |
கொதிநிலை | 480 °C (896 °F; 753 K) |
கரையாது | |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | பட்டியலிடப்படவில்லை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வனேடியம்(V) ஆக்சிமுப்புளோரைடு (Vanadium(V) oxytrifluoride ) என்பது VOF3.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பல்வேறு வகையான வனேடியம்(V) ஆக்சி ஆலைடுகளில் இதுவும் ஒன்றாகும். தொடக்கநிலை உலோகப் புளோரைடுகளின் சிறப்பியல்புகள் போல இச்சேர்மமும் திடநிலையில் பல்பகுதிய அமைப்பைக் கொண்டுள்ளது. திடநிலையில் அடுக்கு அமைப்பை ஏற்கும் இச்சேர்மம் ஆவியாதலின் போது இருபகுதிய அமைப்புக்கு மாறுகிறது. மாறாக VOCl3 மற்றும் VOBr3 இரண்டும் அறை வெப்பநிலையில் துரிதமாக ஆவியகும் நிலையில் இருந்தாலும் எல்லா நிலைகளிலும் நான்முக அமைப்பிலேயே நிலைத்திருக்கிறது.[1]
கரிம வேதியியல் தொகுப்பு வினைகளில் VOF3 சேர்மம் பெரும்பாலும் பீனாலிக் வளையங்களின் ஆக்சிசனேற்ற பிணைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. உதாரணம்: வான்கோமைசின் மற்றும் அதன் வரிசைச் சேர்மங்கள்[2]. இந்தப் பயன்பாட்டிற்காக VOF3 குறிப்பாக முப்புளோரோ அசிட்டிக் அமிலத்தில் கரைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
- ↑ Vanasse, Benoit; O'Brien, Michael K. (2001). "Vanadyl Trifluoride". Encyclopedia of Reagents for Organic Synthesis. doi:10.1002/047084289X.rv005. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0471936235.