வனேடியம்(III) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வனேடியம்(III) அயோடைடு
Vanadium(III) iodide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
வனேடியம்(III) அயோடைடு
வேறு பெயர்கள்
வனேடியம் மூவயோடைடு
இனங்காட்டிகள்
15513-94-7 Yes check.svgY
பப்கெம் 3627252
பண்புகள்
VI3
வாய்ப்பாட்டு எடை 431.6549 கி/மோல்
தோற்றம் கருப்புநிறத் திண்மம்
அடர்த்தி 5.14 கி/செ.மீ3, solid
கரையும்
கட்டமைப்பு
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் வனேடியம்(III) புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் தைட்டானியம்(III) அயோடைடு
compounds
தொடர்புடையவை
VI2
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

வனேடியம்(III) அயோடைடு (Vanadium(III) iodide) என்பது VI3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். வனேடியம் தூளுடன் அயோடின் சேர்த்து 500 °செல்சியசு வெப்பநிலைக்கு[1] சூடுபடுத்தும்போது இவ்விணைக்காந்தத் திண்மம் உருவாகிறது. கருப்பு நிறத்துடன் நீருறிஞ்சும் தன்மை கொண்ட இச்சேர்மம் தண்ணீரில் கரைந்து V(III) அயனிகள் கொண்ட பச்சைநிறக் கரைசலைக் கொடுக்கிறது.

வேதிப் போக்குவரத்து வினையின் வழியாக வனேடியம் உலோகம் தூய்மைப்படுத்தப்படுகிறது. இவ்வினையில் வனேடியம்(III) அயோடைடு , அயோடினுடன் சேர்க்கப்பட்டு மீளுந்தாக்க வினை மற்றும் அடுத்தடுத்த சிதைவு வினைகளுக்கு உட்படுத்தப்பட்டு தூய்மையான வனேடியம் உலோகம் பெறப்படுகிறது.

2 V + 3 I2 2 VI3

பிசுமத்(III) அயோடைடு ஏற்றுள்ள படிக அமைப்பின் நோக்குருவினையே வனேடியம்(III) அயோடைடும் ஏற்றுள்ளது. அயோடைடுகள் அறுகோண-நெருக்கப் பொதிவுடனும், வனேடியம் மையங்கள் எண்முக இடைவெளிகளின் மூன்றில் ஒரு பகுதியையும் ஆக்ரமித்துள்ளன.

திண்ம மாதிரிகளை சூடுபடுத்தும் போது உருவாகும் ஆவியில் VI4 காணப்படுகிறது. அனேகமாக இது ஆவிப் போக்குவரத்து வினையில் விளைந்த ஆவியான வனேடியம் கூறாக இருக்கலாம். மூவயோடைடின் வெப்பச்சிதைவின் விளைவாக வனேடியம்(II) அயோடைடு தோன்றுகிறது. :[2]

2 VI3 → VI2 + VI4 ΔH = 36.6 kcal/mol; ΔS = 38.7 eu

மேற்கோள்கள்[தொகு]

  1. Juza, D.; Giegling, D.; Schäfer, H. (1969). "Über die Vanadiniodide VJ2 und VJ3". Z. Anorg. Allg. Chem. 366 (3-4): 121–9. doi:10.1002/zaac.19693660303. 
  2. Berry, K. O.; Smardzewski, R. R.; McCarley, R. E. (1969). "Vaporization reactions of vanadium iodides and evidence for gaseous vanadium(IV) iodide". Inorg. Chem. 8 (9): 1994–7. doi:10.1021/ic50079a034. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனேடியம்(III)_அயோடைடு&oldid=3384834" இருந்து மீள்விக்கப்பட்டது