உள்ளடக்கத்துக்குச் செல்

வனேடியம் மூவாக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வனேடியம் மூவாக்சைடு
வனேடியம் மூவாக்சைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
வனேடியம் செசுகியுவாக்சைடு , வனேடிக் ஆக்சைடு
இனங்காட்டிகள்
1314-34-7 Y
பப்கெம் 518710
வே.ந.வி.ப எண் YW3050000
பண்புகள்
V2O3
வாய்ப்பாட்டு எடை 149.881 g/mol
தோற்றம் கருப்பு துகள்
அடர்த்தி 4.87 g/cm3
உருகுநிலை 1,940 °C (3,520 °F; 2,210 K)
other solvents-இல் கரைதிறன் கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு முக்கோண (karelianite), hR30
புறவெளித் தொகுதி R-3c h, No. 167
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

வனேடியம் மூவாக்சைடு (Vanadium(III) oxide, வனேடியம்(III) ஆக்சைடு) என்பது V2O3 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு கனிம சேர்மமாகும். இது கருப்பு நிறம் கொண்டு திடரூபத்தில் காணப்படுகிறது. வனேடியம் ஐந்தாக்சைடு ஐதரசன் அல்லது மோனாக்சைடால் வனேடியம் மூவாக்சைடாக ஒடுக்கப்படுகிறது.[1][2] இந்த அடிப்படை ஆக்சைடு அமிலங்களில் கரைந்து மூவனேடிய அணைவுச் சேர்மங்களின் கரைசலைத் தருகிறது.[2] வனேடியம் மூவாக்சைடு V2O3 கொரண்டம் கட்டமைப்பில் காணப்படுகிறது. 160 பாகை கெல்வின் வெப்பநிலையில் நேர் காந்த ஆற்றலுக்கு எதிராக செயல்படுகிறது.[2] இந்த வெப்பநிலையில் இதனுடைய மின்கடத்தும் தன்மை திடீரென உலோகப் பண்பிலிருந்து மாற்றமடைகிறது.[3] காற்றில் படுமாறு திறந்து வைத்தால் இது படிபடியாக கருநீல நிற V2O4 ஆக மாறுகிறது[3]. இயற்கையில் இது அரிதான கார்லியனைட்டு தாதுவாகக் கிடைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 1267.
  2. 2.0 2.1 2.2 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  3. 3.0 3.1 E.M. Page, S.A.Wass (1994),Vanadium:Inorganic and Coordination chemistry, Encyclopedia of Inorganic Chemistry, John Wiley & Sons, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-93620-0
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனேடியம்_மூவாக்சைடு&oldid=3915545" இலிருந்து மீள்விக்கப்பட்டது