பேரியம் ஆக்சைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பேரியம் மோனாக்சைடு
பேரியம் புரோடாக்சைடு பேரியா | |
இனங்காட்டிகள் | |
1304-28-5 | |
ChemSpider | 56180 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 62392 |
வே.ந.வி.ப எண் | CQ9800000 |
| |
பண்புகள் | |
BaO | |
வாய்ப்பாட்டு எடை | 153.326 கி/மோல் |
தோற்றம் | வெண் திண்மம் |
அடர்த்தி | 5.72 கி/செ.மீ3, திண்மம் |
உருகுநிலை | 1,923 °C (3,493 °F; 2,196 K) |
கொதிநிலை | ~ 2,000 °C (3,630 °F; 2,270 K) |
3.48 கி/100 மி.லி (20 °செல்சியசு) 90.8 கி/100 மி.லி (100 °செல்சியசு) வினைபுரிந்து Ba(OH)2 உருவாகும். | |
கரைதிறன் | எத்தனால், நீர்த்த கனிம அமிலங்கள் மற்றும் காரங்கள் போன்றவற்றில் கரையும். அசிட்டோன் மற்றும் நீர்ம அமோனியா வில் கரையாது. |
-29.1•10−6 செ.மீ3/மோல் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம், cF8 |
புறவெளித் தொகுதி | Fm3m, No. 225 |
ஒருங்கிணைவு வடிவியல் |
எண்கோணம் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−582 கிலோயூல்•மோல்−1[1] |
நியம மோலார் எந்திரோப்பி S |
70 யூல்•மோல்−1•கெல்வின்−1[1] |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | Xn |
R-சொற்றொடர்கள் | R20/22 |
S-சொற்றொடர்கள் | (S2), S28 |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பேரியம் ஐதராக்சைடு பேரியம் பெராக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | கால்சியம் ஆக்சைடு இசுட்ரோன்சியம் ஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பேரியம் ஆக்சைடு (Barium oxide) என்பது BaO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பேரியம் மோனாக்சைடு, பேரியம் புரோட்டக்சைடு, பேரியா போன்ற பெயர்களாலும் இதை அழைக்கலாம். வெண்மை நிறத்துடன் ஒரு நீருறிஞ்சும் தனிமமாகவும் எளிதில் தீப்பிடிக்காத சேர்மமாகவும் இது கருதப்படுகிறது. எத்தனால், நீர்த்த கனிம அமிலங்கள், காரங்கள் போன்றவற்றில் பேரியம் ஆக்சைடு கரைகிறது. அசிட்டோன் மற்றும் நீர்ம அமோனியா கரைசலில் பேரியம் ஆக்சைடு கரையாது. எண் கோண அமைப்பில் கனசதுரக் கட்டமைப்புடன் உள்ள இச்சேர்மம் நேர்மின் கதிர்க் குழாய்களில், கிரீடக் கண்ணாடிகளில் வினையூக்கியாகப் பயன்படுகிறது. இவ்வேதிப் பொருள் மனித சருமத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. மற்றும் அதிக அளவில் விழுங்கினால் உணவுப் பாதையெங்கும் எரிச்சல் ஏற்படுகிறது. பேரியம் ஆக்சைடு அதிக அளவு உட்கொள்ளப்பட்டால் மரணத்திற்கும் கூட வழிவகுக்கும்.
பேரியம் கார்பனேட்டுடன் கற்கரியைச் சேர்த்து சூடாக்குவதன் மூலம் பேரியம் ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. பேரியம் நைட்ரேட்டை வெப்பச் சிதைவு வினைக்கு உட்படுத்தியும் இதைத் தயாரிக்கலாம் [2].
பயன்கள்
[தொகு]பேரியம் ஆக்சைடு சூடான எதிர்மின்வாய் குழாய்களுக்கான மேற் பூச்சாகப் பயன்படுத்தப்படுகிறது. எதிர்மின் கதிர் குழாய்களில் உள்ளவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஒளியியல் கிரீடக் கண்ணாடிகள் போன்ற சில வகையான கண்ணாடி உற்பத்தியில் இது ஈயம்(II) ஆக்சைடுக்கு மாற்று வேதிப்பொருளாகப் பயன்படுகிறது. ஈய ஆக்சைடு ஒளிவிலகல் குறிப்பெண்ணை உயர்த்துகின்ற அதே வேளையில் சிதறடிப்பு ஆற்றலையும் இது உயர்த்துகிறது. 150 மற்றும் 200 பாகை செல்சியசு வெப்பநிலையில் எத்திலீன் ஆக்சைடும் ஆல்ககால்களும் ஈடுபடும் வினையில் ஓர் எத்தாக்சிலேற்ற வினையூக்கியாக பேரியம் ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது [3]
வெப்ப ஏற்ற இறக்க வேறுபாடுகளின் வழியாக தூய்மையான ஆக்சிசனுக்கு பேரியம் ஆக்சைடு ஒரு மூலப் பொருளாகக் கருதப்படுகிறது. பெராக்சைடு அயனி உருவாதல் மூலமாக எளிதாக இது ஆக்சிசனேற்றமடைந்து BaO2 சேர்மமாகிறது [4].
BaO முதல் BaO2 வரையிலான ஒரு முழுமையான பெராக்சிசனேற்றம் மிதமான வெப்பநிலையில் நிகழ்கிறது. ஆனால் உயர்ந்த வெப்பநிலையில் ஆக்சிசன் மூலக்கூறின் அதிகரித்த என்ட்ரோபி என்பது, BaO2 சேர்மம் ஆக்சிசனாகவும் பேரியம் ஆக்சைடாகவும் 1175 பாகை கெல்வின் வெப்பநிலையில் சிதைந்து மாறுகிறது என்பதை குறிக்கிறது.
வளிமண்டலக் காற்றை அதன் உட்கூறுகளாகப் பிரிக்கும் காற்றுப் பிரிப்பு செயல்முறை ஆதிக்கம் செலுத்திய 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திற்கு முன்னர் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய பெரிய அளவிலான தயாரிப்பு முறையாக இந்த வேதிவினை பயன்படுத்தப்பட்டது. இந்த தயாரிப்பு முறை அதன் கண்டுபிடிப்பாளர்களை சிறப்பிக்கும் விதமாக பிரின் செயல்முறை எனப் பெயரிடப்பட்டது [5].
தயாரிப்பு
[தொகு]பேரியம் கார்பனேட்டை சூடுபடுத்துவதன் மூலமாக பேரியம் ஆக்சைடை தயாரிக்கலாம். பேரியம் நைட்ரேட்டை வெப்பச் சிதைவு வினைக்கு உட்படுத்தியும் இதை தயாரிக்கலாம் [6].இவ்வாறே பெரும்பாலும் பேரியம் உப்புகளை சிதைத்து பேரியம் ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது [7].
- 2Ba + O2 → 2BaO
- BaCO3 → BaO + CO2
முன்பாதுகாப்பு
[தொகு]பேரியம் ஆக்சைடு ஓர் எரிச்சலூட்டியாகும். தோல் அல்லது கண்களைத் தொடர்பு கொண்டால் அல்லது உள்ளிழுக்கப்பட்டால் வலி மற்றும் சிவப்பை ஏற்படுத்துகிறது. இருப்பினும், உட்கொள்ளும்போது பேரியம் ஆக்சைடு மிகவும் ஆபத்தானது. குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு, தசை முடக்கம், இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி மரணத்தை உண்டாக்கிவிடும். உட்கொண்டால் அல்லது உட்செலுத்தப்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். பேரியம் ஆக்சைடு வாயுவை சுற்றுச்சூழலுக்குள் வெளியிடக்கூடாது. ஏனெனில் இது நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் [8].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed. Houghton Mifflin Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-618-94690-7.
- ↑ Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8
- ↑ "Barium Oxide (chemical compound)". Encyclopædia Britannica. Encyclopædia Britannica. 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-02-19.
- ↑ S.C. Middleburgh, K.P.D. Lagerlof, R.W. Grimes - Accommodation of Excess Oxygen in Group II Oxides http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1551-2916.2012.05452.x/pdf
- ↑ Jensen, William B. (2009). "The Origin of the Brin Process for the Manufacture of Oxygen". Journal of Chemical Education 86 (11): 1266. doi:10.1021/ed086p1266. Bibcode: 2009JChEd..86.1266J. https://archive.org/details/sim_journal-of-chemical-education_2009-11_86_11/page/1266.
- ↑ Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8
- ↑ "Compounds of barium: barium (II) oxide". Web Elements. The University of Sheffield. 2007-01-26. பார்க்கப்பட்ட நாள் 2007-02-22.
- ↑ "Barium Oxide (ICSC)". IPCS. October 1999. Archived from the original on 26 February 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-02-19.