உள்ளடக்கத்துக்குச் செல்

காட்மியம் ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்மியம் ஆக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
காட்மியம் ஆக்சைடு
வேறு பெயர்கள்
காட்மியம்(II) ஆக்சைடு
காட்மியம் மோனாக்சைடு
இனங்காட்டிகள்
1306-19-0 Y
ChemSpider 14099 Y
EC number 215-146-2
InChI
  • InChI=1S/Cd.O Y
    Key: CXKCTMHTOKXKQT-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Cd.O/rCdO/c1-2
    Key: CXKCTMHTOKXKQT-MBQGENNCAM
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14782
வே.ந.வி.ப எண் EV1925000
  • [Cd]=O
UN number 2570
பண்புகள்
CdO
வாய்ப்பாட்டு எடை 128.41 g·mol−1
தோற்றம் நிறமற்ற தூள் (ஆல்பா வடிவம்)
செம்-பழுப்பு படிகம் (பீட்டா வடிவம்) [1]
மணம் நெடியற்றது
அடர்த்தி 8.15 கி/செ.மீ3(பட்டிகம்),
6.95 கி/செ.மீ3 (புற வேற்றுமை)[2] திண்மம்.
உருகுநிலை 900–1,000 °C (1,650–1,830 °F; 1,170–1,270 K)
புற வேற்றுமை வடிவம் சிதையும்[3]
கொதிநிலை 1,559 °C (2,838 °F; 1,832 K) பதங்கமாகும்[3]
4.8 மி.கி/லி (18 °செல்சியசு)
கரைதிறன் நீர்த்த அமிலங்களில் கரையும்
அமோனியாவில் மெதுவாகக் கரையும்
காரங்களில் கரையாது
ஆவியமுக்கம் 0.13 கி.பாசுக்கல் (1000 ° செல்சியசு)
2.62 கி.பாசுக்கல் (1200 ° செல்சியசு)
61.4 கி.பாசுக்கல் (1500 °செல்சியசு)[4]
Band gap 2.18 எலக்ட்ரான் வோல்ட்டு
எதிர்மின்னி நகாமை 531 செ.மீ2/கன அளவு•வினாடி
-3.0•10−5 செ.மீ3/மோல்
வெப்பக் கடத்துத்திறன் 0.7 வேலை/மீ•கெல்வின்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 2.49
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம், cF8
புறவெளித் தொகுதி Fm3m, No. 225
Lattice constant a = 4.6958 Å
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−258 கி.யூ/மோல்[4][5]
நியம மோலார்
எந்திரோப்பி So298
55 யூ/மோல்•கெ[5]
வெப்பக் கொண்மை, C 43.64 யூ/மோல்•கெல்வின்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் [1]
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[6]
GHS signal word அபாயம்
H330, H341, H350, H361, H372, H410[6]
P201, P260, P273, P281, P284, P310[6]
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
Lethal dose or concentration (LD, LC):
72 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[8]
72 மி.கி/கி.கி (வாய்வழி, சுண்டெலி)[9]
500 மி.கி/மீ3 (எலி, 10 நிமிடம்)
2500 மி.கி/மீ3 (முயல், 10 நிமிடம்)
3500 மி.கி/மீ3 (கினியா பன்றி, 10 நிமிடம்)
4000 மி.கி/மீ3 (நாய், 10 நிமிடம்)
780 மி.கி/மீ3 (எலி, 10 நிமிடம் )
340 மி.கி/மீ 3 (சுண்டெலி, 10 நிமிடம் )
3000 மி.கி/மீ 3 (முயல், 15 நிமிடம் )
3000 மி.கி/மீ3 (கினியா பன்றி, 15 நிமிடம்)
400 மி.கி/மீ3 (நாய், 10 நிமிடம்)[9]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
[1910.1027] TWA 0.005 மி.கி/மீ3 ( Cd ஆக)[7]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
Ca[7]
உடனடி அபாயம்
Ca [9 மி.கி/மீ3 (Cd ஆக)][7]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் காட்மியம் சல்பைடு
காட்மியம் செலீனைடு
காட்மியம் தெலூரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் துத்தநாக ஆக்சைடு]]
பாதரச ஆக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

காட்மியம் ஆக்சைடு (Cadmium oxide) என்பது CdO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மற்ற காட்மியம் சேர்மங்களை தயாரிப்பதற்கு உதவும் மிக முக்கியமான முன்னோடிச் சேர்மமாக இது கருதப்படுகிறது. எண்முக நேர்மின் அயனி மற்றும் எதிர்மின் அயனி மையங்களைக் கொண்ட சோடியம் குளோரைடு போல கனசதுர பாறை உப்புப் பின்னல் வடிவத்தில் காட்மியம் ஆக்சைடு படிகமாகிறது[10]. அரியவகை கனிமம் மோண்டெபொனைட்டு வடிவத்தில் இச்சேர்மம் இயற்கையில் தோன்றுகிறது[11]. மேலும் காட்மியம் ஆக்சைடை நிறமில்லா படிக உருவமற்ற தூளாக அல்லது பழுப்பு அல்லது சிவப்பு நிற படிகங்கங்களாக காணமுடியும்[12]. அறைவெப்பநிலையில் (298 கெல்வின்) காட்மியம் ஆக்சைடு 2.18 எலக்ட்ரான் வோல்ட் பட்டை இடைவெளி மதிப்பு கொண்ட ஒரு என்–வகை குறைக்கடத்தியாகும்[13].

தயாரிப்பும் கட்டமைப்பும்

[தொகு]

காட்மியம் சேர்மங்கள் பெரும்பாலும் துத்தநாக தாதுக்களுடன் சேர்ந்தே காணப்படுவதால் துத்தநாகம் சுத்திகரிப்பு செயல்முறையின் போது காட்மியம் ஆக்சைடு பொதுவான ஒரு உடன் விளைபொருளாகக் கிடைக்கிறது. தனிமநிலை காட்மியத்தை காற்றில் எரிப்பதன் மூலம் இதை தயாரிக்கலாம். நைட்ரேட்டு அல்லது கார்பனேட்டு போன்ற பிற காட்மியம் சேர்மங்களை வெப்பச்சிதைவுக்கு உட்படுத்தியும் இதை தயாரிக்கலாம். தூய்மையான நிலையில் இது சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. எதிர்மின் அயனி வெற்றிடங்கள் காரணமாகத் தோன்றும் குறைபாடுடைய கட்டமைப்புகள் காரணமாக காட்மியம் ஆக்சைடு வழக்கத்திற்கு மாறான பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது[14]. காட்மியம் ஆவியை காற்றுடன் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலம் வர்த்தக முறை காட்மியம் ஆக்சைடு உருவாக்கப்படுகிறது[15] Cadmium oxide is prepared commercially by oxidizing cadmium vapor in air.[16].

பயன்

[தொகு]

காட்மியமுலாம் பூச , தேக்க மின்கலங்களுக்கான மின்முனை, காட்மியம் உப்புகள், வினையூக்கி, பீங்கான் மெருகூட்டி, ஒளிரும் பொருள் மற்றும் உருளைப்புழு கொல்லி எனப் பல்வேறாக காட்மியம் ஆக்சைடு பயன்படுகிறது. மின்முலாம் பூசுதலும், நிறமிகளில் ஒரு மூலப்பொருளாக இருப்பதுவுமே காட்மியம் ஆக்சைடுக்கான முக்கிய பயன்பாடாகும்[17].

ஒளிபுகும் மின்கடத்தி

[தொகு]

காட்மியம் ஆக்சைடு ஓர் ஒளிபுகு மின்கடத்தும் பொருளாகும்[18]. ஓர் ஒளிபுகு மின்கடத்தும் படச்சுருளாக 1907 ஆம் ஆண்டு காரல் பேதெக்கெர் என்பவரால் தயாரிக்கப்பட்டது[19]. ஒளி இருமுனையங்கள், ஒளிமின்னழுத்திகள், ஒளிமின்னழுத்த கலன்கள், ஒளிபுகு மின்முனைகள், நீர்மப்படிக காட்சியமைப்புகள், அகச்சிகப்புக் கதிராய்விகள் மற்றும் பிரதிபலிப்பு எதிர்ப்புப் பூச்சுகள் போன்ற பயன்பாடுகளில் மெல்லிய படங்களின் வடிவத்தில் காட்மியம் ஆக்சைடு பயன்படுத்தப்பட்டுள்ளது. புற ஊதாக்கதிர் ஒளியில் வெளிப்படும்போது CdO நுண் துகள்கள் ஆற்றல் இடைவெளி கிளர்ச்சிக்கு உட்படுகின்றன. பீனால் ஒளித்தரங்குறைப்பு வினைகளில் இது முக்கியப்பங்கு வகிக்கிறது[20] CdO microparticles undergo bandgap excitation when exposed to UV-A light and is also selective in phenol photodegradation.[21].

காட்மிய முலாம்

[தொகு]

பெரும்பாலான வணிக காட்மிய முலாம் பூசல் சயனைடு குளியல் முறையில் மின்படிதல் செயல்முறையின் மூலம் மேற் கொள்ளப்படுகிறது. காட்மியம் சயனைடு, சோடியம் ஐதராக்சைடிலிருந்து கிடைக்கும் காட்மியம் ஆக்சைடும் நீரிலுள்ள சோடியம் சயனைடும் இத்தகைய சயனைடு குளியல் செயல்முறைக்கு உதவுகின்றன. 32கிராம்/லிட்டர் காட்மியம் ஆக்சைடுக்கு 75 கிராம்/லிட்டர் சோடியம் ஐதராக்சைடு என்ற விகிதம் இச்செயல்முறைக்கு மிக உகந்த்தாகும். காட்மியத்தின் செரிவு 50% அளவு வரை வேறுபடலாம். பொதுவாக ஒளியூட்டிகள் இக்குளியல் வினையில் சேர்க்கப்பட்டு மீத்தூய காட்மியம் மின்முனைகளை பயன்படுத்தி அறை வெப்பநிலையில் செயல்முறை நிகழ்த்தப்படுகிறது[22].

வினைத்திறன்

[தொகு]

காட்மியம் ஆக்சைடு ஒரு கார ஆக்சைடு என்பதால் நீரிய அமிலங்களால் தாக்கப்படுகின்றன. [Cd(H2O)6]2+. வகை கரைசல்கள் உருவாகின்றன. வலிமையான காரக்கரைசல்களுடன் சேர்த்து சூடுபடுத்தும்போது [Cd(OH)4]2− அயனி உருவாகிறது. அறைவெப்ப நிலையில் சுற்றுப்புற ஈரப்பதத்தில் இருந்து நீரை எடுத்துக் கொள்ளும் காட்மியத்தின் மேற்பரப்பு ஒரு மெல்லிய படலமாகக் காட்மியம் ஆக்சைடை உருவாக்குகிறது[11]. மேலும் அறைவெப்பநிலையில் காட்மியம் ஆக்சிசனேற்றம் அடைந்து காட்மியம் ஆக்சைடாக மாறுகிறது[22]. காட்மியம் ஆவியும் நீராவியும் சேர்ந்தும் கூட காட்மியம் ஆக்சைடு உருவாகிறது. மீள் வினையில் ஐதரசன் வாயு உருவாகிறது[22].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Patnaik, Pradyot (2003). Handbook of Inorganic Chemical Compounds. McGraw-Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8.
  2. "NIOSH Pocket Guide to Chemical Hazards". பார்க்கப்பட்ட நாள் 2007-02-16.
  3. 3.0 3.1 "INCHEM: Chemical Safety Information from Intergovernmental Organizations". பார்க்கப்பட்ட நாள் 2007-02-16.
  4. 4.0 4.1 Cadmium oxide in Linstrom, Peter J.; Mallard, William G. (eds.); NIST Chemistry WebBook, NIST Standard Reference Database Number 69, National Institute of Standards and Technology, Gaithersburg (MD), http://webbook.nist.gov (retrieved 2014-05-23)
  5. 5.0 5.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed. Houghton Mifflin Company. p. A21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-618-94690-X.
  6. 6.0 6.1 6.2 Sigma-Aldrich Co., Cadmium oxide. Retrieved on 2014-05-23.
  7. 7.0 7.1 7.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0087". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  8. http://chem.sis.nlm.nih.gov/chemidplus/rn/1306-19-0
  9. 9.0 9.1 "Cadmium compounds (Cd ஆக)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  10. Wells, A.F. (1984) Structural Inorganic Chemistry, Oxford: Clarendon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6.
  11. 11.0 11.1 Lewis, Richard J., Sr., Hawley's condensed chemical dictionary, 13th ed., 1997, p. 189
  12. T. L. Chu; Shirley S. Chu (1990). "Degenerate cadmium oxide films for electronic devices". Journal of Electronic Materials 19 (9): 1003–1005. doi:10.1007/BF02652928. Bibcode: 1990JEMat..19.1003C. https://archive.org/details/sim_journal-of-electronic-materials_1990-09_19_9/page/1003. 
  13. S. K. Vasheghani Farahani (2013). "Temperature dependence of the direct bandgap and transport properties of CdO". Applied Physics Letters 102 (2): 022102. doi:10.1063/1.4775691. Bibcode: 2013ApPhL.102b2102V. 
  14. "Cadmium and compounds fact sheet". Archived from the original on 2006-12-10. பார்க்கப்பட்ட நாள் 2007-02-16.
  15. Holleman, A. F.; Wiberg, E. Inorganic Chemistry. Academic Press: San Diego, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
  16. Hampel, C. A.; Hawley, G. G. (1973). The encyclopedia of Chemistry (3rd ed.). p. 169.
  17. Clifford A. Hampel and Gessner G. Hawley, The encyclopedia of Chemistry, 3rd Ed., 1973, p. 169
  18. Varkey, A (1994). "Transparent conducting cadmium oxide thin films prepared by a solution growth technique". Thin Solid Films 239 (2): 211. doi:10.1016/0040-6090(94)90853-2. Bibcode: 1994TSF...239..211V. 
  19. Dou, Y (1998). "N-type doping in CdO ceramics: a study by EELS and photoemission spectroscopy". Surface Science 398: 241. doi:10.1016/S0039-6028(98)80028-9. Bibcode: 1998SurSc.398..241D. 
  20. Lokhande, B (2004). "Studies on cadmium oxide sprayed thin films deposited through non-aqueous medium". Materials Chemistry and Physics 84 (2–3): 238. doi:10.1016/S0254-0584(03)00231-1. 
  21. Karunakaran, C; Dhanalakshmi, R (2009). "Selectivity in photocatalysis by particulate semiconductors". Central European Journal of Chemistry 7 (1): 134. doi:10.2478/s11532-008-0083-7. 
  22. 22.0 22.1 22.2 Clifford A. Hampel, Rare Metals Handbook, 1954, p. 87-103

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்மியம்_ஆக்சைடு&oldid=3849250" இலிருந்து மீள்விக்கப்பட்டது