இரேனியம்(VII) ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரேனியம்(VII) ஆக்சைடு
Rhenium(VII) oxide
Rhenium(VII) oxide
பெயர்கள்
வேறு பெயர்கள்
இரேனியம் ஏழாக்சைடு
இனங்காட்டிகள்
1314-68-7 Y
InChI
  • InChI=1S/7O.2Re
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 123106
SMILES
  • O=[Re](=O)(=O)O[Re](=O)(=O)=O
பண்புகள்
O7Re2
வாய்ப்பாட்டு எடை 484.40298 கி/மோல்
தோற்றம் மஞ்சள் நிறப்படிகத் துகள்
அடர்த்தி 6.103 கி/செ.மீ3, திண்மம்
உருகுநிலை 360 °C (680 °F; 633 K)
கொதிநிலை பதங்கமாகிறது
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள் மாங்கனீசு(VII) ஆக்சைடு; டெக்னீசியம்(VII) ஆக்சைடு; பெர்ரிரேனிக் அமிலம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

இரேனியம் VII) ஆக்சைடு (Rhenium(VII) oxide)என்பது Re2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் நிறத்திண்மமான இச்சேர்மம் HOReO3 இன் நீரிலி வடிவமாகும். பெர்ரிரேனிக் அமிலம் Re2O7•2H2O , Re2O7 ஆக்சைடுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. இரேனியம் சேர்மங்களின் தயாரிப்புக்கு Re2O7 ஒரு தாதுப் பொருளாக இருக்கிறது. இத்தாதுவை வறுக்கும் போது ஆவியாதலின் பகுதிப்பொருள்களாக இவை கிடைக்கின்றன.[1]

அமைப்பு[தொகு]

படிகவடிவ Re2O7 ஒரு கனிம வேதியியல் பலபடியாகும். இப்படியில் எண்முக மற்றும் நான்முக இரேனியம் மையங்கள் இடம்பெற்றுள்ளன. சூடுபடுத்தும்போது இப்பலபடி பலபடியல்லாத மூலக்கூற்று Re2O7 சேர்மமாக உடைகிறது. இம்மூலக்கூற்று வடிவமானது கிட்டத்தட்ட மாங்கனீசு ஏழாக்சைடை ஒத்துள்ளது. அதாவது இதில் ஒரு சோடி ReO4 நான்முகங்கள் O3Re-O-ReO3 உச்சியில் பகிர்ந்துகொள்கின்றன.[2]

தயாரிப்பு மற்றும் வினைகள்[தொகு]

உலோக இரேனியம் அல்லது இரேனியம் ஆக்சைடுகள் அல்லது இதன் சல்பைடுகள் 500 முதல் 700 °செ வெப்பநிலையில் காற்றில் ஆக்சிசனேற்றம் அடைந்து இரேனியம் VII) ஆக்சைடு உருவாகிறது.:[3]

Re2O7 தண்ணீருடன் தீவிரமாக வினைபுரிகிறது. தண்ணிரில் முழுமையாகக் கரைந்து பெர்ரிரேனிக் அமிலமாகிறது. ஆக்சிசனேற்ற வினைகளுக்கு வினையூக்கியாகச் செயல்படும் மெத்தில் இரேனியம் மூவாக்சைடு தயாரிப்பதற்கான முன்னோடியாகவும் இது செயல்படுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hans Georg Nadler "Rhenium and Rhenium Compounds" Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2000. எஆசு:10.1002/14356007.a23_199
  2. Wells, A.F. (1984) Structural Inorganic Chemistry, Oxford: Clarendon Press. ISBN 0-19-855370-6.
  3. Schmidt, M.; Schmidbaur, H., "Trimethylsilyl perrhenate", Inorg. Synth. 1967, 9, 149-151. எஆசு:10.1002/9780470132401.ch40
  4. W. A. Herrmann and F. E. Kuhn (1997). "Organorhenium Oxides". Acc. Chem. Res. 30 (4): 169–180. doi:10.1021/ar9601398. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரேனியம்(VII)_ஆக்சைடு&oldid=2747273" இலிருந்து மீள்விக்கப்பட்டது