ஆக்சோடிரைகுளோரோபிசு(டிரைபீனைல்பாசுபீன்)இரேனியம்(V)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆக்சோடிரைகுளோரோபிசு(டிரைபீனைல்பாசுபீன்)இரேனியம்(V) (Oxotrichlorobis(triphenylphosphine)rhenium(V)) என்பது ReOCl3(PPh3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் நிறத்துடன் காற்றில் நிலைப்புத் தன்மையுடன் காணப்படும் இந்த அணைவுச் சேர்மம், பல இரேனியம் அணைவுச் சேர்மங்கள் தயாரிப்பதற்கு ஒரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது. டயா காந்தப்பண்பைப் பெற்றுள்ள இந்த அணைவுச் சேர்மத்தில் ஓர் ஆக்சோ, மூன்று குளோரோ மற்றும் தங்களுக்குள் மாறிக்கொள்ளும் இரண்டு டிரைபீனைல் ஈந்தணைவிகள் கொண்ட எண்முக ஒருங்கிணைப்பில் இரேனியம் உள்ளது. மேலும் இரேனியத்தின் ஆக்சிசனேற்ற எண் +5 ஆகவும் எலக்ட்ரான் அமைப்பு d2 ஆகவும் காணப்படுகிறது.

ஆக்சோடிரைகுளோரோபிசு(டிரைபீனைல்பாசுபீன்)இரேனியம்(V)
Oxotrichlorobis(triphenylphosphine)rhenium(V).png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டிரைகுளோரிடோ ஆக்சிடோபிசு(டிரைபீனைல்பாசுபேன்)இரேனியம்(V)
இனங்காட்டிகள்
17442-18-1 Yes check.svgY
பண்புகள்
ReOCl3(PPh3)2
வாய்ப்பாட்டு எடை 833.15 கி/மோல்
தோற்றம் மஞ்சள் நிற நுண் படிகங்கள்
உருகுநிலை
நீரில் கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

தயாரிப்பு[தொகு]

ReOCl3(PPh3)2 வர்த்தக முறையில் கிடைக்கிறது. பெர் இரேனிக் அமிலத்துடன் ஐதரோ குளோரிக் அமிலமும் அசிட்டிக் அமிலமும் கலந்த கலவையிலுள்ள டிரைபீனைல்பாசுபீன் சேர்த்து வினை புரியச் செய்வதன் மூலமாக இதை தயாரிக்கலாம். இவ்வினையின்போது Re(VII) நிலை Re(V) நிலைக்கு ஒடுக்கப்படுகிறது, இதேபோல டிரைபீனைல்பாசுபீன் அதன் ஆக்சைடாக ஆக்சிசனேற்றப்படுகிறது.

HReO4 + 3 HCl + 3 PPh3 → ReOCl3(PPh3)2 + Ph3PO + 2 H2O

வினைக்குத் தேவையான பெர் இரேனிக் அமிலம் இரேனியம்(VII) ஆக்சைடைப் பயன்படுத்தி தளத்திலேயே தயாரித்துக் கொள்ளப்படுகிறது.

பயன்கள்[தொகு]

பிற ஆக்சோ, நைட்ரிடோ, ஐதரிடோ அணைவுச் சேர்மங்கள் தயாரிப்பதற்கு உதவும் முன்னோடிச் சேர்மமாக ReOCl3(PPh3)2 பயன்படுகிறது. LiAlH4 உடன் சேர்த்து சூடுபடுத்தும்போது இது ReH7(PPh3)2 ஆக மாற்றமடைகிறது.[1] இரண்டாம்நிலை ஆல்ககால்களை டைமெத்தில் சல்பாக்சைடைக் கொண்டு தெரிவு செய்யப்பட்ட ஆக்சிசனேற்ற வினைக்கு உட்படுத்தினால் தொடர்புடைய கீட்டால்கள் உருவாகின்றன. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. K. Abdur-Rashid; A. J. Lough; R. H. Morris (2001). "Intra- and inter-ion-pair protonic-hydridic bonding in polyhydridobis(phosphine)rhenates". Canadian Journal of Chemistry 79 (5–6): 964. doi:10.1139/cjc-79-5-6-964. 
  2. Pombeiro, A. J. L.; Fatima, M.; Crabtree, R. H. "Technetium and Rhenium: Inorganic & Coordination Chemistry" Encyclopedia of Inorganic Chemistry. John Wiley & Sons: New York, 2006. எஆசு:10.1002/0470862106.ia237