புரோமோபென்டாகார்பனைல் இரேனியம்(I)
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
புரோமிடோ பென்டாகார்பனைல் இரேனியம்
| |
இனங்காட்டிகள் | |
14220-21-4 ![]() | |
EC number | 238-084-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6096983 |
SMILES
| |
பண்புகள் | |
Re(CO)5Br | |
வாய்ப்பாட்டு எடை | 406.16 கி/மோல் |
தோற்றம் | நிறமற்றது |
உருகுநிலை | |
குளோரோகார்பன்கள்-இல் கரைதிறன் | கரையும் |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() ![]() |
GHS signal word | அழிக்கும் |
H301, H311, H315, H319, H331, H335 | |
P261, P264, P270, P271, P280, P301+310, P302+352, P304+340, P305+351+338, P311, P312, P321, P322, P330 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
புரோமோபென்டாகார்பனைல் இரேனியம்(I) (Bromopentacarbonylrhenium(I)) என்பது Re(CO)5Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம இரேனியம் சேர்மமாகும். பொதுவாக இரேனியத்தின் அணைவுச் சேர்மங்களைத் தயாரிக்க இது பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு[தொகு]
டையிரேனியம் டெக்காகார்பனைலை புரோமினுடன் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்து எளிய முறையில் புரோமோபென்டா கார்பனைல் இரேனியம்(I) சேர்மத்தைத் தயாரிக்கிறார்கள் :[1]
- Re2(CO)10 + Br2 → 2 ReBr(CO)5.
இரேனியம்(III) புரோமைடை ஒடுக்க கார்பனைலேற்றம் செய்து முதலில் இச்சேர்மம் தயாரிக்கப்பட்டது:[2]
- ReBr3 + 2 Cu + 5 CO → BrRe(CO)5 + 2 CuBr
இவ்வினையில் தாமிர(I) புரோமைடு உடன் விளைபொருளாக உருவாகிறது.
வினைகள்[தொகு]
பிற இரேனியம் அணைவுச்சேர்மங்கள் தயாரிப்பதற்கு உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமாக புரோமோபென்டா கார்பனைல் இரேனியம்(I) பயன்படுகிறது. துத்தநாகம் மற்றும் அசிட்டிக் அமிலம் ஆகிய சேர்மங்களுடன் சேர்ந்து வினைபுரிந்து பென்டாகார்பனைல் ஐதரிடோ இரேனியம் (HRe(CO)5) அணைவுச் சேர்மத்தைக் கொடுக்கிறது[3]
- Re(CO)5Br + Zn + HO2CCH3 → ReH(CO)5 + ZnBrO2CCH3.
டைகிளைம் என்ற கரைப்பானில் கரைக்கப்பட்ட டெட்ரா எத்திலமோனியம்புரோமைடுடனும் இது வினைபுரிந்து [NEt4]2[ReBr3(CO)3)] என்ற அணைவுச் சேர்மத்தைக் கொடுக்கிறது. இந்த அணைவுச் சேர்மம் இரேனியம் முக்கார்பனைல் குழுவைக் கொண்ட சேர்மங்களைத் தயாரிக்க உதவும் முக்கியமான முன்னோடிச் சேர்மமாகும்.[4] தண்ணீருடன் புரோமோபென்டா கார்பனைல் இரேனியம்(I) சேர்த்து சூடுபடுத்துவதால் முந்நீர் அணைவுச் சேர்மங்கள் உருவாகின்றன.
- ReBr(CO)5 + 3 H2O → [Re(H2O)3(CO)3]Br + 2 CO
இப்பாதையில் டெட்ரா எத்திலமோனியம்புரோமைடு உடன் விளைபொருள் உருவாதல் தவிர்க்கப்படுகிறது. வினைகலவையில் இருந்து இவ்வுடன் விளை பொருளை பிரித்து எடுப்பது பெரும்பாலும் கடினமான செயலாகும்.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Steven P. Schmidt; William C. Trogler; Fred Basolo (1990). "Pentacarbonylrhenium Halides". Inorganic Syntheses. Inorganic Syntheses 28: 154–159. doi:10.1002/9780470132593.ch42. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470132593.
- ↑ W. Hieber; Hans Schulten (1939). "XXX. Mitteilung über Metallcarbonyle. Über Rhenium-Kohlenoxyd-Verbindungen". Zeitschrift für anorganische und allgemeine Chemie 243 (2): 164–173. doi:10.1002/zaac.19392430205.
- ↑ Michael A. Urbancic; John R. Shapley (1990). "Pentacarbonylhydridorhenium". Inorganic Syntheses. Inorganic Syntheses 28: 165–8. doi:10.1002/9780470132593.ch43. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470132593.
- ↑ R. Alberto; A Egli; U. Abram; K. Hegetschweiler; V. Gramlich; P. A. Schubiger (1994). "Synthesis and Reactivity of [NEt4]2[ReBr3(CO)3]. Formation and Structural Characterization of the Clusters [NEt4][Re3(µ3-OH)(µ-OH)3(CO)9] and [NEt4][Re2(µ-OH)3(CO)6] by alkaline titration". J. Chem. Soc., Dalton Trans. (19): 2815–2820. doi:10.1039/DT9940002815.
- ↑ N. Lazarova; S. James; J. Babich; J. Zubieta (2004). "A convenient synthesis, chemical characterization and reactivity of [Re(CO)3(H2O)3]Br: the crystal and molecular structure of [Re(CO)3(CH3CN)2Br]". Inorganic Chemistry Communications 7 (9): 1023–1026. doi:10.1016/j.inoche.2004.07.006.