உள்ளடக்கத்துக்குச் செல்

இரேனியம் மூவாக்சைடு குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரேனியம் மூவாக்சைடு குளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இரேனியம் ஆக்சிகுளோரைடு
இனங்காட்டிகள்
42246-25-3
யேமல் -3D படிமங்கள் Image
  • O=[Re](=O)(=O)Cl
பண்புகள்
ClO3Re
வாய்ப்பாட்டு எடை 269.65 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 4.665 கி/செ.மீ3 (-100 °C)
உருகுநிலை 4.5 °C (40.1 °F; 277.6 K)
கொதிநிலை 113 °C (235 °F; 386 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இரேனியம் மூவாக்சைடு குளோரைடு (Rhenium trioxide chloride) ReO3Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்றதாகவும் காய்ச்சி வடிகட்டக்கூடியதாகவும் அபரகாந்தப் பண்பு கொண்ட திரவமாகவும் இது காணப்படுகிறது. மேலும் இது ஓர் இரேனியம் ஆக்சிகுளோரைடு வகை சேர்மமாகும்.[1]

தயாரிப்பு

[தொகு]

இரேனியம் மூவாக்சைடு சேர்மத்தை குளோரினேற்றம் செய்து இரேனியம் மூவாக்சைடு குளோரைடு தயாரிக்கப்படுகிறது:[2]

2 ReO3 + Cl2 → 2 ReO3Cl

வேதி வினைகள்

[தொகு]

இலூயிசு காரங்களுடன் இரேனியம் மூவாக்சைடு குளோரைடு வினைபுரிந்து ReO3ClL2 என்ற வாய்ப்பாடு கொண்ட கூட்டு விளைபொருட்களைக் கொடுக்கிறது.[3]

இரேனியம் மூவாக்சைடு குளோரைடு நீராற்பகுப்பு வினைக்கு உட்பட்டு பெர் இரேனிக்கு அமிலமாக மாறுகிறது.

கட்டமைப்பு

[தொகு]

1.71 மற்றும் 2.22 Å பிணைப்பு இடைவெளிகள் கொண்ட Re-O மற்றும் Re-Cl பிணைப்புகளால் ஆக்கப்பட்ட நாற்கோண கட்டமைப்பை இரேனியம் மூவாக்சைடு குளோரைடு ஏற்றுக்கொள்கிறது.[4] இதற்கு நேர்மாறாக இரேனியம் மூவாக்சைடு புளோரைடு (ReO3F) எண்முக இரேனியம் மையங்களுடன் பல்லுருவப் படிகக்கட்டமைப்பை ஏற்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. p. 1052. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. O. Glemser; R. Sauer (1963). "Rhenium (VII) Oxychloride". In G. Brauer (ed.). Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Vol. 2pages=1480. NY,NY: Academic Press.
  3. Noh, Wontae; Girolami, Gregory S. (2007). "Rhenium Oxohalides: Synthesis and Crystal Structures of ReO3Cl(THF)2, ReOCl4(THF), Re2O3Cl6(THF)2, and Re2O3Cl6(H2O)2". Dalton Transactions (6): 674–679. doi:10.1039/b616495a. பப்மெட்:17268601. 
  4. Spandl, Johann; Supeł, Joanna; Drews, Thomas; Seppelt, Konrad (2006). "MnO3Cl, Isolation and Crystal Structure". Zeitschrift für Anorganische und Allgemeine Chemie 632 (14): 2222–2225. doi:10.1002/zaac.200600186.