உள்ளடக்கத்துக்குச் செல்

இரேனியம்(IV) குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரேனியம்(IV) குளோரைடு
β-இரேனியம்(IV) குளோரைடின் அலகு செல்.
இரேனியம்(IV) குளோரைடின் அலகு செல்.
பெயர்கள்
வேறு பெயர்கள்
இரேனியம் டெட்ராகுளோரைடு
இனங்காட்டிகள்
13569-71-6
ChemSpider 75414
InChI
  • InChI=1S/4Cl.Re
    Key: YPYBYMCXDNTAKJ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 18469522 PubChem has incorrect charge balance
  • [Cl-].[Cl-].[Cl-].[Cl-].[Re+4]
பண்புகள்
Cl4Re
வாய்ப்பாட்டு எடை 328.01 g·mol−1
தோற்றம் கருப்பு நிற திண்மம்
அடர்த்தி 4.5 கி·செ.மீ−3 (β)
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச் சரிவச்சு
புறவெளித் தொகுதி P2/c, No. 13
Lattice constant a = 636.2 பைக்கோமீட்டர், b = 627.3 பைக்கோமீட்டர், c = 1216.5 பைக்கோமீட்டர்
படிகக்கூடு மாறிலி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இரேனியம்(IV) குளோரைடு (Rhenium(IV) chloride) ReCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிற சேர்மமான இது ஓர் இருமநிலை சேர்மமாக கருதப்படுகிறது. ஆனால் நடைமுறையில் சிறிதளவே இந்நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ReCl4 இன் இரண்டாவது பல்லுருத்தோற்றமும் அறியப்படுகிறது.[1]

தயாரிப்பு[தொகு]

இனியம்(V) குளோரைடு மற்றும் இரேனியம்(III) குளோரைடு ஆகிய ஒரே தனிமம் வெவ்வேறு ஆக்சிசனேற்ற நிலைகளிலுள்ள இரண்டு சேர்மங்கள் தங்களுக்குள் வினைபுரிந்து இடைநிலை ஆக்சிசனேற்ற நிலை எண்ணைக் கொண்ட சேர்மமான இரேனியம்(IV) குளோரைடு சேர்மத்தை உருவாக்குகின்றன.[2]

120 °செல்சியசு வெப்பநிலையில் டெட்ராகுளோரோயெத்திலீன் சேர்மமும் நல்ல குறைப்பானாகப் பயன்படுகிறது:

கட்டமைப்பு[தொகு]

எக்சு கதிர் படிகவியல் ஆய்வுகள் ஒரு பல்லுருவக் கட்டமைப்பை வெளிப்படுத்துகின்றன. Re–Re பிணைப்புகளுக்கு இடையிலான தூரம் 2.728 Å ஆகும். இரேணியம் அணுக்கள் ஆறு குளோரைடு ஈந்தணைவிகளால் சூழப்பட்ட எண்முக தோற்றத்திலுள்ளன. இரண்டு எண்கோணங்கள் இம்முகங்களுடன் பகிர்ந்து கொள்கின்றன். Re2Cl9 துணைக்குழுக்கள் குளோரைடு ஈந்தணைவிகளுடன் பாலம் அமைப்பதன் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. கட்டமைப்பின் மையக்கருத்து - மூலை-பகிர்வு ஈரெண்முகம் - இரும உலோக ஆலைடுகளில் அசாதாரணமானதாகும். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Chemistry of Rhenium(IV) Chloride. II. Structure of One of the Polymorphs (β) and Evidence for a New Polymorph (γ)". Journal of the American Chemical Society 95 (4): 1159–1163. 1973. doi:10.1021/ja00785a027. 
  2. Erwin Riedel; Christoph Janiak (2011). Anorganische Chemie. Walter de Gruyter. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-311022567-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரேனியம்(IV)_குளோரைடு&oldid=4013942" இலிருந்து மீள்விக்கப்பட்டது