இரேனியம்(III) புரோமைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
13569-49-8 | |
ChemSpider | 15750935 |
EC number | 236-984-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83579 |
| |
பண்புகள் | |
Re3Br9 | |
வாய்ப்பாட்டு எடை | 425.92 கி/மோல் |
தோற்றம் | கருப்பு நிற பளபளப்பான திண்மம்[1] |
உருகுநிலை | 500 °C (932 °F; 773 K)[2] (பதங்கமாகும்) |
வினைபுரியும்[1] | |
கரைதிறன் | டை எத்தில் ஈதர் மற்றும் அசிட்டோன் கரைப்பான்களில் சிறிதளவு கரையும், மெத்தனால் மற்றும் அமோனியா கரைப்பான்களில் கரையும்[1] |
கட்டமைப்பு | |
மூலக்கூறு வடிவம் | |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-164.4 கிலோயூல்/மோல்[3] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இரேனியம்(III) குளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இரேனியம்(III) புரோமைடு (Rhenium(III) bromide) Re3Br9 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் பளபளப்பான ஒரு படிகத் திண்மமாக இது காணப்படுகிறது. . இரேனியம்(III) புரோமைடு தண்ணீருடன் வினைபுரிந்து இரேனியம்(IV) ஆக்சைடை உருவாக்குகிறது. கட்டமைப்பில் இது இரேனியம்(III) குளோரைடுடன் சம கட்டமைப்பு கொண்டதாக உள்ளது.[1][4]
தயாரிப்பு
[தொகு]நைட்ரசன் வாயுச் சூழலில் 500 பாகை செல்சியசு வெப்பநிலையில் இரேனியம் உலோகம் புரோமின் வாயுவுடன் வினைபுரிந்து இரேனியம்(III) புரோமைடு உருவாகிறது.:[2]
- 6Re + 9Br2 → 2Re3Br9
ஒருவேளை வளிமண்டலத்தில் ஆக்சிசன் வாயுச் சூழல் இருந்தால் இரேனியம்(III) ஆக்சிபுரோமைடு உருவாகும்.[2]
இருப்பினும், பொட்டாசியம் அறுபுரோமோயிரேனேட்டு(IV) சேர்மத்துடன் வெள்ளி நைட்ரேட்டு சேற்த்து வினைபுரியச் செய்து இரேனியம்(III) புரோமைடு தயாரிப்பதே மிகவும் பொதுவான ஒரு தயாரிப்பு முறையாகும். இவ்வினையில் வெள்ளி அறுபுரோமோயிரேனேட்டு(IV) சேர்மம் முதலில் உருவாகும். பின்னர் இந்த சேர்மத்தை 600 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தி இரேனியம்(III) புரோமைடு தயாரிக்கப்படுகிறது.[1][3]
- K2ReBr6 + 2AgNO3 → Ag2ReBr6 + 2KNO3
- 6Ag2ReBr6 → 12AgBr + 3Br2 + 2Re3Br9
இரேனியம்(V) புரோமைடை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தி இரேனியம்(III) புரோமைடு தயாரிப்பது மற்றொரு மாற்று வழிமுறையாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Richard J. Thompson; Ronnie E. Foster; James L. Booker; Stephen J. Lippard (1967). "Rhenium(III) Bromide". In Muetterties, Earl (ed.). Inorganic Syntheses. Inorganic Syntheses (in English). Vol. 10. McGraw-Hill, Inc. pp. 58–61. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132418.ch9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470132418.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 2.0 2.1 2.2 Harro Hagen; Adolf Sieverts (1933). "Rheniumtribromid" (in German). Zeitschrift für anorganische und allgemeine Chemie (Verlag GmbH & Co. KGaA, Weinheim) 215 (1): 111–112. doi:10.1002/zaac.19332150114.
- ↑ 3.0 3.1 J. P. King; J. W. Cobble (1960). "The Thermodynamic Properties of Technetium and Rhenium Compounds. VII. Heats of Formation of Rhenium Trichloride and Rhenium Tribromide. Free Energies and Entropies" (in English). Journal of the American Chemical Society 82 (9): 2111–2113. doi:10.1021/ja01494a005.
- ↑ V. V. Ugarov (1971). "Electron-diffraction investigation of the structure of the Re3Br9 molecule" (in English). Journal of Structural Chemistry 12 (2): 286–288. doi:10.1007/BF00739116. https://archive.org/details/sim_journal-of-structural-chemistry_1971-04_12_2/page/286.