மெத்தனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மெத்தனால்
Methanol
Methanol
Methanol
Methanol
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
methanol
வேறு பெயர்கள்
ஐதராக்சிமெத்தேன்
(hydroxymethane)
மெத்தில் ஆல்க்கஃகால்
(methyl alcohol)
மெத்தில் ஐதரேட்டு
(methyl hydrate)
மரச் சாராயம்
(wood alcohol)
carbinol
இனங்காட்டிகள்
67-56-1 N
ChemSpider 864
யேமல் -3D படிமங்கள் Image
வே.ந.வி.ப எண் PC1400000
பண்புகள்
CH3OH
வாய்ப்பாட்டு எடை 32.05 g/mol
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.7918 g/cm3
உருகுநிலை
கொதிநிலை 64.7 °C, 148.4 °F (337.8 K)
கலக்கக்கூடியது
காடித்தன்மை எண் (pKa) ~ 15.5
பிசுக்குமை 0.59 mPa·s at 20 °C
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 1.69 D (gas)
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு தீபற்றக்கூடியது (F)
நச்சுத்தன்மை (T)
R-phrases R11, R23/24/25, வார்ப்புரு:R39/23/24/25
S-phrases (S1/2), S7, S16, S36/37, S45
தீப்பற்றும் வெப்பநிலை 11 °C
தொடர்புடைய சேர்மங்கள்
ஆல்க்கஃகால்கள்
தொடர்புடையவை
எத்தனால்
புரொப்பொனால்
பியூட்டனால்
தொடர்புடைய சேர்மங்கள் குளோரோமெத்தேன்
மெத்தாக்சிமெத்தேன்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மெத்தனால் என்னும் வேதிப்பொருள் ஒரு வகை ஆல்க்கஃகால் (சாராயம்). இதனை மெத்தில் ஆல்க்கஃகால் (அல்லது மீத்தைல் ஆல்க்கஃகால்), கார்பினால், மரச்சாராயம் (wood alcohol), மர நாப்தா (wood naphtha) என்றும் பல பெயர்களில் அழைப்பர். இவ் வேதிப்பொருள் மிகவும் நச்சுத்தன்மை கொண்டது. இதன் வேதி வாய்பாடு CH3OH (பல இடங்களில் சுருக்கக்குறியீடு MeOH). அதாவது ஒரு மெத்தேனில் உள்ள ஓர் ஐதரச அணுவுக்கு மாறாக அங்கே ஒரு -OH என்னும் ஐதராக்சைல் வேதி வினைக்குழு இணைந்திருந்தால் அது மெத்தனால். இப்பொருளை ஒருவர் 10 மில்லிலீட்டர் குடித்தால் அவர் கண்கள் குருடாகும், 100 மில்லிலீட்டர் குடித்தால் இறப்பு நேரிடும். சாராயம் அல்லது ஆல்க்கஃகால்களில் இது மிகவும் எளிமையான, குறைந்த மூலக்கூறு நிறை கொண்ட, எளிதில் ஆவியாகும், நிறமற்ற, தீபற்றக்கூடிய, நச்சுத்தன்மை மிக்க, எத்தனால் போன்ற ஆனால் அதனைவிட இனிப்பான மணம் கொண்ட நீர்மம்[1] அறை வெப்பநிலையில் கரையும் தன்மை கொண்ட முனைமை உடைய நீர்மம். இதனை எரியெண்ணெய் முதலியன குளிரில் உறையாமல் இருக்கப் பயன்படுத்தும் உறைவெதிர்ப்பியாகவும் (antifreeze), கரைப்பான் மற்றும் எரிபொருளாகவும், பயன்படுகின்றது. எத்தனாலை நச்சுத்தன்மை உடையதாக மாற்றச் சேர்க்கும் பொருளாகவும் இது பயன்படுகின்றது (ஏறத்தாழ 10%). செடிகொடியில் இருந்து பெறும் எண்ணெய் அல்லது உயிரின கொழுப்பில் இருந்து பையோடீசல் (biodiesel) என்னும் எரிபொருள் செய்யப் பயன்படும் மாற்றீடு எசுத்தராக்கம் (transesterification) முறையில் மெத்தனால் பயன்படுகின்றது.

ஆக்சிசன் தேவைப்படா பல வகையான நுண்ணுயிரிகள் (ஆக்சிசன்கொளா பாக்டீரியாக்கள், anaerobic organisms) இயற்கையில் மெத்தனாலை வெளிவிடுகின்றன. எனவே சிறிதளவு காற்றில் மெத்தனால் ஆவி உள்ளது. ஆனால் சில நாட்களில் காற்றுமண்டலத்தில் உள்ள மெத்தனால் ஆவி, கதிரொளியின் உதவியால் ஆக்சிசன் ஏற்றம் பெற்று கார்பன்-டை-ஆக்சைடாகவும் நீராகவும் மாறிக்கொண்டிருக்கும்.

மெத்தனால் காற்றில் உள்ள ஆக்சிசனோடு சேர்ந்து கார்பன்-டை-ஆக்சைடாகவும் நீராகவும் மாறும் வேதி வினை:

2 CH3OH + 3 O2 → 2 CO2 + 4 H2O

எத்தனால் குடிக்ககூடும் சாராயம் ஆகையால், தொழிலகங்களில் பயன்படும் எத்தனாலை வேறுவழிகளில் பயன்படுத்தாமலிருக்க சிறிதளவு நச்சுத்தன்மை கொண்ட மெத்தனாலைக் கலப்பர். இதற்கு "இயறகைநீக்கம்" ("திரிப்பு", denature) என்று பெயர். ஒரு காலத்தில் மரத்தை காய்ச்சி வடிப்பது மூலம் இதனைப் பெற்றாதால் இதனை மரச்சாராயம் என்பர். ஆனால் தற்காலத்தில் செயற்கையாக வேதி வினைக்கூட்டு முறைப்படி பலநிலை வினை முறைகளால் மெத்தனால் உருவாக்கப்படுகின்றது. இயற்கைவளி (natural gas) அல்லது கரி வளி (coal gas), நீராவி முதலியவற்றால் ஓர் உலையில் ஐதரசனும் கார்பன் மோனாக்சைடும் உருவாக்கப்படுகின்றன. பின்னர் இவற்றை ஒரு வினையூக்கியின் துணையுடன் கூடிய சூழ் அழுத்த நிலையில் வினையுறச்செய்து மெத்தனால் உருவாக்கப்படுகின்றது. தாள் செய்யும் ஆலைகள் (பேப்பர் மில்) முதலிவற்றில் கழிவுப்பொருளாக உள்ள மரக்கூழ், கழிவுப்பொருளாகிய செடிகொடி முதலான உயிர்ப்பொருள்களை வளிமமாக்கியும் மெத்தனால் செய்யப்படுகின்றது.

வரலாறு[தொகு]

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

  1. National Institute for Occupational Safety and Health (August 22, 2008). "The Emergency Response Safety and Health Database: Methanol". பார்த்த நாள் March 17, 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெத்தனால்&oldid=2219482" இருந்து மீள்விக்கப்பட்டது