எத்திலீன் கிளைக்கால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எத்திலீன் கிளைக்கால்
Ethylene glycol chemical structure.png
Ethylene-glycol-3D-vdW.png
ImageFile
வேதியியல் குறிப்புகள்
Abbreviations MEG
CAS எண் 107-21-1
பப்கெம் 174
ஐசி இலக்கம் 203-473-3
DrugBank DB01867
KEGG D06424
ம.பா.த Ethylene+glycol
ChEBI CHEBI:30742
வே.ந.வி.ப எண் KW2975000
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
Beilstein Reference 505945
Gmelin Reference 943
3DMet B00278
பண்புகள்
மூலக்கூறு வாய்பாடு C2H6O2
வாய்ப்பாட்டு எடை 62.07 g mol-1
அடர்த்தி 1.1132 g/cm³
உருகுநிலை

−12.9 °C, 260 K, 9 °F

கொதிநிலை

197.3 °C, 470 K, 387 °F

நீரில் கரைதிறன் Miscible with water
in all proportions.
பிசுக்குமை 1.61 × 10−2 N*s / m2[1]
தீநிகழ்தகவு
MSDS External MSDS
ஈயூ வகைப்பாடு Harmful (Xn)
முதன்மையான தீநிகழ்தகவுகள் குழந்தைகளுக்கும், வளர்ப்பு விலங்குகளுக்கும் மிகவும் தீங்கிழைக்கக்கூடியது. உட்கொள்ள நேரிட்டால் உடனே மருத்துவ உதவியை நாடவேண்டும்.
NFPA 704

NFPA 704.svg

1
1
0
 
R-phrases R22 S36
S-phrases S26 S36 வார்ப்புரு:S37 வார்ப்புரு:S39 S45 S53
தீப்பற்றும் வெப்பநிலை 111 °C (231.8 °F) (closed cup)
தானே தீபற்றும்
வெப்பநிலை
410 °C (770 °F)
தொடர்புடைய சேர்மங்கள்
டையால்s
தொடர்புடையவை
Propylene glycol
Diethylene glycol
Triethylene glycol
Polyethylene glycol
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.

எத்திலீன் கிளைக்கால் (Ethylene glycol) (ஐயுபிஏசி பெயர்: எத்தேன் -1,2-டையால் (ethane-1,2-diol), பரவலாகப் பயன்படும் ஒரு கரிமவேதியியல் சேர்மம். எத்திலீன் கிளைக்கால், தானுந்துகளின் எரியெண்ணெய், குளிரில் உறையாதிருக்கப் பயன்படும் உறையெதிர்ப்பிகளில் (antifreeze) பயன்படுகின்றது, பல்பகுதியங்கங்கள் (பாலிமர்கள்) உருவாக்கப் பயன்படு முன்னுருப்படிகளில் ஒன்றாகப் பயன்படுகின்றது. தூய எத்திலீன் கிளைக்கால், நிறமற்ற, மணமற்ற, பிசுப்புநீர்ம (syruppy), இனிப்புச்சுவை உடைய நீர்மம், ஆனால் இதுவொரு நச்சுப்பொருள். உட்கொள்ள நேரிட்டால் இறக்கவும் நேரிடும்.

எத்திலீன் கிளைக்காலை, எடைமிகுந்த ஈத்தர் டையால் ஆகிய டையெத்திலீன் கிளைக்காலோடு (diethylene glycol), அல்லது நச்சுத்தன்மை அற்ற பாலி ஈத்தர் பல்பகுதியமமாகிய பாலியெத்திலீன் கிளைக்காலோடு (polyethylene glycol)குழப்பிக்கொள்ளக்கூடாது.

வரலாறும் இயற்கையில் கிடைப்பதும்[தொகு]

எத்திலீன் கிளைக்கால் முதன்முதலாக 1859 இல் பிரான்சிய வேதியியலாளர் சார்லசு-அடோல்ஃவ் வுர்ட்ஃசு (Charles-Adolphe Wurtz) என்பவர் எத்திலீன் கிளைக்கால் டையசிட்டேட் இல் இருந்து பொட்டாசியம் ஐதராக்சைடு உடன் சேர்த்த சோப்பாக்க முறையின் வழி உருவாக்கினார். 1860 இல் எத்திலீன் ஆக்சைடை ஐதரேசன் (hysdration) வழியும் செய்தார். இரண்டாம் உலகப்போருக்கும் முன் தொழில்நோக்கில் பெரிய அளவில் படைக்கப்படவில்லை. ஆனால் பின்னர் இடாய்ச்சுலாந்தில் கிளிசராலுக்கு மாற்றாக வெடிபொருள் தொழிலங்களில் இதனை எத்திலீன் டைக்குளோரைடில் இருந்து உருவாக்கினர்.

ஐக்கிய அமெரிக்காவில் 1917 இல் எத்திலீன் குளோரோஐதிரின் (ethylene chlorohydrin) வழியாக எத்திலீன் கிளைக்காலை ஒருவாறு அறைகுறையாக தொழிசார்முறையாகச் செய்தனர். 1925 இல்தான் முதன்முதலாக பெரிய அளவில் மேற்கு வர்ச்சீனியாவில் உள்ள தென் சார்லசுட்டன் என்னும் இடத்தில் கார்பைடும் கார்பன் கெமிக்கல் கம்ப்பெனி (இப்பொழுது யூனியன் கார்பைடு கார்ப்பொரேசன்) படைக்கத் தொடங்கியது. 1929 முதல் எல்லா டைனமைட்டு என்னும் வெடிபொருள் படைப்புசாலைகள் எல்லாவற்றிலும் எத்திலீன் கிளைக்கால் பயன்படுத்தப்பட்டது.

1937 இல் கார்பைடு நிறுவனம், எத்திலீனை எத்திலீன் ஆக்சைடாக ஆக்க ஆவிநிலை ஆக்சைடாக்க முறைக்கு லிஃவோர்ட் செய்முறையைக் (Lefort's process) கையாண்டது. 1953 ஆம் ஆண்டுவரை நேரடியான ஆக்சைடாக்கும் முறையில் கார்பபைடு நிறுவனம் தனிமுழுதாண்மை பெற்று இருந்தது. அதன்பின் சனட்டிஃவிக் டிசைன் புராசசு (Scientific Design process) வணிகமுறைப்பயன்பாட்டாக்கி உரிமங்கள் வழன்கப்பட்டன.

இந்த மூலக்கூறு விண்வெளியிலும் கண்டுபிடிக்கப்பட்டது [2]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. Elert, Glenn. "Viscosity". The Physics Hypertextbook. பார்த்த நாள் 2007-10-02.
  2. J. M. Hollis, F. J. Lovas, P. R. Jewell, L. H. Coudert (2002-05-20). "Interstellar Antifreeze: Ethylene Glycol". The AstroPhysical Journal 571 (1): L59–L62. doi:10.1086/341148. Bibcode: 2002ApJ...571L..59H. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எத்திலீன்_கிளைக்கால்&oldid=1883248" இருந்து மீள்விக்கப்பட்டது