மெதிலீன் (சேர்மம்)
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
டைஐதரிடோகார்பன்(2•)[1]
| |||
வேறு பெயர்கள் | |||
இனங்காட்டிகள் | |||
2465-56-7 | |||
Beilstein Reference
|
1696832 | ||
ChEBI | CHEBI:29357 | ||
ChemSpider | 109779 | ||
Gmelin Reference
|
56 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
ம.பா.த | கார்பீன் | ||
பப்கெம் | 123164 | ||
| |||
பண்புகள் | |||
CH 22• | |||
வாய்ப்பாட்டு எடை | 14.0266 கி மோல்−1 | ||
தோற்றம் | நிறமற்ற வாயு | ||
வினைபுரிகிறது | |||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
386.39 கிலோ ஜூல் மோல்−1 | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
193.93 ஜூல் கெல்வின்−1 mol−1 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மெதிலீன் (Methylene) (முறையான பெயரிடு முறையின்படி மெதிலிடீன், மற்றும் டைஐதரிடோகார்பன்) கார்பீன் என்றும் அழைக்கப்படுகிற ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு CH
2 ( [CH
2]எனவும் எழுதப்படலாம்). இது ஒரு நிறமற்ற வாயு ஆகும். இடை-அகச்சிவப்புக் கதிர் வீச்சின் அலை நீளத்தில் ஒளிரக்கூடியதும், நீர்த்த நிலையிலோ அல்லது ஒரு சேர்க்கைப் பொருளாகவோ மட்டும் நிலைத்தன்மை உடையதுமான சேர்மம் ஆகும்.
கார்பீன் வகைச் சேர்மங்களில் மிகவும் எளியதும் முதலாவதும் மெதிலீன் ஆகும். [2]:p.7[3] இச்சேர்மமானது மிகக்குறைந்த அழுத்தத்தில் அல்லது ஒரு வேதி வினையின் ஊடாக மிகக் குறுகிய காலமே நிலைத்து நிற்கின்ற ஒரு இடைவினைப்பொருளாகவோ மட்டும் கண்டறியப்படுகிறது.[4]
பெயரிடும் முறை
[தொகு]பொது வழக்கத்தில் உள்ள கார்பீன் என்ற பெயரே முன்னுரிமையளிக்கப்படும் பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியத்தால் வழங்கப்பட்ட பெயராகும். அமைப்புரீதியான பெயர்கள் மெதிலிடீன் மற்றும் டைஐதரிடோகார்பன் ஆகியவையும் செல்லத்தக்க பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியத்தின் பெயர்களாகும். இந்த இரண்டு பெயர்களில் முதலாவது பதிலியீட்டு முறையினையும், இரண்டாவது சேர்க்கை முறை பெயரிடு முறையினையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.
மெதிலிடீன் என்பது இரண்டு ஐதரசன் அணுக்கள் நீக்கப்பட்ட மீத்தேனாக கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "methanediyl (CHEBI:29357)". Chemical Entities of Biological Interest. UK: European Bioinformatics Institute. 14 January 2009. IUPAC Names. பார்க்கப்பட்ட நாள் 2 January 2012.
- ↑ Roald Hoffman (2005), Molecular Orbitals of Transition Metal Complexes. Oxford. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-853093-5
- ↑ தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "carbenes". Compendium of Chemical Terminology Internet edition.
- ↑ W. B. DeMore and S. W. Benson (1964), Preparation, properties, and reactivity of methylene. In Advances in Photochemistry, John Wiley & Sons, 453 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0470133597