கார்பனைல் சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்பனைல் சல்பைடு
Carbonyl sulfide
கார்பனைல் சல்பைடு
Space-filling 3D model of carbonyl sulfide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
கார்பனைல் சல்பைடு[1]
ஆக்சிடோசல்பிடோகார்பன்[1]
இனங்காட்டிகள்
463-58-1 Y
ChEBI CHEBI:16573 Y
ChemSpider 9644 Y
EC number 207-340-0
InChI
 • InChI=1S/COS/c2-1-3 Y
  Key: JJWKPURADFRFRB-UHFFFAOYSA-N Y
 • InChI=1/COS/c2-1-3
  Key: JJWKPURADFRFRB-UHFFFAOYAF
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C07331 Y
பப்கெம் 10039
 • O=C=S
பண்புகள்
COS
வாய்ப்பாட்டு எடை 60.075 கி/மோல்
தோற்றம் நிறமற்ற வாயு
மணம் சல்பைடு போன்ற நெடி
அடர்த்தி 2.51 கி/லி
உருகுநிலை −138.8 °C (−217.8 °F; 134.3 K)
கொதிநிலை −50.2 °C (−58.4 °F; 223.0 K)
0.376 கி/100 மி.லி (0 °செல்சியசு)
0.125 கி/100 மி.லி (25 °செல்சியசு)
கரைதிறன் பொட்டாசியம்ன் ஐதராக்சைடு, கார்பன் டை சல்பைடு போன்றவற்றில் மிக நன்றாகக் கரையும்.
எத்தனால் தொலுயீன் போன்ற கரைப்பான்களில் கரையும்.
-32.4•10−6செ.மீ3/மோல்
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0.65 D
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-141.8 kJ/mol
நியம மோலார்
எந்திரோப்பி So298
231.5 J/mol K
வெப்பக் கொண்மை, C 41.5 J/mol K
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Carbonyl sulfide MSDS
வெடிபொருள் வரம்புகள் 12-29%
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

கார்பனைல் சல்பைடு (Carbonyl sulfide) என்பது COS என்ற நேர்கோட்டு மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இவ்வாய்ப்பாட்டை OCS என்றும் எழுதுவார்கள். இதன்படி ஒரு கார்பனைல் குழு கந்தக அணுவுடன் இரட்டைப் பிணைப்பால் பிணைக்கப்பட்டிருக்கும். மேலும் இவ்வாய்ப்பாடு அதன் கட்டமைப்பை குறிப்பதில்லை. நிறமற்ற இவ்வாயு தீப்பற்றி எரியும். இணைதிறன் ஒத்த எலக்ட்ரான் எண்ணிக்கையுடைய கார்பன் டை ஆக்சைடுக்கும் கார்பன் டைசல்பைடுக்கும் இடைப்பட்ட ஓர் இடைநிலையாக கார்பனைல் சல்பைடை கருதமுடியும். ஈரப்பதத்தின் முன்னிலையில் கார்பனைல் சல்பைடு காரபன் டை ஆக்சைடு மற்றும் ஐதரசன் சல்பைடாக சிதைவடைகிறது[2][3][4].

அமினோ அமிலங்களிலிருந்து பெப்டைடுகள் உருவாகும் வினையில் இது வினையூக்கியாகச் செயல்படுகிறது. மில்லர்-யுரே சோதனையின் நீட்சியாக இவ்வினை கருதப்படுகிறது, மேலும் உயினத் தோற்றத்தில் கார்பனைல் சல்பைடு முக்கியமான பங்கு வகித்திருப்பதாகவும் பரிந்துரைக்கப்படுகிறது[5].

தோற்றம்[தொகு]

கார்பனைல் சல்பைடு பில்லியனுக்கு 0.5 ± 0.05 பகுதிகள் என்ற அளவில் வளிமண்டலத்தில் இயற்கையாகவே இருக்கும் கந்தகச் சேர்மம் ஆகும். ஏனெனில் பெருங்கடல்கள், எரிமலைகள் மற்றும் ஆழ்கடல் துவாரங்களில் இருந்து இது வளிமண்டலத்தில் வெளியேற்றப்படுகிறது. எனவே, உலகளாவிய கந்தகச் சுழற்சியில் இது ஒரு குறிப்பிடத்தக்க சேர்மம் ஆகும். அண்டார்டிகா பனிக்கட்டிகள் மற்றும் பனிப்பாறைகளுக்கு மேலே பனியில் சிக்கியுள்ள காற்றிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகள் 1640 முதல் இன்று வரையான OCS செறிவுகளின் விரிவான வரைபடத்தை வழங்கியுள்ளன. அண்டார்டிகா பனிக்கட்டிகள் மற்றும் பனிப்பாறைகளுக்கு மேலே பனியில் சிக்கியுள்ள காற்றிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகள் 1640 முதல் இன்று வரையான OCS செறிவுகளின் விரிவான வரைபடத்தை வழங்கியுள்ளன. இந்த அளவீடுகள் வளிமண்டலத்திற்கு இவ்வாயுவுடன் தொடர்புடைய மானுடவியல் மற்றும் மானுடவியல் அல்லாத மூலங்களின் ஒப்பீட்டு முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள அனுமதிக்கின்றன[6].

அடுக்கு மண்டல சல்பேட்டு அடுக்கிற்கு கடத்தப்படும் சிறிதளவு கார்பனைல் சல்பைடு கந்தக அமிலமாக ஆக்சிசனேற்றப்படுகிறது[7]. இககந்தக அமிலம் அங்கு துகள்களாக உருவாகிறது. ஒளிச்சிதறல் காரணமாக ஆற்றல் சமநிலையை பாதிக்கப்படுகிறது[8]. எரிமலை செயல்பாட்டிலிருந்து வரும் கந்தக டை ஆக்சைடு குறிப்பிடத்தக்க அளவாக இருப்பினும் கார்பனைல் சல்பைடின் நீண்ட வளிமண்டல வாழ்நாள் இதை அடுக்கு மண்டல சல்பேட்டிற்கான முக்கிய ஆதாரமாக மாற்றுகிறது. நிலப்பரப்பு தாவரங்களின் ஒளிச்சேர்க்கை செயற்பாட்டின்யின் போது கார்பன் டை ஆக்சைடு எடுக்கப்படுதல், தொடர்புடைய கடல் நொதிகளால் நிகழும் கடல் நீரின் நீராற்பகுப்பு போன்ற செயல்பாடுகள் மூலமாக கார்பனைல் சல்பைடு வளிமண்டலத்திலிருந்து அகற்றப்படுகிறது[9][10] Loss processes, such as these, limit the persistence (or lifetime) of a molecule of COS in the atmosphere to a few years.. இது போன்ற இழப்பு செயல்முறைகள் வளிமண்டலத்தில் COS மூலக்கூறின் நிலைத்தன்மையை அல்லது வாழ்நாளை ஒரு சில ஆண்டுகள் என்ற நிலைக்கு கட்டுப்படுத்துகின்றன.

ஒரு வேதியியல் இடைநிலையாகவும் கார்பன் டைசல்பைடு உற்பத்தியின் உடன் விளைபொருளாகவும் இருப்பதே கார்பனைல் சல்பைடு தயாரிப்பின் மிகப்பெரிய முதன்மை பயன்பாடு ஆகும். இருப்பினும், இது வாகனங்கள் மற்றும் அவற்றின் இரப்பர் சக்கரங்கள் ஆகியவற்றிலிருந்தும், நிலக்கரி எரிப்பு மின் உற்பத்தி நிலையங்கள், கற்கரி அடுப்புகள், உயிரி எரிப்பு, மீன் பதப்படுத்துதல், குப்பை மற்றும் நெகிழி எரிப்பு, பெட்ரோலிய உற்பத்தி மற்றும் செயற்கை இழைகள், மாவுப்பொருள் மற்றும் ரப்பர் உற்பத்தி போன்ற செயற்பாடுகளில் வெளியிடப்படுகிறது[11]. கார்பனைல் சல்பைடு உலகளவில் சராசரியாக மொத்தம் ஆண்டுக்கு 3 மில்லியன் டன் உற்பத்தியாகிறது என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானது மனித செயல்பாடுகளுடன் தொடர்புடையது ஆகும். மேலும் இது தொகுப்பு வாயுவில் குறிப்பிடத்தக்க அளவு கந்தகம் கொண்ட அசுத்தமாகும்.

பாலாடைக்கட்டி மற்றும் முன்னதாக தயாரிக்கப்படும் முட்டைக்கோசு குடும்பத்தின் காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்களில் கார்பனைல் சல்பைடு உள்ளது. மேலும் இது சுவடு அளவில் இயற்கையாகவே தானியங்கள் மற்றும் விதைகளில் 0.05–0.1 மிகி • கிலோ கிராம் - 1 வரம்பில் இடம்பெற்றுள்ளது.

கார்பனைல் சல்பைடு விண்மீன் ஊடகத்தில் (விண்மீன் விண்வெளியில் உள்ள மூலக்கூறுகளின் பட்டியலையும் காண்க), 67 பி என்ற வால்விண்மீன் [12] மற்றும் வெள்ளியின் வளிமண்டலத்திலும் காணப்படுகிறது. இங்கு COS சேர்மத்தை கரிமச்சேர்ம்மற்ற முறையில் உற்பத்தி செய்வதில் சிரமம் இருப்பதால் உயிரினம் வாழ்வதற்குரிய சாத்தியத்தை இதுவொரு குறிகாட்டியாகக் குறிப்பிடுகிறது [13].

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (2005). Nomenclature of Inorganic Chemistry (IUPAC Recommendations 2005). Cambridge (UK): RSCIUPAC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85404-438-8. p. 292. மின்னணு வடிவம்.
 2. "Carbonyl Sulfide CASRN: 463-58-1". Hazardous Substances Data Bank. National Library of Medicine.
 3. "Chemical Summary for Carbonyl Sulfide". U.S. Environmental Protection Agency.
 4. Protoschill-Krebs, G.; Wilhelm, C.; Kesselmeier, J. (1996). "Consumption of carbonyl sulphide (COS) by higher plant carbonic anhydrase (CA)". Atmospheric Environment 30 (18): 3151–3156. doi:10.1016/1352-2310(96)00026-X. Bibcode: 1996AtmEn..30.3151P. https://archive.org/details/sim_atmospheric-environment_1996-09_30_18/page/3151. 
 5. "Carbonyl sulfide-mediated prebiotic formation of peptides". Science 306 (5694): 283–6. 2004. doi:10.1126/science.1102722. பப்மெட்:15472077. Bibcode: 2004Sci...306..283L. 
 6. Montzka, S. A.; Aydin, M.; Battle, M.; Butler, J. H.; Saltzman, E. S.; Hall, B. D.; Clarke, A. D.; Mondeel, D. et al. (2004). "A 350-year atmospheric history for carbonyl sulfide inferred from Antarctic firn air and air trapped in ice". Journal of Geophysical Research 109 (D18): 22302. doi:10.1029/2004JD004686. eid D22302. Bibcode: 2004JGRD..10922302M. https://escholarship.org/content/qt17j6m436/qt17j6m436.pdf?t=n6lm7g. 
 7. Paul Crutzen (1976). "The possible importance of COS for the sulfate layer of the stratosphere". Geophysical Research Letters 3 (2): 73–76. doi:10.1029/GL003i002p00073. Bibcode: 1976GeoRL...3...73C. 
 8. Seinfeld, J. (2006). Atmospheric Chemistry and Physics. London: J. Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60119-595-1.
 9. Kettle, A. J.; Kuhn, U.; von Hobe, M.; Kesselmeier, J.; Andreae, M. O. (2002). "Global budget of atmospheric carbonyl sulfide: Temporal and spatial variations of the dominant sources and sinks". Journal of Geophysical Research 107 (D22): 4658. doi:10.1029/2002JD002187. Bibcode: 2002JGRD..107.4658K. 
 10. Montzka, S. A.; Calvert, P.; Hall, B. D.; Elkins, J. W.; Conway, T. J.; Tans, P. P.; Sweeney, C. (2007). "On the global distribution, seasonality, and budget of atmospheric carbonyl sulfide (COS) and some similarities to CO2". Journal of Geophysical Research 112 (D9): 9302. doi:10.1029/2006JD007665. eid D09302. Bibcode: 2007JGRD..11209302M. 
 11. "Automotive tire wear as a source for atmospheric OCS and CS2". Geophysical Research Letters 1 (9): 815–818. 1993. doi:10.1029/93GL00972. Bibcode: 1993GeoRL..20..815P. 
 12. Rosetta Blog. "OMET'S FIREWORK DISPLAY AHEAD OF PERIHELION". blogs.esa.int. European Space Agency. பார்க்கப்பட்ட நாள் 11 August 2015.
 13. Landis, G. A. (2003). "Astrobiology: the Case for Venus". Journal of the British Interplanetary Society 56 (7–8): 250–254. Bibcode: 2003JBIS...56..250L. https://ntrs.nasa.gov/archive/nasa/casi.ntrs.nasa.gov/20030067857_2003079552.pdf. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்பனைல்_சல்பைடு&oldid=3521006" இலிருந்து மீள்விக்கப்பட்டது