பாசுபரசு மோனோநைட்ரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாசுபரசு மோனோநைட்ரைடு மூலக்கூறின் மாதிரி

பாசுபரசு மோனோநைட்ரைடு (Phosphorus mononitride) என்பது PN என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதை பாசுபரசு ஒற்றைநைட்ரைடு என்றும் அழைக்கலாம். பாசுபரசும் நைட்ரசனும் மட்டுமே சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. ஈரணு நைட்ரைடு என்று இச்சேர்மத்தை வகைப்படுத்துகிறார்கள்.

விண்மீனிடை ஊடகத்தில் முதன் முதலாக கண்டறியப்பட்ட பாசுபரசு சேர்மம் பாசுபரசு மோனோநைட்ரைடு ஆகும் [1].

வியாழன் மற்றும் சனி (கோள்)|சனி]] கோள்களிலும், விண்மீனிடை ஊடகத்திலும் இதுவொரு முக்கியமான மூலக்கூறாகக் கருதப்படுகிறது [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Turner, B. E.; John Bally (1987), "Detection of interstellar PN - The first identified phosphorus compound in the interstellar medium", Astrophysical Journal Letters, 321 (1): L75–L79, Bibcode:1987ApJ...321L..75T, doi:10.1086/185009
  2. Viana, Rommel B.; Priscila S.S. Pereira (2009), "A quantum chemical study on the formation of phosphorus mononitride", Chemical Physics, 363 (1–3): 49–58, doi:10.1016/j.chemphys.2009.07.008
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுபரசு_மோனோநைட்ரைடு&oldid=3113992" இலிருந்து மீள்விக்கப்பட்டது