விண்மீன்களிடை ஊடகம்
Jump to navigation
Jump to search
விண்மீன்களிடை ஊடகம் (interstellar medium) என்பது, விண்மீன்களுக்கு இடையிலான வெளியில் பரவியிருக்கும் தூசி, வளிமங்கள் போன்றவற்றைக் குறிக்கும். விண்மீன்களிடை ஊடகம் என்பது, கலக்சிகளில் உள்ள விண்மீன்களுக்கு இடையில் உள்ள பொருட்களைக் குறிக்கும் அதே வேளை, அவ் வெளியில் பரந்திருக்கும், மின்காந்தக் கதிர்வீச்சு, விண்மீன்களிடைக் கதிர்வீச்சுப் புலம் (interstellar radiation field) எனப்படுகின்றது.
விண்மீன்களிடை ஊடகம், அயன்கள், அணுக்கள், மூலக்கூறுகள், பெரிய தூசிப் பருக்கைகள், அண்டக் கதிர்கள், காந்தப் புலங்கள் போன்றவற்றின் மிக ஐதான கலவையைக் கொண்டுள்ளது. இதிலுள்ள பொருட்கள் திணிவு அடிப்படையில் 99% வளிமங்களையும், 1% தூசியையும் கொண்டுள்ளது.