தைட்டானியம்(III) ஆக்சைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
தைட்டானியம்(III) ஆக்சைடு
| |
| வேறு பெயர்கள்
தைட்டானியம் செசுகியுவாக்சைடு
| |
| இனங்காட்டிகள் | |
| 1344-54-3 | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 123111 |
| |
| பண்புகள் | |
| Ti2O3 | |
| வாய்ப்பாட்டு எடை | 143.76 கி/மோல் |
| தோற்றம் | கருநீலக்கருப்பு துகள் |
| மணம் | நெடியற்றது |
| அடர்த்தி | 4.49 கி/செ.மீ3 |
| உருகுநிலை | 2,130 °C (3,870 °F; 2,400 K) (சிதைவடையும்) |
| கரையாது | |
| தீங்குகள் | |
| ஈயூ வகைப்பாடு | பட்டியலிடப்படவில்லை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தைட்டானியம்(III) ஆக்சைடு (Titanium(III) oxide) என்பது Ti2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் தைட்டானியம் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து உருவாகும் தைட்டானியம்(III) ஆக்சைடு அலுமினியம் ஆக்சைடின் படிகஅமைப்புகளில் ஒன்றான குருந்தத்தின்[1] படிக அமைப்புடன் காணப்படுகிறது. 1600°செ வெப்பநிலையில் [1]தைட்டானியம் ஈராக்சைடுடன் உலோக தைட்டானியம் சேர்த்து வினைபுரியச் செய்தால் தைட்டானியம்(III) ஆக்சைடு தயாரிக்க முடியும். ஆக்சிசனேற்றம் செய்யும் தன்மை கொண்ட அமிலங்களுடன்[1] இது வினைபுரிகிறது. 200 °செ வெப்பநிலையில் குறைகடத்தி நிலையில் இருந்து உலோகக் கடத்தி என்ற நிலைக்கு தைட்டானியம்(III) ஆக்சைடு நிலைமாற்றம் அடைகிறது[1].