தையோசயனிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தையோசயனிக் அமிலம்[1]
Skeletal formula of thiocyanic acid
Skeletal formula of thiocyanic acid with the explicit hydrogen added
Spacefill model of thiocyanic acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நைட்ரிடோசல்பனிடோகார்பன்[2]
இனங்காட்டிகள்
463-56-9 Yes check.svgY
3DMet B00344
ChEBI CHEBI:29200 Yes check.svgY
ChEMBL ChEMBL84336 Yes check.svgY
ChemSpider 760 Yes check.svgY
EC number 207-337-4
Gmelin Reference
25178
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C01755 N
ம.பா.த thiocyanic+acid
பப்கெம் 781
பண்புகள்
CHNS
வாய்ப்பாட்டு எடை 59.09 g·mol−1
தோற்றம் நிறமற்றது, எண்ணேய்பசை நீர்மம்
மணம் காரநெடி
அடர்த்தி 2.04 கி/செ.மீ3
உருகுநிலை
கலக்கும்
கரைதிறன் எத்தனால், இரு எத்தில் ஈதர் ஆகியவற்றில் கரையும்
மட. P 0.429
காடித்தன்மை எண் (pKa) 0.926
காரத்தன்மை எண் (pKb) 13.071
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு ஊறு விளைவிக்கும் Xn
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

தையோசயனிக் அமிலம் (Thiocyanic acid ) என்பது HSCN என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் அதனுடைய சமபகுதியச் சேர்மமான சமதையோசயனிக் அமிலத்துடன் இணைந்து கலவையாகக் காணப்படுகிறது. சமதையோசயனிக் அமிலத்த்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு HNCS ஆகும். சயனிக் அமிலத்தினுடைய கந்தக ஒப்புமை வரிசையே தையோசயனிக் அமிலம் ஆகிறது[3].

20 0 செ வெப்பநிலையில் இவ்வமிலத்தின் அமிலத்தன்மை எண் 1.1 என்பதால் இதுவொரு வலிமை குறைந்த அமிலமாக இருக்கிறது மற்றும் சுழி அயனித்திறன் அளவை எட்டுமளவிற்கு நீட்டல் கணிப்பு எல்லை உடையதாகவும் உள்ளது[4].

தையோசயனிக் அமிலத்தில், கார்பன் மற்றும் நைட்ரசன் அணுக்களுக்கு இடையில் ஒரு முப்பிணைப்பு இருக்கலாம் என்று முன்கணித்துக் கூறப்பட்டுள்ளது. நிறமாலையியல் ஆய்வில் உணரப்பட்டாலும் தூய்மையான தனித்த நிலையில் இச்சேர்மத்தை தனிமைப்படுத்த இயலவில்லை[5].

தையோசயனிக் அமிலத்தின் உப்புகளும் எசுத்தர்களும் தையோசயனேட்டுகள் எனப்படுகின்றன. உப்புகள் தையோசயனைடு (−SCN) அயனிகள் மற்றும் பொருத்தமான உலோக நேர்மின் அயனிகளாலும் ஆக்கப்பட்டுள்ளன, பொட்டாசியம் தையோசயனேட்டு (KSCN) உப்பை இதற்கு உதாரணமாகக் கூறலாம். தையோசயனிக் அமிலத்தின் எசுத்தர்கள் R-SCN என்ற பொதுக் கட்டமைப்பைக் கொண்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Merck Index, 11th Edition, 9257.
  2. "thiocyanic acid (CHEBI:29200)". Chemical Entities of Biological Interest. USA: European Bioinformatics Institute. 18 October 2009. Main. 5 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. Holleman, A. F.; Wiberg, E. Inorganic Chemistry Academic Press: San Diego, 2001. ISBN 0-12-352651-5.
  4. Martell, A. E.; Smith, R. M.; Motelaitis, R. J. NIST Database 46 National Institute of Standards and Technology: Gaithersburg, MD, 2001.
  5. Wierzejewska, M.; Mielke, Z. (2001). "Photolysis of Isothiocyanic Acid HNCS in Low-Temperature Matrices. Infrared Detection of HSCN and HSNC Isomers". Chemical Physics Letters 349: 227–234. doi:10.1016/S0009-2614(01)01180-0. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தையோசயனிக்_அமிலம்&oldid=2747145" இருந்து மீள்விக்கப்பட்டது