கோபால்ட்டு(II) தயோசயனேட்டு
![]() | |
இனங்காட்டிகள் | |
---|---|
3017-60-5 ![]() | |
ChemSpider | 17166 ![]() |
EC number | 221-156-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 18174 |
SMILES
| |
பண்புகள் | |
C2CoN2S2 | |
வாய்ப்பாட்டு எடை | 175.098 கி/மோல் |
+11,090·10−6 செமீ3/மோல் | |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
ஈயூ வகைப்பாடு | ![]() ![]() |
R-சொற்றொடர்கள் | R20 R21 R22 R32 R50 R53 |
S-சொற்றொடர்கள் | S13 S60 S61 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
கோபால்ட்டு(II) தயோசயனேட்டு (Cobalt Thiocyanate) கோபால்ட்டின் கனிமச் சேர்மம் ஆகும். இந்தச் சேர்மம், கோகோயினின் இருப்பைக் கண்டறியப் பயன்படும் கோபால்ட்டு தயோசயனேட்டு சோதனையில் பயன்படுவதன் காரணமாக நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.
பரவலான தவறான மற்றும் பொய்யான சாட்சியளிப்புகள் மற்றும் தண்டனைகளைத் தவிர்ப்பதில் இந்த சோதனை முக்கியப்பங்கு வகிக்கிறது. டெக்சாசு மாநில ஆரிசு மாவட்ட வழக்கறிஞர் அலுவலகங்கள், நூற்றுக்கணக்கான வழக்குகளில் தவறாக தீர்ப்புகளைக் கண்டறிந்து தவறுதலாகத் தண்டனையளிக்கப்பட்டவர்களை அறிவிக்க முயன்று கொண்டுள்ளன.[1][2]
தயாரிப்பு[தொகு]
இந்த சேர்மமானது கோபால்ட்டு(II) சல்பேட்டு நீர்க்கரைசல் மற்றும் பேரியம் தயோசயனேட்டு ஆகியவற்றுக்கிடையேயான உப்புக்கனின் இடப்பெயர்ச்சி வினையின் காரணமாக தயாரிக்கப்படலாம். தேவையான சேர்மத்தைக் கரைசலில் விட்டுவிட்டு பேரியம் சல்பேட்டானது வீழ்படிவாகிறது:[3]
- CoSO4 (aq) + Ba(SCN)2 (aq) → BaSO4 (s) + Co(SCN)2 (aq)
கோபால்ட்டு தயோசயனேட்டு சோதனை[தொகு]
கோபால்ட்டு தயோசயனேட்டு வினைக்காரணியானது 490 மில்லிலிட்டர் வாலைவடிநீர் மற்றும் 500 மில்லிலிட்டர் கிளிசரால் ஆகியவை சேர்ந்த கலவையில் 10 கிராம் கோபால்ட்டு (II) தயோசயனேட்டைக் கரைப்பதன் மூலம் கிடைக்கிறது.[4]
கோபால்ட்டு தயோசயனேட்டு சோதனையானது சோதிக்கப்பட வேண்டிய வேதிப்பொருளை 2 முதல் 4 மில்லிகிராம் வரை ஒரு கண்ணாடி சோதனைக்குழாயில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதனுடன் 5 சொட்டுகள் கோபால்ட்டு தயோசயனேட்டு வினைக்காரணியானது சேர்க்கப்படுகிறது. நன்கு குலுக்கிய பிறகு 1 அல்லது 2 சொட்டுகள் அடர் ஐதரோகுளோரிக் அமிலம் சேர்க்கப்படுகிறது.(வேறு அமிலங்களும் சேர்க்கப்படலாம்) [5]) தற்போது சோதனைக்குழாயானது மீண்டும் குலுக்கப்படுகிறது. பிறகு, 10 சொட்டுகள் குளோரோஃபார்ம் அல்லது (குளோரோபார்மை ஒத்த கரைப்பான்கள்) சேர்க்கப்படுகிறது. சோதனைக் குழாயானது சிறிது நேரம் அசைக்கப்படாமல் வைக்கப்படுகிறது. திரவமானது இரண்டு அடுக்குகளாக பிரிய அனுமதிக்கப்படுகிறது. குளோரோபார்ம் (கரிம) அடுக்கின் நிறமானது பதிவு செய்யப்படுகிறது.
கோகெயின் ஐதரோகுளோரைடுடன் கோபால்ட்டு தயோசயனேட்டை சேர்ப்பதால், கோகேயின் மேற்பரப்பின் துகள்கள் பிரகாசமான நீல நிறமாக மாற்றமடையும். (கோகேயினை அடிப்படையாகக் கொாண்ட சேர்மங்களுக்கு வெளிர் நீல நிறம் கிடைக்கிறது) ஒன்று அல்லது இரண்டு சொட்டுகள் ஐதரோகுளோரிக் அமிலம் சேர்க்கப்படும் போது கரைசலானது இளஞ்சிவப்பு (pink) நிறமாகிறது. இதன் பிறகு, 10 சொட்டுகள் குளோரோஃபார்ம் சேர்க்கப்பட்டு கரைசலானது நன்கு சுழலச்செய்யப்பட்டுப் பின் அமைதி நிலையை அடையச்செய்யப்படுகிறது. கோகேயின் மற்றும் கோகேயினை அடிப்படையாகக் கொண்ட சேர்மங்கள் ஆகியவற்றிற்கு நீல நிறமானது கிடைக்கிறது.
டைபீன்ஐதரமீன் மற்றும் லிடோகைன் கரிம அடுக்கில் நீல நிறத்தைத் தருகிறது. இந்த சேர்மங்கள் கோகேயினுக்கான சோதனையில் நேர்மறையான முடிவைத் தரும் போலிகள் ஆகும்.
இதே செயல்முறையில் கரைசலை அமிலத்தன்மையாக்குவதற்குப் பதிலாக, காரத்தன்மையைாக்கினால் இந்தச் சோதனையானது கீட்டமின் ஐதரோகுளோரைடைச் சோதித்தறிவதற்கு உதவும்.[6]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Ryan Gabrielson and Topher Sanders, ProPublica (July 7, 2016). "Busted: Tens of thousands of people every year are sent to jail based on the results of a $2 roadside drug test. Widespread evidence shows that these tests routinely produce false positives. Why are police departments and prosecutors still using them?". More than one of
|author=
மற்றும்|last=
specified (உதவி) - ↑ by Ryan Gabrielson, ProPublica (July 11, 2016). "'No Field Test is Fail Safe': Meet the Chemist Behind Houston's Police Drug Kits, Decades after L.J. Scott developed a test for cocaine, his invention played a role in hundreds of wrongful convictions in Houston". More than one of
|author=
மற்றும்|last=
specified (உதவி) - ↑ Cano, F. H.; García-Blanco, S.; Laverat, A. G. (1976). "The crystal structure of cobalt(II) thiocyanate trihydrate". Acta Crystallographica Section B 32 (5): 1526. doi:10.1107/S0567740876005694.
- ↑ "Drug testing reagents". reagentbase. 2017-07-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 சூலை 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Anna L. Deakin (2003). "A Study of Acids Used for the Acidified Cobalt Thiocyanate Test for Cocaine Base". Microgram Journal 1: 40–43. http://www.justice.gov/dea/programs/forensicsci/microgram/journal_v1/mjournal_v1_pg6a.html. பார்த்த நாள்: 2017-07-26.
- ↑ Morris, JA (2007-01-01). "Modified Cobalt Thiocyanate Presumptive Color Test for Ketamine Hydrochloride". J Forensic Sci. 52 (1): 84–87. doi:10.1111/j.1556-4029.2006.00331.x. பப்மெட்:17209915. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1556-4029.2006.00331.x. பார்த்த நாள்: 2012-02-07.