ஆர்செனிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்செனிக் அமிலம்
Structural formula
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆர்செனிக் அமிலம், ஆர்சோரிக் அமிலம்
வேறு பெயர்கள்
ஆர்செனிக் அமிலம்
ஆர்த்தோ ஆர்செனிக் அமிலம்
ஈரமுறிஞ்சி எல்-10
சோடாக்சு
இனங்காட்டிகள்
7778-39-4 Yes check.svgY
ChEBI CHEBI:18231 Yes check.svgY
ChemSpider 229 Yes check.svgY
EC number 231-901-9
InChI
  • InChI=1S/AsH3O4/c2-1(3,4)5/h(H3,2,3,4,5) Yes check.svgY
    Key: DJHGAFSJWGLOIV-UHFFFAOYSA-N Yes check.svgY
  • InChI=1/AsH3O4/c2-1(3,4)5/h(H3,2,3,4,5)
    Key: DJHGAFSJWGLOIV-UHFFFAOYAY
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C01478 Yes check.svgY
வே.ந.வி.ப எண் CG0700000
SMILES
  • O=[As](O)(O)O
UNII N7CIZ75ZPN Yes check.svgY
பண்புகள்
H3AsO4
வாய்ப்பாட்டு எடை 141.94 கி/மோல்
தோற்றம் வெண்மை நிற் படிகங்கள்,
நீரை உறிஞ்சும்.
அடர்த்தி 2.5 g/cm3
உருகுநிலை 35.5 °C (95.9 °F; 308.6 K)
கொதிநிலை 120 °C (248 °F; 393 K)
16.7 கி/100 மி.லி
கரைதிறன் ஆல்ககாலில்கரையும்
ஆவியமுக்கம் 55 hPa (50 °செ)
காடித்தன்மை எண் (pKa) 2.19, 6.94, 11.5
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு Toxic (T)
சுற்றுச்சூழலுக்கு அபாயமானது (N)
R-சொற்றொடர்கள் R23/25, R45, R50/53
S-சொற்றொடர்கள் S53, S45, S60, S61
தீப்பற்றும் வெப்பநிலை சுவாலையுடன் எரியாது
Lethal dose or concentration (LD, LC):
48 மி.கி/கி.கி (எலி,வாய்வழி)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பாசுபாரிக் அமிலம்
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் ஆர்செனேட்டு
தொடர்புடைய சேர்மங்கள் ஆர்செனசு அமிலம்
ஆர்செனிக் ஐந்தாக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

ஆர்செனிக் அமிலம் (Arsenic acid) என்பது H3AsO4 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும். இம்மூலக்கூறு வாய்பாடு AsO(OH)3, என்று மேலும் விரிவாகவும் எழுதப்படுகிறது. நிறமற்ற இவ்வமிலத்தின் பண்புகள் பாசுபாரிக் அமிலத்தின் பண்புகளை ஒத்திருக்கிறது. ஆர்செனேட்டு மற்றும் பாசுபேட்டு உப்புகள் ஒரே மாதிரியான செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. ஆர்செனிக் அமிலத்தை தனிமைப்படுத்த முடியாது ஆனால் கரைசலாகக் கிடைக்கிறது. அமில நிலையில் இது அதிக அளவில் அயனியாகிறது. இதனுடைய அரைநீரேறி வடிவம் (H3AsO4·½H2O) நிலையான படிகமாகக் காணப்படுகிறது. 100°செ வெப்பநிலையில் படிக வடிவ மாதிரிகளின் நீர் நீக்கப்படுகிறது.[1]

பண்புகள்[தொகு]

ஆர்செனிக் அமில மூலக்கூறு, தனித்துவம் மிக்க நாற்பட்டகச் சமச்சீர்மை C3v தோற்றம் கொண்டுள்ளது. AsO பிணைப்பு நீளம் 1.66 முதல் 1.71  Å[2] வரையிலான அளவுகளில் காணப்படுகிறது

ஒரு முப்புரோட்டிக் அமிலமாக இருப்பதால் இதனுடைய அமிலத்தன்மையும் முச்சமநிலையில் உள்ளதாக விவரிக்கப்படுகிறது.

H3AsO4 + H2O is in equilibrium with H2AsO
4
+ H3O+ (K1 = 10−2.19)
H2AsO
4
+ H2O is in equilibrium with HAsO2−
4
+ H3O+ (K2 = 10−6.94)
HAsO2−
4
+ H2O is in equilibrium with AsO3−
4
+ H3O+ (K3 = 10−11.5)

இதனுடைய அமிலத்தன்மை எண் Ka மதிப்பு பாசுபாரிக் அமிலத்தின் மதிப்பிற்கு நெருக்கமாக உள்ளது. மூன்றாவது அயனியாக்கும் ஆற்றலில் தோன்றும் ஆர்செனேட்டு அயனி அதிகக் காரத்தன்மையுடன் காணப்படுகிறது. மேலும் இவ்வமிலம் பாசுபாரிக் அமிலத்தைப் போலல்லாமல் சிறந்த ஆக்சிசனேற்றியாக செயல்படுகிறது. அயோடைடை அயோடினாக மாற்றும் வினை இதற்குச் சான்றாகக் கருதப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

ஆர்செனிக் மூவாக்சைடை அடர் நைட்ரிக் அமிலம் மற்றும் இருநைட்ரசன் மூவாக்சைடுடன் சேர்த்து வினைப்படுத்தினால் உடன் விளைபொருளாக ஆர்செனிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது.[3].

As2O3 + 2 HNO3 + 2 H2O → 2 H3AsO4 + N2O3

இறுதியாக இவ்வினையில் தோன்றும் கரைசலை குளிர்வித்தால் ஆர்செனிக் அமிலத்தின் நிறமற்ற அரைநீரேறி படிகங்கள் H3AsO4·½H2O உருவாகின்றன. ஆனாலும் குறைந்த வெப்பநிலைகளில் படிகமாகும் போது இவ்வமிலத்தின் இருநீரேறி H3AsO4·2H2O உற்பத்தியாகிறது[3].

பிற தயாரிப்பு முறைகள்[தொகு]

ஆர்செனிக் ஐந்தாக்சைடு நீரில் கரையும்பொழுது ஆர்செனிக் அமிலம் மெதுவாக உருவாகிறது. மெட்டா நிலை அல்லது பைரோ ஆர்செனிக் அமிலத்தை நீரில் கரைக்கும்பொழுதும் ஆர்செனிக் அமிலம் உண்டாகிறது. இம்முறைகளைத் தவிர நேரடியாக ஈரமான ஆர்செனிக்கை ஓசோனுடன் வினைப்படுத்தியும் ஆர்செனிக் அமிலம் தயாரிக்கலாம்.

2 As + 3 H2O + 5 O3 → 2 H3AsO4 + 5 O2

பயன்கள்[தொகு]

ஆர்செனிக் அமிலத்தின் நச்சுத் தன்மை காரணமாக இதனுடைய வர்த்தகவகை பயன்பாடுகள் கட்டுப்படுத்தப்படுகிறது, சில வேளைகளில் ஆர்செனிக் அமிலம் மரப்பாதுகாப்புப் பொருள், அகல நிரல் உயிர்கொல்லி, உலோக மற்றும் கண்ணாடி தயாரிப்பு வினைகளில் இறுதி முடிப்பு முகவர் , சிலவகை சாயப்பொருட்கள் தொகுப்பு வினைகளில் வினையூக்கி என பலவாறு பயன்படுத்தப்படுகிறது. முயல்கள் மீதான ஆர்செனிக் அமிலத்தின் LD50 நச்சுத்தன்மை மதிப்பு 6 மி.கி/கி.கி அல்லது 0.006கி/கி.கி ஆகும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Holleman, A. F.; Wiberg, E. (2001). Inorganic Chemistry. San Diego: Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-352651-5. 
  2. Lee, C.; Harrison, W. T. A. (2007). "Tetraethylammonium dihydrogenarsenate bis(arsenic acid) and 1,4-diazoniabicyclo[2.2.2]octane bis(dihydrogenarsenate) arsenic acid: hydrogen-bonded networks containing dihydrogenarsenate anions and neutral arsenic acid molecules". Acta Crystallographica C 63 (Pt 7): m308–m311. doi:10.1107/S0108270107023967. பப்மெட்:17609552. 
  3. 3.0 3.1 G. Brauer, தொகுப்பாசிரியர் (1963). "Arsenic Acid". Handbook of Preparative Inorganic Chemistry. 1 (2nd ). New York: Academic Press. பக். 601. 
  4. Joachimoglu, G. (1915). Biochemische Zeitschrift 70: 144. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்செனிக்_அமிலம்&oldid=3299735" இருந்து மீள்விக்கப்பட்டது