பாசுபாரிக் காடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாசுபாரிக் காடி
பாசுபாரிக் காடி Phosphoric acid
பாசுபாரிக் காடி Phosphoric acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
trihydroxidooxidophosphorus
phosphoric acid
பாசுபாரிக் காடி
வேறு பெயர்கள்
ஆர்த்தோபாசுபாரிக் காடி
Orthophosphoric acid
இனங்காட்டிகள்
7664-38-2 N
ChemSpider 979
EC number 231-633-2
வே.ந.வி.ப எண் TB6300000
UN number 1805
பண்புகள்
H3PO4
வாய்ப்பாட்டு எடை 98.00 g/mol
தோற்றம் வெள்ளை திண்மம் அல்லது நிறமற்ற, பிசுப்புமையான நீர்மம் (>42 °C)
அடர்த்தி 1.685 கி/மிலி (g/ml) (நீர்மம்)
உருகுநிலை 42.35 °C (108.23 °F; 315.50 K)
கொதிநிலை 158 °C (316 °F; 431 K)
காடித்தன்மை எண் (pKa) 2.12, 7.21, 12.67
பிசுக்குமை 2.4-9.4 cP (85% aq. soln.)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 1008
ஈயூ வகைப்பாடு அரிப்புத்தன்மை C
Corrosive (C)
R-சொற்றொடர்கள் R34
S-சொற்றொடர்கள் (S1/2), S26, S45
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
phosphorus oxoacids
தொடர்புடையவை
Hypophosphorous acid
Phosphorous acid
Pyrophosphoric acid
Tripolyphosphoric acid
Hypophosphoric acid
Perphosphoric acid
Permonophosphoric acid
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பாசுபாரிக் காடி (phosphoric acid) என்றும் ஆர்த்தோபாசுபாரிக் காடி (Orthophosphoric acid)என்றும் பாசுபாரிக் (V) காடி என்றும் அழைக்கப்படும் பாசுபரசு உள்ள ஒரு கரிமமற்ற காடி. இக்காடியில் மூன்று ஐதராக்சைல் (-OH) குழுக்கள் உள்ளன. பாசுபாரிக் காடி ஐதரச அணுக்களும் நான்கு ஆக்சிசன் அணுக்களும் ஒரு பாசுபரசு அணுவும் சேர்ந்த சேர்மங்களால் ஆனது. இதன் வேதியியல் வாய்பாடு H3PO4. மூன்று நீர் (H2O). மூலக்கூறுகளுடன் ஒரு பாசுபரசு பென்ட்டாக்சைடு (P2O5) மூலக்கூற்றை சேர்த்தால் இரண்டு பாசுபரசுக் காடி மூலக்கூறுகள் கிட்டும். ஆர்த்தோபாசுபாரிக் காடி மூலக்கூறுகள் பலவும் தன்னுடனே சேர்ந்து பல்வேறு வேதியியல் சேர்மங்களாகக்கூடும். இவையும் பாசுபாரிக் காடிகள் என்று கூறப்படுகின்றன. பாசுபாரிக் காடிகள் பெரும்பாலும் வேளாண்மைத் தொழிலில் உரம் செய்யப் பயன்படுகின்றது. இது தவிர இரும்புத் துருவை நீக்கவும், பூச்சிக் கொல்லிகளிலும், பல் மருத்துவத்திலும், சிலிக்கான் நுண்மின்சுற்றுகள் (தொகுசுற்றுகள்) உருவாக்குவதில் அலுமினியத்தை அரித்தெடுக்கவும், புளிப்பு சுவை தருவதால் சில கோலா குடிநீர்மங்களிலும் பயன்படுத்தபடுகின்றது.

ஆர்த்தோபாசுபாரிக் காடி வேதியியல்[தொகு]

நீர் கலக்கா (நீரற்ற) தூய பாசுபாரிக் காடி ஓர் வெண்மையான திண்மம். இது 42.35 °C வெப்பநிலையில் உருகி நிறமற்ற பிசுப்புமையான நீர்மமாக மாறுகின்றது

இக் காடியின் ஆர்த்தோ என்னும் முன்னொட்டு பாலி பாசுபாரிக் காடிகள் என்று அழைக்கப்படும் மற்றவற்றில் இருந்து பிரித்துக் காட்டவே. ஆர்த்தோபாசுபாரிக் காடி நச்சுத்தனமையற்ற, கரிமமற்ற, வலிமைகுறைந்த (மென்மையான), மூன்று ஐதரச (முப்புரோட்டிக்) காடி. இது அறை வெப்ப, அழுத்த நிலைகளில் திண்மநிலையில் உள்ளது. ஆர்த்தோபாசுபாரிக் காடி முனைத்தன்மை கொண்ட மூலக்கூறு ஆகையால நீரில் எளிதில் கரையும். ஆர்த்தோ மற்றும் பிற பாசுபாரிக் காடிகளின் ஆக்சிசனாக்க நிலை +5; எல்லா ஆக்சிசன் அணுக்களின் ஆக்சிசனாக்கு நிலை -2, ஐதரசனின் நிலை +1. ஆர்த்தோபாசுபாரிக் காடி, மூன்று ஐதரசக்காடி என்பதால் மின்மமாக்கப்பட்ட ஐதரச அணுவை H+ மூன்று மடங்கு நீரில் பிரியச் செய்ய இயலும். இது நீர் மூலக்கூறுடன் இணைந்து கீழ்க்காணும் வேதியியல் வினைகளுக்கு உட்படும்.

H3PO4(s)   + H2O(l) H3O+(aq) + H2PO4(aq)       Ka1= 7.5×10−3
H2PO4(aq)+ H2O(l) H3O+(aq) + HPO42–(aq)       Ka2= 6.2×10−8
HPO42–(aq)+ H2O(l) H3O+(aq) +  PO43–(aq)        Ka3= 2.14×10−13
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுபாரிக்_காடி&oldid=2498651" இலிருந்து மீள்விக்கப்பட்டது