ஐப்போபுளோரசு அமிலம்
வாயு-முகக் கட்டமைப்பு
| |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஐப்போபுளோரசு அமிலம்
| |
வேறு பெயர்கள்
ஐதரசன் ஐப்போபுளோரைட்டு
ஐதரசன் புளோரைட்டு(I) புளோரிக்(-I) அமிலம் ஐதரசன் மோனோபுளோராக்சிசனேட்டு(0) | |
இனங்காட்டிகள் | |
14034-79-8 | |
ChemSpider | 109936 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 123334 |
| |
பண்புகள் | |
HOF | |
வாய்ப்பாட்டு எடை | 36.0057 கி மோல்−1 |
தோற்றம் | −117 ° செல்சியசில் வெளிர் மஞ்சள் திரவம் −117 ° செல்சியசிற்குக் கீழ் வெண்மை |
உருகுநிலை | −117 °C (−179 °F; 156 K) |
கொதிநிலை | < 0 °C 0 °செல்சியசில் சிதைவடைகிறது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் ஐப்போகுளோரைட்டு, LiOF |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஐப்போபுளோரசு அமிலம் (Hypofluorous acid) என்பது HOF என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தண்ணிரை புளோரினால் ஆக்சிசனேற்றம் செய்யும்போது இடைநிலைச் சேர்மமாக இது உண்டாகிறது. திண்மமாக தனித்துப் பிரிக்க இயலும் ஒரே ஐப்போ ஆலசு அமிலம் ஐப்போபுளோரசு அமிலம் மட்டுமேயாகும். வெடிக்கும் பொருளான இது ஆக்சிசன் மற்றும் ஐதரசன் புளோரைடுகளாக சிதைவடைகிறது [1]. பனிக்கட்டையை புளோரினேற்றம் செய்வதன் மூலமாக தூய்மையான நிலையில் இதை தனித்துப் பிரித்தெடுக்க முடியும்.
கட்டமைப்பைப் பொருத்தவரை இதுவொரு வளைந்த மூலக்கூறாக காணப்படுவதாக எக்சு கதிர் படிகவியல் [1] முடிவுகள் தெரிவிக்கின்றன. O–F மற்றும் O–H பிணைப்புகளின் பிணைப்பு நீளங்கள் முறையே 144.2 பைக்கோமீட்டர் மற்றும் 96.4 பைக்கோமீட்டர் அளவுகளுடன் பிணைப்புக் கோணத்தின் அளவு 101° கொண்டுள்ளதாக இது வடிவம் கொண்டுள்ளது. திண்மநிலை கட்டமைப்பு O–H•••O இணைப்புகளால் ஆன சங்கிலிகளால் உருவாகியுள்ளது. வாயு நிலையில் உள்ள ஐப்போபுளோரசு அமிலத்தின் கட்டமைப்பில் பிணைப்புக் கோணம் 97.2° ஆக சற்று குறுகியுள்ளது.
புளோரினின் ஒரேயொரு ஆக்சோ அமிலம் ஐப்போபுளோரசு அமிலம் ஆகும். பனிக்கட்டியின் மீது புளோரினை −40 ° செல்சியசு வெப்பநிலையில் செலுத்தும் போது இவ்வமிலம் ஐதரோபுளோரசு வாயுவாக உருவாகி சேகரிக்கப்படுகிறது. பின்னர் இவ்வாயு ஆவி சுருங்குதல் முறையில் அமிலமாக்கப்படுகிறது.
- F2 + H2O → HOF + HF
அறை வெப்பநிலையில் இச்சேர்மம் வெடியோசையுடன் HF மற்றும் O2:வாயுக்களாகச் சிதைவடைகிறது.
- 2 HOF → 2 HF + O2
எலக்ட்ரான் கவர் ஆக்சிசன் மாற்றும் முகவராக அசிட்டோநைட்ரைட்டிலுள்ள ஐப்போபுளோரசு அமிலம் செயல்படுகிறது. ஈர அசிட்டோ நைட்ரைல் மீது புளோரின் வாயுவை செலுத்துவதன் மூலம் தளப் பொருளாக அசிட்டோநைட்ரைட்டிலுள்ள ஐப்போபுளோரசு அமிலக் கலவை தயாரிக்கப்படுகிறது [2][3]. பீனாந்தரோலினுடன் இவ்வினைப்பொருளைச் சேர்த்து சூடாக்கி [4] மழுப்பலான 1,10-பீனாந்தரோலின் ஈராக்சைடு முதல் முயற்சிக்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கப்பட்டது [5] அணுக்கள் யாவும் வேறுபட்டு காணப்படுவதால் இம்மூலக்கூறு இரண்டு வகையான சீரொழுங்குகளுடன் சமச்சீரில்லாமல் Cs இடக்குழுவுடன் காணப்படுகிறது.
ஐப்போபுளோரைட்டு
[தொகு]ஆக்சிபுளோரசு அயனியின் வழிப்பொருள் ஐப்போபுளோரைட்டு சேர்மமாகும். ஐப்போபுளோரசு அமிலத்தின் இணைகாரமாக இது கருதப்படுகிறது. முப்புளோரோமெத்தில் ஐப்போபுளோரைட்டு ஐப்போபுளோரைட்டு சேர்மத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 W. Poll; G. Pawelke; D. Mootz; E. H. Appelman (1988). "The Crystal Structure of Hypofluorous Acid : Chain Formation by O-H · · · O Hydrogen Bonds". Angew. Chem. Int. Ed. Engl. 27 (3): 392–3. doi:10.1002/anie.198803921.
- ↑ S. Rozen; M. Brand (1986). "Epoxidation of Olefins with Elemental Fluorine in Water/Acetonitrile Mixtures". Angew. Chem. Int. Ed. 25 (6): 554–5. doi:10.1002/anie.198605541.
- ↑ S. Dayan; Y. Bareket; S. Rozen (1999). "An efficient α-hydroxylation of carbonyls using the HOF•CH3CN complex". Tetrahedron 55 (12): 3657. doi:10.1016/S0040-4020(98)01173-9.
- ↑ S. Rozen; S. Dayan (1999). "At Last, 1,10-Phenanthroline-N,N′-dioxide, A New Type of Helicene, has been Synthesized using HOF•CH3CN". Angew. Chem. Int. Ed. 38 (23): 3471–3. doi:10.1002/(SICI)1521-3773(19991203)38:23<3471::AID-ANIE3471>3.0.CO;2-O.
- ↑ F. Linsker; R.L. Evans (1946). "Phenanthroline Di-N-oxides". J. Am. Chem. Soc. 68 (3): 403. doi:10.1021/ja01207a019.