புரோமிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோமிக் அமிலம்
Skeletal model of bromic acid
Spacefill model of bromic acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புரோமிக் அமிலம்
வேறு பெயர்கள்
புரோமிக்(V) அமிலம்
ஐதசன் புரோமேட்டு
இனங்காட்டிகள்
10035-10-6 N
ChEBI CHEBI:49382 Y
ChEMBL ChEMBL1161635 Y
ChemSpider 22853 Y
EC number 232-158-3
Gmelin Reference
25861
InChI
  • InChI=1S/BrHO3/c2-1(3)4/h(H,2,3,4) Y
    Key: SXDBWCPKPHAZSM-UHFFFAOYSA-N Y
  • InChI=1/BrHO3/c2-1(3)4/h(H,2,3,4)
    Key: SXDBWCPKPHAZSM-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
Image
ம.பா.த புரோமிக்+அமிலம்
பப்கெம் 24445
வே.ந.வி.ப எண் TP8580000
SMILES
  • O[Br](=O)=O
  • O=Br(=O)O
பண்புகள்
HBrO3
வாய்ப்பாட்டு எடை 128.91 கி/மோல்
காடித்தன்மை எண் (pKa) -2
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

புரோமிக் அமிலம் (Bromic acid ) என்பது HBrO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் உள்ள ஒரு வேதிச் சேர்மமாகும். ஆக்சோவமிலமான இச்சேர்மம் ஐதரசன்புரோமேட்டு என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் நீர்த்த கரைசல்[1][2] நிலையிலேயே நிறமற்ற கரைசலாக அறியப்படும் இச்சேர்மம் அறை வெப்பநிலையில் புரோமினாகச் சிதைவடைந்து மஞ்சள் நிறமாக மாற்றமடைகிறது[1][3]. புரோமிக் அமிலமும் புரோமேட்டுகளும் வலிமையான ஆக்சிசனேற்றிகளாகச் செயல்படுகின்றன மற்றும் பெலௌசொவ் சபோடின்சிகி வினைகளின் பொது உட்பொருளாகவும் விளங்குகின்றன[3][4]. சமநிலையற்ற வெப்பவியக்கவியல் வினைக்கு பெலௌசொவ் சபோடின்சிகி வினைகள் பழமையான எடுத்துக்காட்டுகளாகும்.

பிரிகையடைதல்[தொகு]

புரோமிக் அமிலம் குறைவான அடர்த்தியில் இருக்கும்போது ஐதரசன் மற்றும் புரோமேட்டாகப் பிரிகை அடைகிறது. அதேவேளையில் அடர்த்தியான கரைசலாக இருக்கும்போது புரோமினாகப் பிரிகை அடைகிறது. நேர்மின் சுமையுடைய மீயிணைதிறன் புரோமின் அணு எலக்ட்ரான் கவர்திறன் மிக்க OH குழுவுடன் இணைந்திருக்கும் காரணத்தாலேயே புரோமிக் அமிலம் நிலைப்புத்தன்மையற்று காணப்படுவதாக விளக்கப்படுகிறது[5].

அமைப்பு[தொகு]

புரோமிக் அமிலம் பல்வேறு மாற்று வடிவங்களில் காணப்படுகிறது[5][6] . உயர்நிலைக் கோட்பாடுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட அவற்றின் பிணைப்பு நீளங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.[5]

வகைகள் HOOOBr HOOBrO HOBrO2 HBrO3
Br-O இணைப்பு (Å) 1.867 1.919 1.844 -----
Br-O விளிம்பு (Å) ----- 1.635 1.598 1.586

மாற்று வடிவ அமைப்புகளுக்கிடையே காணப்படும் அதிகவாற்றல் எல்லைத் தடைகள் மாற்று வடிவங்கள் உருவாவதை தடைசெய்கின்றன. HOBrO2 வடிவம் மட்டுமே நிலைப்புத் தன்மை மிக்கதாக உள்ளது[6].

தொகுப்பு முறை தயாரிப்பு[தொகு]

பேரியம் புரோமேட்டும் கந்தக அமிலமும் வினைபுரிவதால் புரோமிக் அமிலம் உருவாகிறது[1]

Ba(BrO
3
)
2
+ H
2
SO
4
2HBrO
3
+ BaSO
4

வினையில் உருவாகும் பேரியம் சல்பேட்டு நீரில் கரையாது என்பதால் வீழ்படிவாக அடியில் தங்குகிறது. தெளியவைத்து இறுத்தல் முறையில் புரோமிக் அமிலம் பிரித்து எடுக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 The Merck Index: An Encyclopedia of Chemicals, Drugs, and Biologicals. 14th Edition. 2006.
  2. Van Nostrand's Scientific Encyclopedia. Glenn D. Considine. Ninth Edition. Volume 1. p 554
  3. 3.0 3.1 Recipes for Belousov-Zhabotinsky reagents. J. Chem. Educ., 1991, 68 (4), 320. DOI: 10.1021/ed068p320
  4. The Source of the Carbon Monoxide in the Classical Belousov-Zhabotinsky Reaction. J. Phys. Chem. A., 2007, 111 (32), 7805-12 DOI: 10.1021/jp073512+
  5. 5.0 5.1 5.2 Theoretical investigation of halogen-oxygen bonding and its implications in halogen chemistry and reactivity. Bioinorganic Chemistry and Applications, 2007, 1, 11/1-11/9
  6. 6.0 6.1 A Theoretical Examination of the Isomerization Pathways for HBrO3 Isomers. J. Phys. Chem. A, 2000, 104 (41), 9321-27. DOI: 10.1021/jp001604s
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமிக்_அமிலம்&oldid=2747090" இலிருந்து மீள்விக்கப்பட்டது