பாதரசம்(I) நைட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாதரச(I)நைட்ரேட்டு
Mercury(I) nitrate[1][2]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மெர்க்குரி(I) நைட்ரேட்டு
வேறு பெயர்கள்
பாதரச நைட்ரேட்டு, மெர்க்குரசு நைட்ரேட்டு
இனங்காட்டிகள்
10415-75-5 (நீரிலி) Y
7782-86-7 (இருநீரேற்று)
பப்கெம் 25247
பண்புகள்
Hg2(NO3)2 (நீரிலி)
Hg2(NO3)2·2H2O (இருநீரேற்று)
வாய்ப்பாட்டு எடை 525.19 கி/மோல்l (நீரிலி)
561.22 கி/மோல் (இருநீரேற்று)
தோற்றம் வெண்மை ஒற்றைச் சரிவு படிகங்கள் (நீரிலி)
நிறமற்றப் படிகங்கள் (இருநீரேற்று)
அடர்த்தி ? g/cm3 (நீரிலி)
4.8 g/cm3 (இருநீரேற்று)
உருகுநிலை ? (நீரிலி)
சிதைவடையும் 70 °செ (இருநீரேற்று)
சிறிதளவு கரையும், வினைபுரியும்
தீங்குகள்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பாதரசம்(I) புளோரைடு
பாதரசம்(I) குளொரைடு
பாதரசம்(I) புரோமைடு
பாதரசம்(I) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் பாதரசம்(II) நைட்ரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பாதரசம்(I) நைட்ரேட்டு (Mercury(I) nitrate) என்பது Hg2(NO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மற்ற பாதரச(I) சேர்மங்களைத் தயாரிக்க இது அடிப்படைப் பொருளாகப் பயன்படுகிறது. மற்ற பாதரசச் சேர்மங்களைப் போலவே இச்சேர்மமும் ஒரு நச்சு மிக்க சேர்மமாகும்.

வினைகள்[தொகு]

தனிமநிலை பாதரசம் நீர்த்த நைட்ரிக் அமிலத்துடன் இணைந்து வினைபுரியும் போது பாதரசம்(I) நைட்ரேட்டு உருவாகிறது. அடர் நைட்ரிக் அமிலம் பயன்படுத்தினால் பாதரசம்(II) நைட்ரேட்டு உருவாகும். பாதரசம்(I) நைட்ரேட்டு காற்றுடன் தொடர்பு கொள்ள நேர்ந்தால் ஆக்சிசனேற்றம் அடைகிறது. தண்ணீருடன் மெதுவாக வினைபுரிவதால் பாதரசம்(I) நைட்ரேட்டு கரைசல்கள் அமிலத்தன்மையுடன் காணப்படுகின்றன.

தண்ணீருடன் மெதுவாக வினைபுரிவதால் பாதரசம்(I) நைட்ரேட்டு கரைசல்கள் அமிலத்தன்மையுடன் காணப்படுகின்றன.

Hg2(NO3)2 + H2O → Hg2(NO3)(OH) + HNO3

Hg2(NO3)(OH) மஞ்சள் நிற வீழ்படிவாக உருவாகிறது.

பாதரசம்(I) நைட்ரேட்டு கரைசலை கொதிக்க வைத்தாலோ அல்லது ஒளியில் பட நேர்ந்தாலோ இது விகிதச் சமமாதலின்றி பிரிகை அடைந்து பாதரசம் மற்றும் பாதரசம் (II) நைட்ரேட்டுகளைக் கொடுக்கிறது.

Hg2(NO3)2 → Hg + Hg(NO3)2

மேற்கோள்கள்[தொகு]

  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–45, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
  2. Patnaik, Pradyot (2003), Handbook of Inorganic Chemical Compounds, McGraw-Hill Professional, p. 573, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8, பார்க்கப்பட்ட நாள் 2009-07-20
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதரசம்(I)_நைட்ரேட்டு&oldid=3384665" இலிருந்து மீள்விக்கப்பட்டது