பாதரச(I) புரோமைடு
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பாதரச(I) புரோமைடு
| |
வேறு பெயர்கள்
மெர்குரசு புரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
15385-58-7 ![]() | |
பப்கெம் | 24829 |
UNII | JSJ4936A2S ![]() |
பண்புகள் | |
Hg2Br2 | |
வாய்ப்பாட்டு எடை | 560.99 கி/மோல் |
தோற்றம் | வெண்மையிலிருந்து மஞ்சள் நாற்கோண படிகங்கள் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 7.307 கி/செ.மீ3, திண்மம் |
உருகுநிலை | 405 °C (761 °F; 678 K) |
கொதிநிலை | ~ 390 °C (734 °F; 663 K) பதங்கமாகும்[1] |
3.9 x 10−5 கி/100 மி.லி | |
கரைதிறன் | ஈதர், அசிட்டோன், ஆல்க்காலில் கரையாது |
−28.6•10−6 செ.மீ3/மோல் | |
கட்டமைப்பு | |
மூலக்கூறு வடிவம் | |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | மிக நச்சு (T+) சுற்றுச்சூழலுக்கு அபாயமானது (N) "483230 Mercury(I) bromide 99.9+ %". Sigma-Aldrich. http://www.sigmaaldrich.com/catalog/search/ProductDetail/ALDRICH/483230. பார்த்த நாள்: 2008-05-30.</ref> |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பாதரச(I) புளோரைடு பாதரச(I) குளோரைடு பாதரச(I) அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | துத்தநாக புரோமைடு காட்மியம் புரோமைடு பாதரச(II) புரோமைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
பாதரச(I) புரோமைடு (Mercury(I) bromide) என்பது Hg2Br2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பாதரசம் மற்றும் புரோமின் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தை மெர்குரசு புரோமைடு என்ற பெயராலும் அழைக்கலாம். சூடுபடுத்தும் போது பாதரச(I) புரோமைடு வெண்மை நிறத்திலிருந்து மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது[1]. புற ஊதா ஒளியில் படும்போது சல்மான் நிறமாக நின்றொளிர்கிறது. ஒலி-ஒளி கருவிகளில் பாதரச(I) புரோமைடு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது[2].
இச்சேர்மத்தினுடைய மிகவும் அரிய கனிம வடிவம் குழ்மினைட்டு Hg2(Br,Cl)2 ஆகும்.
தயாரிப்பு[தொகு]
தனிமநிலை பாதரசத்துடன் தனிமநிலை புரோமின் சேர்த்து ஆக்சிசனேற்ற வினைக்கு உட்படுத்தி அல்லது சோடியம் புரோமைடுடன் பாதரச(I) நைட்ரேட்டு கரைசல் சேர்த்து வினைபுரியச் செய்தும் பாதரச(I) புரோமைடைத் தயாரிக்கலாம்[1].
கட்டமைப்பு[தொகு]
நேர்கோட்டு X-Hg-Hg-X அலகுகளை பொதுவாகக் கொண்டிருக்கும் மற்ற பாதரச(I) சேர்மங்களைப் போல Hg2Br2 சேர்மமும் 249 பைக்கோமீட்டர் நீளம் கொண்ட Hg-Hg பிணைப்பும் (பாதரசம் உலோகத்தில் Hg-Hg பிணைப்பு நீளம் 300 பைக்கோமீட்டர் ஆகும்) 271 பைக்கோமீட்டர் நீளம் கொண்ட Hg-Br பிணைப்பும் கொண்ட நேர்கோட்டு BrHg2Br அலகுகளைக் கொண்டுள்ளது[3]. ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பில் ஒவ்வொரு பாதரச அணுவும் எண்கோண வடிவத்தில் உள்ளன. அருகிலுள்ள இரண்டு புரோமின்களுடன் மேலும் 332 பைக்கோமீட்டர் நீளத்துடன் கூடுதலாக நான்கு புரோமின் அணுக்கள் காணப்படுகின்றன[3] The compound is often formulated as Hg22+ 2Br−. உண்மையில் இது மூலக்கூற்று சேர்மம் என்றாலும் Hg22+ 2Br− என்று முறைப்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 Perry, Dale L.; Phillips, Sidney L. (1995), Handbook of Inorganic Compounds, CRC Press, p. 255, ISBN 0-8493-8671-3, retrieved 2008-05-30
- ↑ Macintyre, Jane Elizabeth; Daniel, F. M.; Stirling, V. M. (1992), Dictionary of Inorganic Compounds, vol. 1, CRC Press, p. 314, ISBN 0-412-30120-2, retrieved 2008-05-30
- ↑ 3.0 3.1 Wells A.F. (1984) Structural Inorganic Chemistry 5th edition Oxford Science Publications ISBN 0-19-855370-6