பாதரச(I) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாதரச(I) புளோரைடு
Mercury(I) fluoride
பாதரச(I) புளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பாதரச(I) புளோரைடு
வேறு பெயர்கள்
மெர்க்குரசு புளோரைடு
இனங்காட்டிகள்
13967-25-4 Y
பப்கெம் 4084556
பண்புகள்
Hg2F2
வாய்ப்பாட்டு எடை 439.177 கி/மோல்
தோற்றம் மஞ்சள் கனசதுரப் படிகங்கள்
அடர்த்தி 8.73 கி/செ.மீ³, திண்மம்
சிதையும்[1]
−26.5•10−6 செ.மீ3/மோல்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு மிக நச்சு (T+)
சுற்றுச்சூழலுக்கு
அபாயமானது (N)
R-சொற்றொடர்கள் R26/27/28, R33, R50/53
S-சொற்றொடர்கள் S13, S28, S45, S60, S61[2]
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பாதரச(I) குளோரைடு
பாதரச(I) புரோமைடு
பாதரச(I) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் துத்தநாக புளோரைடு
காட்மியம் புளோரைடு
பாதரச(II) புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

பாதரச(I) புளோரைடு (Mercury(I) fluoride) என்பது Hg2F2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பாதரசம் மற்றும் புளோரின் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தை மெர்குரசு புளோரைடு என்ற பெயராலும் அழைக்கலாம். மஞ்சள் நிறத்தில் சிறிய சிறிய கனசதுரப் படிகங்களாக்க் காணப்படும் பாதரச(I) புளோரைடு ஒளியில் படநேர்ந்தால் கருப்பு நிறமாக மாற்றமடைகிறது [1].

தயாரிப்பு[தொகு]

பாதரச(I) கார்பனேட்டுடன் ஐதரோபுளோரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் பாதரச(I) புளோரைடு உருவாகிறது.

Hg2CO3 + 2 HF → Hg2F2 + CO2 + H2O

வினைகள்[தொகு]

பாதரச(I) புளோரைடுடன் தண்ணீரைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் இது நீராற்பகுப்பு அடைந்து தனிமநிலை பாதரசம், பாதரச(I) ஆக்சைடு, ஐதரோபுளோரிக் அமிலம் ஆகியவை உருவாகின்றன:[1]

Hg2F2 + H2O → Hg + HgO + 2 HF

ஆல்க்கைல் ஆலைடுகளை ஆல்க்கைல் புளோரைடுகளாக மாற்றும் சுவார்ட்சு வினையில் பாதரச(I) புளோரைடை பயன்படுத்த முடியும்.[3]

2 R-X + Hg2F2 → 2 R-F + Hg2X2
இங்கு X = Cl, Br, I

கட்டமைப்பு[தொகு]

Hg அணுக்களைக் கொண்டுள்ள அடுத்துள்ள மூலக்கூறுகளுடன் F உள்ள Hg2F2,இன் அலகுக் கூடு

நேர்கோட்டு X-Hg-Hg-X அலகுகளை பொதுவாகக் கொண்டிருக்கும் மற்ற பாதரச(I) சேர்மங்களைப் போல Hg2F2 சேர்மமும் 251 பைக்கோமீட்டர் நீளம் கொண்ட Hg-Hg பிணைப்பும் (பாதரசம் உலோகத்தில் Hg-Hg பிணைப்பு நீளம் 300 பைக்கோமீட்டர் ஆகும்) 214 பைக்கோமீட்டர் நீளம் கொண்ட Hg-F பிணைப்பும் கொண்ட நேர்கோட்டு FHg2F அலகுகளைக் கொண்டுள்ளது [4]. ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பில் ஒவ்வொரு பாதரச அணுவும் உருக்குலைந்த எண்கோண வடிவத்தில் உள்ளன. அருகிலுள்ள இரண்டு புளோரின் அணுக்களுடன் மேலும் 272 பைக்கோமீட்டர் நீளத்துடன் கூடுதலாக நான்கு புளோரின் அணுக்கள் காணப்படுகின்றன[4] The compound is often formulated as Hg22+ 2Br. உண்மையில் இது மூலக்கூற்று சேர்மம் என்றாலும் Hg22+ 2F− என்று முறைப்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Perry, Dale L.; Phillips, Sidney L. (1995), Handbook of Inorganic Compounds, CRC Press, p. 256, ISBN 0-8493-8671-3, பார்க்கப்பட்ட நாள் 2008-06-17
  2. 339318 Mercury(I) fluoride technical grade, Sigma-Aldrich, பார்க்கப்பட்ட நாள் 2008-06-17
  3. Beyer, Hans; Walter, Wolfgang; Lloyd, Douglas (1997), Organic Chemistry, Horwood Publishing, p. 136, ISBN 1-898563-37-3, பார்க்கப்பட்ட நாள் 2008-06-17
  4. 4.0 4.1 Wells A.F. (1984) Structural Inorganic Chemistry 5th edition Oxford Science Publications பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதரச(I)_புளோரைடு&oldid=2688454" இலிருந்து மீள்விக்கப்பட்டது