குரோமியம்((III) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரோமியம்((III) புளோரைடு
Aluminium-trifluoride-3D-polyhedra.png
FeF3structure.jpg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்((III) புளோரைடு
வேறு பெயர்கள்
குரோமியம் முப்புளோரைடு
இனங்காட்டிகள்
7788-97-8 Yes check.svgY
16671-27-5 (முந்நீரேற்று)
123333-98-2 (நான்கு நீரேற்று)
ChemSpider 8329529 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10154021
வே.ந.வி.ப எண் GB6125000
பண்புகள்
CrF3
வாய்ப்பாட்டு எடை 108.9913 கி/மோல் (நீரிலி)
163.037 கி/மோல் (முந்நீரேற்று)
181.05 கி/மோல் (நான்கு நீரேற்று)
தோற்றம் பச்சை நிறப் படிகங்கள்
அடர்த்தி 3.8 கி/செ.மீ3 (நீரிலி)
2.2 கி/செ.மீ3 (முந்நீரேற்று)
உருகுநிலை
மிகக்குறைவு (நீரிலி)
கரையும் (முந்நீரேற்று)
கரைதிறன் ஆல்ககாலில் கரையாது
HF, HCl போன்றவற்றில் கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம், hR24
புறவெளித் தொகுதி R-3c, No. 167
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
150 மி.கி/கி.கி (கினியா பன்றி, வாய்வழி)
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 1 மி.கி/மீ3[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 0.5 மி.கி/மீ3[1]
உடனடி அபாயம்
250 மி.கி/மீ3[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

குரோமியம்((III) புளோரைடு (Chromium(III) fluoride) என்பது CrF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் இதே மூலக்கூற்று வாய்ப்பாடு குரோமியத்தின் பல்வேறு நீரேற்றுகளுக்கும் பொருந்தும். பச்சை நிறத்துடன் படிகங்களாகக் காணப்படும் இச்சேர்மம் பொதுவானக் கரைப்பான்களில் கரையாது. ஆனால் வண்ண நீரேற்றுகளான [Cr(H2O)6]F3 மற்றும் [Cr(H2O)6]F3•3H2O போன்றவை நீரில் கரைகின்றன. முந்நீரேற்று வகை பச்சையாகவும், அறுநீரேற்று வகை கருநீலத்திலும் காணப்படுகின்றன. நீரிலி வகை புளோரைடு 1100 முதல் 1200 °செல்சியசு வெப்பநிலையில் பதங்கமாகிறது. அனைத்துக் குரோமியம்(III) சேர்மங்களையும் போல இப்புளோரைடுகளும் எண்முக குரோமியம் மையங்களுடன் தோற்றமளிக்கின்றன. நீரிலி வகையில் , ஆறு ஒருங்கிணைவுத் தளங்கள் அடுத்துள்ள குரோமியம் மையங்களுடன் பாலமிட்டுள்ள புளோரைடு ஈந்தணைவிகளால் நிரப்பப்பட்டுள்ளன. நீரேற்று வடிவங்கள் அணைத்திலும் புளோரைடு ஈந்தணைவிகள் தண்ணீர் மூலக்கூறுகளால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளன[2].

தயாரிப்பு[தொகு]

குரோமியம்(III) ஆக்சைடு மற்றும் ஐதரோபுளோரிக் அமிலம் இரண்டும் வினைபுரிந்து குரோமியம்((III) புளோரைடு உருவாகிறது:[3]

Cr2O3 + 6 HF + 9 H2O → 2 [Cr(H2O)6]F3.

ஐதரசன் புளோரைடு மற்றும் குரோமிக் குளோரைடு இரண்டும் வினைபுரிவதால் நீரிலி வகை குரோமியம்((III) புளோரைடு உருவாகிறது:[4]

CrCl3 + 3 HF → CrF3 + 3 HCl

பயன்கள்[தொகு]

குரோமியம்((III) புளோரைடு அதிகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும் நெசவுத் தொழிலில் நிறம் நிறுத்தியாகவும் , அரிப்புத் தடுப்பியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0141". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. F.H. Herbstein, M. Kapon and G.M. Reisner, "Crystal structures of chromium(III) fluoride trihydrate. Structural chemistry of hydrated transition metal fluorides. Thermal decomposition of chromium(III) fluoride nonhydrate" Zeitschrift für Kristallographie 1985, volume 171, pp. 209
  3. Gerd Anger, Jost Halstenberg, Klaus Hochgeschwender, Christoph Scherhag, Ulrich Korallus, Herbert Knopf, Peter Schmidt, Manfred Ohlinger, "Chromium Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2005.எஆசு:10.1002/14356007.a07_067
  4. Greenwood, N. N.; & Earnshaw, A. (1997). Chemistry of the Elements (2nd Edn.), Oxford:Butterworth-Heinemann. ISBN 0-7506-3365-4.