பிளாட்டினம் எக்சாபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளாட்டினம் எக்சாபுளோரைடு
PtF6.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பிளாட்டினம் எக்சாபுளோரைடு
வேறு பெயர்கள்
பிளாட்டினம்(VI) புளோரைடு
இனங்காட்டிகள்
13693-05-5 N
ChemSpider 21106464 Yes check.svgY
InChI
  • InChI=1S/6FH.Pt/h6*1H;/q;;;;;;+2/p-6 Yes check.svgY
    Key: NHVLQWBIZQMDAU-UHFFFAOYSA-H Yes check.svgY
  • InChI=1S/6FH.Pt/h6*1H;/q;;;;;;+2/p-6
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • F[Pt-4](F)(F)(F)(F)F
பண்புகள்
PtF6
வாய்ப்பாட்டு எடை 309.07 கி/மோல்
தோற்றம் அடர் சிவப்பு படிகங்கள்
அடர்த்தி 3.83 கி/செமீீ3
உருகுநிலை 61.3 °C (142.3 °F; 334.4 K)
கொதிநிலை 69.14 °C (156.45 °F; 342.29 K)
தீவிரமாக வினைபுரிகிறது
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம், oP28
புறவெளித் தொகுதி Pnma, No. 62
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகி (Oh)
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் oxidizer
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

பிளாட்டினம் எக்சாபுளோரைடு (Platinum hexafluoride) PtF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய வேதிச் சேர்மம் ஆகும். இது அடர்-சிவப்பு நிறமுடைய, எளிதில் ஆவியாகக்கூடிய திண்மமாகும். இது சிவப்பு நிற வாயுவை உருவாக்குகிறது. இந்த சேர்மம்,  பிளாட்டினத்தின் +6 ஆக்சிசனேற்ற நிலையை விளக்கும் ஒரு தனித்தன்மையுள்ள அணைவுச் சேர்மம் ஆகும். நான்கு d-எதிர்மின்னிகளை மட்டுமே கொண்டிருந்தும், ஒரு மும்மை ஆற்றல் நிலையுடன் (Triplet state) இது இணைகாந்தப் பண்பினைக் (Paramagnetic) கொண்டுள்ளது.  PtF6 ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியும் மற்றும் வலிமையான புளோரினேற்றியும் ஆகும். PtF6 திண்ம நிலையிலும், வாயு நிலையிலும், எண்முகி வடிவ அமைப்பைக் கொண்டிருக்கிறது. Pt-F பிணைப்பு நீளங்கள் 185 பிக்கோமீட்டர்களாக உள்ளன.[1]

தொகுப்புமுறை தயாரிப்பு[தொகு]

PtF6 ஆனது, பிளாட்டினம் உலோகத்துடன் புளோரினின் வினையின் மூலம் முதன்முதலாக தயாரிக்கப்ப்டடது. [2] இந்த வழிமுறை தயாரிப்பிற்கான ஒரு வாய்ப்பாக மட்டுமே விளங்குகிறது. [1]

Pt + 3 F2 → PtF6

PtF6 ஆனது, பிளாட்டினம் பென்டாபுளோரைடு (PtF5) விகிதச் சிதைவடைவதன் மூலமும் தயாரிக்கப்படுகிறது. பிளாட்டினம் டெட்ராபுளோரைடு (PtF4) ஒரு உபவிளை பொருளாக கிடைக்கிறது. தேவையான PtF5 ஆனது, PtCl2 ஐ புளோரினேற்றம் செய்யப்பட்டு கிடைக்கப்பெறுகிறது.:

2 PtCl2 + 5 F2 → 2 PtF5 + 2 Cl2
2 PtF5 → PtF6 + PtF4

எக்சாபுளோரோபிளாட்டினேட்டுகள்[தொகு]

பிளாட்டினம் எக்சாபுளோரைடு, எச்சாபுளோரோபிளாட்டினேட்டு எதிரயனியிலிருந்து ஒரு எதிர்மின்னியைப் பெறலாம். இது பிளாட்டினம் எக்சாபுளோரைடுடன் நேர்மின்னயனியாக மாற்ற இயலாத தனிமங்களின் சேர்மங்களை வினைப்படுத்துவதன் மூலம் கிடைக்கப்பெறுகிறது. உதாரணமாக, செனானுடன் வினைபுரிந்து "XePtF
6
" ஐத் தருகிறது. (இது XeFPtF
5
, XeFPt
2
F
11
மற்றும் Xe
2
F
3
PtF
6
) ஆகியவற்றின் கலவையாகும். மேலும் இது செனான் எக்சாபுளோரோபிளாட்டினேட்டு என அழைக்கப்படுகிறது. 1962 ஆம் ஆண்டில், இந்த வினையின் கண்டுபிடிப்பானது, அருமன் வாயுக்கள் வினைகளில் ஈடுபட்டு வேதிச் சேர்மங்களைத் தருகின்றன என்பதை நிரூபித்தது. செனானுடனான வினைக்கு முன்னதாக, PtF
6
ஆனது ஆக்சிசனுடன் வினைபுரிந்து டைஆக்சிசனைல் எக்சாபுளோரோபிளாட்டினேட்டைத் [O2]+[PtF6] தருவது கண்டறியப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Drews, T.; Supel, J.; Hagenbach, A.; Seppelt, K. "Solid State Molecular Structures of Transition Metal Hexafluorides" Inorganic Chemistry 2006, volume 45, pp 3782-3788.எஆசு:10.1021/ic052029f
  2. Weinstock, B.; Claassen, H. H.; Malm, J. G. (1957). "Platinum Hexafluoride". Journal of the American Chemical Society 79: 5832–5832. doi:10.1021/ja01578a073.