பிரசியோடைமியம்(IV) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரசியோடைமியம்(IV) புளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
டெட்ராபுளோரோபிரசியோடைமியம், பிரசியோடைமியம் டெட்ராபுளோரைடு
இனங்காட்டிகள்
15192-24-2 Y
ChemSpider 9588184
InChI
  • InChI=1S/4FH.Pr/h4*1H;/q;;;;+4/p-4
    Key: AQHKOMUMLGCMJB-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11413297
SMILES
  • F[Pr](F)(F)F
பண்புகள்
F4Pr
வாய்ப்பாட்டு எடை 216.90 g·mol−1
தோற்றம் இளம் மஞ்சள் படிகங்கள்
அடர்த்தி கி/செ.மீ3
தண்ணீருடன் வினைபுரியும்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் CeF4
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பிரசியோடைமியம்(IV) புளோரைடு (Praseodymium(IV) fluoride) என்பது PrF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியம் டெட்ராபுளோரைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. புளோரின் மற்றும் |பிரசியோடைமியத்தின் உயர் ஆக்சிசனேற்ற உப்பாக இது அறியப்படுகிறது. இளம் மஞ்சள் நிற படிகங்களாக பிரசியோடைமியம்(IV) புளோரைடு உருவாகிறது.

தயாரிப்பு[தொகு]

பிரசியோடைமியம்(IV) ஆக்சைடின் மீது கிரிப்டான் இருபுளோரைடை செலுத்தும்போது பிரசியோடைமியம்(IV) புளோரைடு ஒரு படிகத் திண்மமமாக உருவாகிறது.:[1]

சோடியம் அறுபுளோரோபிரசியோடைமேட்டு(IV) சேர்மத்தை நீர்ம ஐதரசன் புளோரைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் பிரசியோடைமியம்(IV) புளோரைடு உருவாகிறது:[2]

பண்புகள்[தொகு]

இளம் மஞ்சள் நிற படிகங்களாக பிரசியோடைமியம்(IV) புளோரைடு காணப்படுகிறது. யுரேனியம் டெட்ராபுளோரைடு (UF4) போன்ற எதிர்கனசதுரக் கட்டமைப்பில் படிகங்கள் காணப்படுகின்றன. வெப்பப்படுத்தும்போது பிரசியோடைமியம்(IV) புளோரைடு சிதைவடைகிறது.

நான்கு இணைதிறன் பிரசியோடைமியம் நேர்மின் அயனிகள் காரணமாக (Pr3+ / Pr4+: +3.2 V) அதிக பிராசோடைமியம்(IV) புளோரைடு நீரில் சிதைந்து ஆக்சிசனை வெளியிடுகிறது.

மேற்கோள்கள்[தொகு]