வெள்ளி நான்மபுளூரோபோரேட்டு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
Silver tetrafluoridoborate(1–) | |
| வேறு பெயர்கள்
போரேட்டு(1-), நான்மபுளூரோ-, வெள்ளி(1+) | |
| இனங்காட்டிகள் | |
| 14104-20-2 | |
| ChemSpider | 140438 |
| EC number | 237-956-5 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 159722 |
| வே.ந.வி.ப எண் | ED2875000 |
| |
| பண்புகள் | |
| AgBF4 | |
| வாய்ப்பாட்டு எடை | 194.673 g/mol |
| தோற்றம் | Off-white powder |
| மணம் | கிட்டத்தட்ட நெடியற்றது |
| அடர்த்தி | 0.936 g/cm3 |
| உருகுநிலை | 71.5 °C (160.7 °F; 344.6 K) |
| soluble | |
| தீங்குகள் | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
வெள்ளி நான்மபுளூரோபோரேட்டு (Silver tetrafluoroborate ) என்பது ஒரு கனிம சேர்மமாகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு AgBF4 ஆகும். வெண்மையான திடப்பொருளான இது கரிம முனைவு கரைப்பான்களிலும் நீரிலும் கரைகிறது. திடநிலையில் உள்ளபோது Ag+ மையங்கள் புளோரைடு அணுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளன[1]. வெள்ளி டெட்ராபுளோரோபோரேட்டு என்றும் இச்சேர்மத்தை அழைப்பர்.
தயாரிப்பு
[தொகு]போரான் முப்புளோரைடுடன் வெள்ளி ஆக்சைடு பென்சீன் முன்னிலையில் வினை புரியும் போது வெள்ளி நான்மபுளூரோபோரேட்டு உண்டாகிறது.
ஆய்வகப் பயன்கள்
[தொகு]கனிம, கரிமஉலோக வேதியியல் ஆய்வகங்களில் வெள்ளி நான்மபுளூரோபோரேட்டு சில வேளைகளில் பயனுள்ள வினையூக்கியாக பயன்படுகிறது. இருகுளோரோமீத்தேனில் வெள்ளி நான்மபுளூரோபோரேட்டு ஒரு மிதமான ஆக்சிசனேற்றியாக செயல்படுகிறது[2] . வெள்ளி அறுமபுளூரோபொசுபேட்டு போலவே இதுவும் ஆலைடு நேர்மின் அயனிகளை இடமாற்றம் செய்யும். குறைவாக ஒருங்கிணைக்கும் நான்மபுளூரோபோரேட்டு எதிர்மின் அயனிகளாகப் பயன்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Evgeny Goreshnik, Zoran Mazej, "X-ray single crystal structure and vibrational spectra of AgBF4" Solid State Sciences 2005, Volume 7, pp. 1225–1229. எஆசு:10.1016/j.solidstatesciences.2005.06.007
- ↑ N. G. Connelly, W. E. Geiger (1996). "Chemical Redox Agents for Organometallic Chemistry". Chemical Reviews 96 (2): 877–910. doi:10.1021/cr940053x. பப்மெட்:11848774.