பிளாட்டினம் டெட்ராபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிளாட்டினம் டெட்ராபுளோரைடு
PtF4solid.tif
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பிளாட்டினம்(IV) புளோரைடு
இனங்காட்டிகள்
13455-15-7
பப்கெம் 139460
பண்புகள்
F4Pt
வாய்ப்பாட்டு எடை 271.078
தோற்றம் சிவப்பு ஆரஞ்சு திண்மம்
அடர்த்தி 7.08 கி/செ.மீ3 (கணக்கீடு.)
உருகுநிலை
+455.0•10−6 செ.மீ3/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம், oF40
புறவெளித் தொகுதி Fdd2, No. 43
Lattice constant a = 0.9284 நானோமீட்டர், b = 0.959 நானோமீட்டர், c = 0.5712 நானோமீட்டர்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பிளாட்டினம் டெட்ராபுளோரைடு (Platinum tetrafluoride) என்பது PtF4 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிமச் சேர்மம் ஆகும். |திண்ம நிலையில் எண்முக ஒருங்கிணைவு வடிவ பிளாட்டினம்(IV) தோற்றத்தைத் தருகிறது.

தயாரிப்பு[தொகு]

பிளாட்டினம் உலோகத்தை ஐதரசன் புளோரைடு முன்னிலையில் புளோரினேற்றம் செய்து என்றி மோய்சான் முதன்முதலில் இதைத் தயாரித்தார் [1]. பிளாட்டினம் எக்சாபுளோரைடைச் சிதைவடையச் செய்து நவீன முறையில் பிளாட்டினம் டெட்ராபுளோரைடைத் தயாரிக்கிறார்கள் [2].

பண்புகள்[தொகு]

298.15 கெல்வின் வெப்பநிலையில் பிளாட்டினம் டெட்ராபுளோரைடு தனி மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது. இதனுடைய பதங்கமாதல் வெப்பம் 210 கிலோயூல்மோல்−1 ஆகும் [3]. தூளாக்கப்பட்ட நிலையில் பிளாட்டினம் டெட்ராபுளோரைடின் அசல் பகுப்பாய்வு நான்முக மூலக்கூற்று வடிவத்தை பரிந்துரைக்கிறது. ஆனால் பிந்தைய பகுப்பாய்வு முறைகள் பல என்முக வடிவத்தை அடையாளப்படுத்துகின்றன. இவ்வடிவில் ஒவ்வொரு பிளாட்டினத்தின் மீதும் ஆறு புளோரின்களில் நான்கு புளோரின்கள் அடுத்துள்ள பிளாட்டின மையத்துடன் பாலம் அமைக்கின்றன [4].

வினைகள்[தொகு]

நீரில் கரைந்து கரைசலாகக் உள்ள பிளாட்டினம் டெட்ராபுளோரைடு ரைசல் செம்பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. ஆனால் விரைவாக இது சிதைவடைந்து வெப்பத்தை விடுவித்து ஆரஞ்சு நிற பிளாட்டினம் டை ஆக்சைடு ஐதரேட்டு வீழ்படிவாகவும் புளோரோ பிளாட்டினிக் அமிலமாகவும் மாறுகிறது [5]. செஞ்சூட்டு வெப்பநிலைக்குச் சூடுபடுத்தினால் பிளாட்டினம் டெட்ராபுளோரைடு பிளாட்டினம் உலோகமாகவும் புளோரினாகவும் சிதைவடைகிறது. கண்ணாடியுடனான தொடர்புடன் சூடுபடுத்தப்பட்டால் சிலிக்கன் டெட்ராபுளோரைடு வாயு பிளாட்டினம் உலோகத்துடன் உருவாகிறது [5]. செலீனியம் டெட்ராபுளோரைடு மற்றும் புரோமின் டிரைபுளோரைடு ஆகியவற்றுடன் வினைபுரியும்போது கூட்டு விளைபொருட்களைக் கொடுக்கிறது [5]. BF3, PF3, BCl3, மற்றும் PCl3.போன்றவற்றுடன் வினைபுரியும்போது ஆவியாகக்கூடிய படிகக்கூட்டு விளைபொருட்களாகவும் உருவாகிறது [5].

தொடர்புடைய சேர்மங்கள்[தொகு]

புளோரோபிளாட்டினேட்டு உப்புகள் PtF62− அயனிகளைக் கொண்டுள்ளன. H2PtF6 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட புளோரோபிளாட்டினிக் அமிலம் மஞ்சள் நிற படிகங்களாக உருவாகிறது. இது காற்றிலுள்ள நீரை உறிஞ்சிக் கொள்கிறது. அமோனியம், சோடியம், மக்னீசியம், கால்சியம், இசுட்ரோன்சியம் மற்றும் இலந்தனம் புளோரோபிளாட்டினேட்டு உப்புகள் நீரில் கரையக்கூடியனவாக உள்ளன [5]. பொட்டாசியம், ருபீடியம், சீசியம் மற்றும் பேரியம் உப்புகள் நீரில் கரைவதில்லை [5].

மேற்கோள்கள்[தொகு]

  1. Henri Moissan. "Platinum tetrafluoride". Comptes Rendus Hebdomadaires des Séances de l'Académie des Sciences 109: 807–9. 
  2. Slivnik, J. E.; Z̆emva, B.; Druz̆ina, B. (1980). "New syntheses of platinum (IV) and platinum (VI) fluorides". Journal of Fluorine Chemistry 15 (4): 351. doi:10.1016/S0022-1139(00)81471-2. 
  3. Bondarenko, A.A; Korobov, M.V; Mitkin, V.N; Sidorov, L.N (March 1988). "Enthalpy of sublimation of platinum tetrafluoride". The Journal of Chemical Thermodynamics 20 (3): 299–303. doi:10.1016/0021-9614(88)90125-5. 
  4. "Solid State Structures of the Binary Fluorides of the Transition Metals". Advances in Inorganic Chemistry and Radiochemistry. 27. Academic Press. 1983. Section V: Tetrafluorides, pages 97–103. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780080578767. 
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 Derek Harry Lohmann (October 1961). The fluorides of platinum and related compounds (Thesis). University of British Columbia.