சோடியம் பைபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் பைபுளோரைடு
Sodium-bifluoride-xtal-3D-vdW.png
பெயர்கள்
வேறு பெயர்கள்
சோடியம் ஐதரசன் புளோரைடு, எசு,பி,எப்[1] சோடியம் அமில புளோரைடு
இனங்காட்டிகள்
1333-83-1
ChemSpider 35308427
யேமல் -3D படிமங்கள் Image
பண்புகள்
NaHF2
தோற்றம் வெண்மையான திண்மம்
அடர்த்தி 2.08 கி/செ.மீ3
உருகுநிலை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சோடியம் பைபுளோரைடு (Sodium bifluoride) என்பது NaHF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் நேர்மின் அயனியும் (Na+) பைபுளோரைடு எதிர்மின் அயனியும் சேர்ந்து சோடியம் பைபுளோரைடு (HF2−) உருவாகிறது. வெண்மை நிறத்தில் நீரில் கரையக்கூடிய உப்பான இது சூடுபடுத்தினால் சிதைவடைகிறது [2]. சோடியம் பைபுளோரைடு எளிதில் தீப்பற்றாது. காரச் சுவை கொண்ட இச்சேர்மம் நீருறிஞ்சும் தன்மை கொண்டதாகும். இது தொழிற்சாலைகளில் பல்வேறு பயன்களைக் கொண்டுள்ளது [3].

வினைகள்[தொகு]

சோடியம் பைபுளோரைடு ஐதரோபுளோரிக் அமிலமாகவும் சோடியம் புளோரைடாகவும் பிரிகை அடைகிறது.

NaHF2 is in equilibrium with HF + NaF

மின்னாற்பகுப்பின் மூலம் உருவாகும் புளோரின் வாயுவின் (F2) மூலம் இவ்வினையின் தலைகீழ் வினையை நிகழச்செய்து HF நீக்கப்படுகிறது[4]. உப்பு கரையும்போதும் திண்மம் சூடுபடுத்தப்படும்போதும் சமநிலை வெளிபடுத்தப்படுகிறது. மற்ற பைபுளோரைடுகள் போலவே அமிலங்களுடன் வினைபுரியும்போது ஐதரசன் புளோரைடை உருவாக்குகிறது. உதாரணமாக பைசல்பேட்டுடன் இது வினைபுரிந்து சோடியம் சல்பேட்டையும் ஐதரசன் புளோரைடையும் கொடுக்கிறது.

வலிமையான காரங்கள் பைபுளோரைடை புரோட்டானேற்ற நீக்கம் செய்கின்றன.கால்சியம் ஐதராக்சைடு கால்சியம் புளோரைடைக் கொடுத்தல் இதற்கான உதாரணமாகும். [5].

தயாரிப்பு[தொகு]

சூப்பர்பாசுப்பேட்டு உரங்களை உற்பத்தி செய்யும்போது கழிவாகக் கிடைக்கும் ஐதரசன் புளோரைடை நடுநிலையாக்கம் செய்யும்போது சோடியம் பைபுளோரைடு கிடைக்கிறது. சோடியம் கார்பனேட்டும் சோடியம் ஐதராக்சைடும் இவ்வினைக்கான குறிப்பிடத்தகுந்த காரங்களாகும். இரண்டு படிநிலைகளில் இவ்வினை நிகழ்கிறது :[4]

HF + NaOH → NaF + H2O
HF + NaF → NaHF2.

தண்ணீர் அல்லது ஈரக்காற்றுடன் சோடியம் பைபுளோரைடு வினைபுரிந்து ஐதரோபுளோரிக் அமிலம் உருவாகிறது. மேலும் வாயுநிலைக்கு சூடாக்கும்போதும் இது ஐதரோபுளோரிக் அமிலத்தையும் ஐதரசன் வாயுவையும் கொடுக்கிறது. வலிமையான அமிலங்கள், வலிமையான காரங்கள், உலோகம், தண்ணீர் அல்லது கண்ணாடி ஆகியவற்றுடன் தொடர்பு ஏற்படும்போது இது சிதைவடைகிறது [3]. குரோமைல் குளோரைடு, நைட்ரிக் அமிலம், சிவப்பு பாசுபரசு, சோடியம் பெராக்சைடு, டையீத்தைல் சல்பாக்சைடு மற்றும் டையெத்தில் துத்தநாகம் ஆகியவற்றுடன் தீவிரமான வினையையும் இது வெளிப்படுத்துகிறது.

பயன்கள்[தொகு]

 • மில்லியன் கணக்கில் உற்பத்தி செய்யப்படும் சோடியம் புளோரைடு தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக இருப்பது சோடியம் பைபுளோரைடின் முக்கியப் பயன்பாடு ஆகும்[4]
 • செங்கற்கள், கற்கள், பீங்கான் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் ஆகியனவற்றைத் தூய்மைப்படுத்த சோடியம் பைபுளோரைடு பயன்படுத்தப்படுகிறது.
 • கண்ணாடிப் பதிவுகள் மேற்கொள்வதற்கும் இதைப் பயன்படுத்துகிறார்கள் [3].
 • வேதித் தொழிற்சாலைகளில் சோடியம் பைபுளோரைடு பெரிதும் பயன்படுகிறது [6].
 • துத்தநாக முலாம் பூச்சுகளிலும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதிலும் சோடியம் பைபுளோரைடு பயன்படுத்தப்படுகிறது [7]
 • சலவைத் தொழிலிலும் சோடியம் பைபுளோரைடு அலசுதலில் பயன்படுத்தப்படுகிறது [4].

மேற்கோள்கள்[தொகு]

 1. Product Safety Summary (PDF), June 17, 2013 அன்று பார்க்கப்பட்டது[தொடர்பிழந்த இணைப்பு]
 2. Perry, Dale L.; Handbook of Inorganic Compounds; CRC Press (2011); page 381; [1]
 3. 3.0 3.1 3.2 Product Safety Data Sheet (PDF), June 17, 2013 அன்று பார்க்கப்பட்டது[தொடர்பிழந்த இணைப்பு]
 4. 4.0 4.1 4.2 4.3 Aigueperse, Jean; Mollard, Paul; Devilliers, Didier; Chemla, Marius; Faron, Robert; Romano, Renée; Cuer, Jean Pierre (2005), "Fluorine Compounds, Inorganic", in Ullmann (ed.), Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a11_307
 5. Sodium Bifluoride NaHF2, June 28, 2013 அன்று பார்க்கப்பட்டது
 6. http://www.solvaychemicals.us/SiteCollectionDocuments/sds/P19043-USA.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
 7. Sodium Bifluoride, October 14, 2010, ஆகஸ்ட் 9, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது, June 26, 2013 அன்று பார்க்கப்பட்டது
 8. Sodium Bifluorite, Solid, 2012, June 26, 2013 அன்று பார்க்கப்பட்டது
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_பைபுளோரைடு&oldid=3402670" இருந்து மீள்விக்கப்பட்டது