செருமேனியம் நான்குபுளோரைடு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்s
செருமேனியம் டெட்ராபுளொரைடு
டெட்ராபுளொரோசெருமேன் டெட்ராபுளோரிடோசெருமேனியம் | |
| வேறு பெயர்கள்
செருமேனியம்(IV) புளோரைடு
செருமேனியம் புளோரைடு | |
| இனங்காட்டிகள் | |
| 7783-58-6 | |
| ChemSpider | 11282354 |
| EC number | 232-011-3 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 82215 |
| |
| பண்புகள் | |
| GeF4 | |
| வாய்ப்பாட்டு எடை | 148.634 கி/மோல் |
| தோற்றம் | நிறமற்ற வாயு |
| அடர்த்தி | 6.074 கி/லி (வாயு), 2.46 கி/மி.லி (திரவம்)[1] |
| உருகுநிலை | −15 °C (5 °F; 258 K) at 4 bar |
| கொதிநிலை | −36.5 °C (−33.7 °F; 236.7 K) sublimates |
| கட்டமைப்பு | |
| மூலக்கூறு வடிவம் | |
| வெப்பவேதியியல் | |
| Std enthalpy of formation ΔfH |
-8.008 கியூ/கி |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | செருமேனியம் நான்குகுளோரைடு செருமேனியம் நான்குபுரோமைடு செருமேனியம் நான்கையோடைடு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | கார்பன் நான்குபுளோரைடு சிலிக்கன் நான்குபுளோரைடு வெள்ளீயம் நான்குபுளோரைடு ஈயம் நான்குபுளோரைடு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
செருமேனியம் நான்குபுளோரைடு (Germanium tetrafluoride) என்பது GeF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட செருமேனியம் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
தயாரிப்பு முறைகள்
[தொகு]நிறமற்ற வாயுவான இதை செருமேனியம் ஈராக்சைடுடன் (GeO2) ஐதரோ புளோரிக் அமிலம் (HF) சேர்த்து வினைபுரியச் செய்து அல்லது செருமேனியத்துடன் புளோரின் சேர்த்து வினைபுரியச் செய்து தயாரிக்கலாம்.
Ge + 2 F2 → GeF4
Ba[GeF6] என்ற அணைவு உப்பு வெப்பச்சிதைவுக்கு உட்படும்போதும் செருமேனியம் நான்குபுளோரைடு உருவாகிறது.[2]
Ba(GeF6) → GeF4 + BaF2
பண்புகள்
[தொகு]செருமேனியம் நான்குபுளோரைடு எளிதில் தீப்பற்றாமல் பூண்டு மணத்துடன் நன்றாக புகையக்கூடிய ஒரு வாயுவாகும். தண்ணீருடன் வினைபுரிந்து ஐதரோ புளோரிக் அமிலம் மற்றும் செருமேனியம் ஈராக்சைடு ஆகியனவற்றை உருவாக்குகிறது.1000 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் மூலக்கூற்றுச் சிதைவுறுதல் நிகழ்கிறது.[3]
பயன்கள்
[தொகு]இருசிலேனுடன் செருமேனியம் நான்குபுளோரைடைச் சேர்த்து சிலிக்கந்செருமேனியம் (SiGe) சேர்மத்தை தொகுப்பு முறையில் தயாரிக்கலாம் [1]
செருமேனியம் நான்குபுளோரைடுடன் தூளாக்கப்பட்ட செருமேனியத்தைச் சேர்த்து 150-300 பாகை செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்துவதால் [4] செருமேனியம் இருபுளோரைடைத் தயாரிக்கமுடியும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Germanium(IV) fluoride பரணிடப்பட்டது 2020-05-28 at the வந்தவழி இயந்திரம். sigmaaldrich.com
- ↑ Georg Brauer: Handbuch der Präparativen Anorganischen Chemie
- ↑ Germaniumtetrafluorid பரணிடப்பட்டது 2017-12-31 at the வந்தவழி இயந்திரம். IFA Database
- ↑ Greenwood, N. N.; Earnshaw, A. (1998). Chemistry of the Elements (second edition). Butterworth Heinemann. pp. 376–377. ISBN 0-7506-3365-4.