செருமேனியம் அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செருமேனியம் அயோடைடு (Germanium iodide) என்பது செருமானியமும் அயோடினும் சேர்ந்து உருவாகும் வேதிச்சேர்மம் ஆகும். இத்தகைய வேதிச் சேர்மங்கள் இரண்டு காணப்படுகின்றன. மற்றும் செருமேனியம்(IV) அயோடைடு என்பன இவ்விரண்டு அயோடைடுகளாகும்[1]. செருமேனியம்(II) அயோடைடு ஒரு படிகத் திண்மம் ஆகும். உருகும்போது இது சிதைவடைகிறது. செருமேனியம் அயோடைடின் தன்னீர்ப்பு அடர்த்தி 5.37 ஆகும். வெற்றிடத்தில் 240 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது பதங்கமாகிறது.

செருமானியம்(IV) அயோடைடும் ஒரு படிகத் திண்மமாகக் காணப்படுகிறது. 144 ° செல்சியசு வெப்பநிலையில் உருகுகிறது. 440 ° செல்சியசு வெப்பநிலையை கொதிநிலையாகக் கொண்டுள்ளது. மேலும் இதனுடைய தன்னீர்ப்பு அடர்த்தி 4.32 ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lide, D. R., தொகுப்பாசிரியர் (2005). CRC Handbook of Chemistry and Physics (86th ). Boca Raton (FL): CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8493-0486-5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செருமேனியம்_அயோடைடு&oldid=2169692" இருந்து மீள்விக்கப்பட்டது